பின்பற்றுபவர்கள்

புதன், 24 மார்ச், 2021

காற்றோடு வந்ததற்கு நேற்றோடு ஓராண்டு!

மகிழ்வதா- இகழ்வதா?

நண்பர்களே,

பாதிக்கப்பட்டவர் இரும்புவதாலோ தும்முவதாலோ அவருக்கு மிகவும் அருகில் இருப்பவருக்கு பரவி, அவர் மூலம் அவர் தொட்ட பொருட்களில் ஒட்டிக்கொண்டு அதை தொடுபவருக்கு தொற்று ஏற்பட்டு தனது நீட்சியை விஸ்தாரன படுத்திகொண்டு தமது ஆட்சியை ஸ்திரப்படுத்திக்கொண்டிருக்கும் இந்த கொரானாவினால் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதன் நிறைவு நேற்றோடு ஓராண்டு இங்கே இங்கிலாந்தில்.

அதே போன்று  என்போன்றோர் வீட்டிலிருந்தே வேலை செய்ய ஆரம்பித்து நேற்றோடு  ஓராண்டு நிறைவை அடைகிறது.

கடந்த ஆண்டு மார்ச் மதம் 23 ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பொது மு டக்கத்திலிருந்து நேற்று வரை இந்த கொடிய நோய்  கிருமி தாக்கத்தால் உயிரிழந்த பல லட்சம் மக்களை நினைவு கூறும் வகையில் நேற்று நண்பகல் 12 மணிக்கு ஒரு நிமிடம் தேசமே  மவுன  அஞ்சலி செலுத்தியது.

மேலும்  இங்கிலாந்து, வேல்ஸ்  மற்றும் ஸ்காட்லாந்த்து நாடுகளின் பிரதானமான - அடையாள  கட்டிடங்கள் (London eye) ஸ்காட்லாந்தின் பாராளுமன்ற கட்டிடங்களை மஞ்சள் விளக்குகளால் ஒளியூட்டி தங்களின் வருத்தத்தையும் அனுதாபங்களையும்  , உறவை இழந்த மக்களின் குடும்பங்களுக்கு ஆறுதலாகவும் இறந்தவர்களின் ஆன்ம சமாதானத்திற்காகவும்  தெரிவிக்கப்பட்டது.

அதே போல பொது மக்களும் தங்கள் வீட்டு வாசலில் நின்று தங்கள் கரங்களில் மெழுகு வர்த்திகளையும் டார்ச் விளக்குகளையும் கைபேசி விளக்குகளையும் ஒளிர செய்து தங்கள் அஞ்சலியை செலுத்தினர்.

இன்னும் எத்தனை காலம் இந்த சூழல் நிலவும் என்ற உறுதியான தகவலை யாருமே அறியாத  இந்த காலகட்டங்களில் மக்கள் இன்னும் அதிக விழிப்புடனும் கவனத்துடனும் இருக்க வேண்டுமென்பதே இந்த "தேசிய பிரதிபலிப்பு நாளின்" - National Day of Reflection- ன்  பிரதான செய்தியாக  மக்கள் கருதவேண்டும்.

இது இங்கிலாந்திற்கு மட்டுமல்ல , உலக நாடுகள் அத்தனைக்கும் ஏற்புடைய செய்தியாகவே நான் கருதுகிறேன்.

கடந்த ஆண்டு நம்முடன் இருந்த நம்மவர்கள் பலர் இந்த ஆண்டு நம்முடன் இல்லை எனும் நினைவு நம் மனதில் இருந்தாகவேண்டும் இருக்கும் நம்மையும் நம்மவர்களையும் காத்துக்கொள்ள.

தடுப்பூசிகள்  வந்துவிட்டாலும் ,தடுப்பூசிகள் போட்டுக்கொண்டாலும் விழிப்புடனும் கவனத்துடனும் செயல்படுவது மிக மிக இன்றியமையாதது.

காலில்  செருப்பு அணிந்திருக்கிறோம் என்பதற்காக தெரிந்தே  சேற்றில் கால்வைக்க மாட்டோம் அதுபோல தடுப்பூசி போட்டுக்கொண்டதாலேயே முக கவசமும் உரிய சுகாதார முன்னெச்சரிக்கை இல்லாமலும் அலட்சியமாக இருந்துவிடக்கூடாது.

நன்றி,

மீண்டும் ச(சி)ந்திப்போம் 

கோ.



14 கருத்துகள்:

  1. கடந்த வருடத்தில் இதே நாளில்தான் நானும் என் மனைவியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 2 மாதம் வீட்டிலே தனிமைப்படுத்திக் கொண்டு மீண்டு வந்தோம் என்பதை நினைத்து பார்த்தால் ஆச்சிரியமாகவே இருக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நினைக்கும்போதே பகீரென்று இருக்கின்றது , அனுபவித்தவர்களுக்கே அதன் வீரியம் தெரியும். நல்ல படியாக குணமடைந்தது ஓராண்டும் ஓடிப்போனது குறித்து மிக்க மகிழ்ச்சி.

      தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் நண்பரே.

      நீக்கு
  2. //காலில் செருப்பு அணிந்திருக்கிறோம் என்பதற்காக தெரிந்தே சேற்றில் கால்வைக்க மாட்டோம் அதுபோல// நல்லதொரு எடுத்துக் காட்டு.

    நலமே விளையட்டும். அதுவே இப்போதைய தேவை - எல்லா மக்களுக்கும், எல்லா நாடுகளுக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு மிக்க நன்றி வெங்கட், நலம் வேண்டி பிரார்த்தனை செய்வதும் , முடிந்தவரை பாதுகாப்பாக இருக்க முயல்வதுவே நம்மையும் உலகோரையும் காக்கும் வழிகள்.

      நீக்கு
  3. விழிப்புணர்வு இன்னும் அதிகம் தேவை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் தனபால், இன்னும் உணராதவர்கள் ஏராளம் உலகளாவிய வகையில்.
      வருகைக்கு மிக்க நன்றிகள்.

      நீக்கு
  4. ஒருவருட நினைவுகூரல் இந்தியாவில் நடந்ததா என்று தெரியவில்லை.  இன்னும் எத்தனை நாட்கள் இப்படிக் கழியும் என்றும் கவலை.

    பதிலளிநீக்கு
  5. எல்லோரின் கவலையும் அதுதான், என்று த(பணி)னியும் இந்த ...
    வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றிகள் திரு ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  6. தடுப்பூசி போட்டுக் கொண்டாலும் விழிப்புணர்வோடு இருப்பதுதான் நல்லது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒருசிலர் தடுப்பூசியை குறித்த முழுமையான புரிதல் இல்லாததால் தடுப்பூசி போட்டுக்கொண்டதாலேயே நமக்கு தொற்று வராது என நினைத்து உலாசமாக்க பாதுகாப்பின்றி சுற்றுவது வருத்தம் அளிக்கின்றது.
      வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றிகள் திரு கரந்தையாரே.

      நீக்கு
  7. கவனம் மிகமுக்கியமானது!கிருமி இன்னும் ஒழியவில்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த கிருமி முற்றுமாக ஒழியும் நாள் என்று என்பது பெருங்கேள்விக்குறியாக இருக்கும் இந்த சமயத்தில் பாதுகாப்பு மிகவும் அவசியமே.
      வருகைக்கு மிக்க நன்றிகள் நண்பரே.

      நீக்கு
  8. இங்கு தமிழ்நாட்டில் கொரானாவால் பாதிக்கப்படுபவர்கள் மிகவும் குறைவு 7 கோடி மக்கள் தொகையில் தினமும் இப்பொழுதுதான் 1200 என்ற அளவில் உள்ளது அதிலும் இறப்பவர்கள் பத்து நபர்கள் மட்டுமே ஆகையால் இங்கு யாரும் கொரானாபற்றி கவலைப்படுவதில்லை அரசாங்கம் மட்டுமின்றிபொதுமக்களும் தான்

    பதிலளிநீக்கு
  9. தமிழகத்தில் தொற்றும் அதன் பாதிப்பும் குறைந்து வருவது மகிழ்ச்சி அளிக்கின்றது எனினும் கணக்கெடுப்பு சரியா என சரிபார்க்க வாய்ப்பிருக்கிறதா? தற்போதுள்ள சூழலில், பொது கூட்டம், பேரணி, ஊர்வலம் போன்று பங்குபெறுபவர்கள், சமூக இடைவெளி என்பதையும், முக கவசம் என்பதையும் மறந்துபோனதாகவே தெரிகிறது.

    இங்கே அரசு எச்சரிக்கையையும் மீறி வெளி நாடு பயணம் செய்பவர்களுக்கு £5,000.00(5 லட்சம் ரூபாய்) அபராதம்.
    வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றிகள் நரசிம்மன்.

    பதிலளிநீக்கு