அபி-நயம்!!
நண்பர்களே,
சில பழக்க வழக்கங்கள் பலவேளைகளில் நல்லவை அல்ல என்று தெரிந்தும் அவற்றை நாம் சிலாகித்து ரசிப்பதுண்டு.
உதாரணத்திற்கு, புகை பிடிப்பது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என தெரிந்தும் , ஒரு சிலர் அந்த சிகரெட்டை பிடித்து ஸ்டைலாக புகை விடுவதை பார்க்க மனதில் ஒரு சந்தோஷம் பெருகும்.
அதிலும் அந்த சிகரெட்டை தூக்கிப்போட்டு வாயில் லாவகமாக பிடித்து காட்டியதை யார் தான் ரசிக்கவில்லை.
அதேபோல நமக்கு வேண்டாதவர் எதிரில் வந்தால் சம்பிரதாயத்திற்கேனும் அவர்களுக்கு வணக்கம் சொல்லுவதுகூட நம் மனதிற்கு பிடிக்காத ஒன்றுதான், என்றாலும் நம் செய்கை மற்றவர் கண்களுக்கு நலமாக தெரியும்.
அளவிற்கு அதிகமாக சாப்பிடுவது கூடாது என்று தெரிந்தும் , இன்னும் கொஞ்சம் சாப்பிடுங்கள்.." என்று உபசரிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது.
அதேபோல காபி , தேநீர் போன்றவைகூட உடல் நலத்திற்கு ஆபத்தானவை என்று தெரிந்தும், வீட்டிற்கு வந்தவர்களிடம், என்ன சாப்பிடுகின்றீர்கள், டீயா, காப்பியா என கேட்டு பரிமாறுவதும் , ரசித்தும் ருசித்தும் பருகுவதும் அன்றாட சாதாரணம்தான்.
இப்படி கேடுவிளைவிக்கும் டீ காபியைக்கூட பரிமாறுபவர்களையும் உபசரிப்பின் தன்மையையும் கருதி அவற்றை வரவேற்பதும் கொண்டாடுவதும் வாடிக்கையாகிப்போய்விட்டது.
ஜென்ம விரோதிகள், பரம்பரை பகையாளிகள், பங்காளி சண்டைகளால் பிரிந்த உறவுகள்,சொத்து தகராறில் குரோதத்தை வளர்த்துக்கொண்டவர்கள் வயல் வரப்பு சண்டைகளால் உறவை அறுத்துக்கொண்டவர்கள், கொடுக்கல் வாங்கலில் மன வருத்தம் அடைந்தவர்கள் யாரும் ஒருவர் வீட்டில் ஒருவர் கை நனைப்பது என்பது அருவருக்கத்தக்க கவுரவ குறைச்சலாக கருதப்படுகிறது.
அப்படி யாரேனும் ஒருவேளை அடுத்தவர் வீட்டு படியேற நேர்ந்தால் அது பெருத்த அவமானமாக கருதப்படுகிறது.
இப்படி கவுரவத்துக்கு இழுக்கு உடலாரோக்கியத்திற்கு தீங்கு என்று கருதப்படும் எந்த செயலானாலும், செய்பவரையும், செய்யப்படும் சூழ் நிலையையையும் , யாரோடு அல்லது யார் முன்னிலையில் செய்யப்பட்டது என்பதை பொறுத்து அந்த செயல் கவுரவ படுத்தப்படுவதோடு உலகோரின் பார்வையையும் பாராட்டையும் வெகுவாக பெரும் செயலாக அமைந்து விடுகிறது.
அவ்வகையில் சமீபத்தில் தமது தேசத்தின் இறையாண்மையையையும் , பேராண்மையையும் நிரூபிக்கும் வகையில் , தமது சாதுர்யத்தால் எதிரி நாட்டு ராணுவ விமானத்தை சுட்டு வீழ்த்திவிட்டு, அதே சமயத்தில் கட்டுப்பாட்டை இழந்த தமது விமானத்திலிருந்து குதித்து, அந்நிய தேசத்து மண்ணில் , அவர்தம் ராணுவ கட்டுப்பாட்டிற்குள் சிக்கி கைதியாக நின்றபோதும், மனம் தளராமல், நிலை குலையாமல் தமது நயமான சாதூரிய பேச்சாலும், வீரத்தாலும், சமயோசித விவேகத்தாலும் தேச பக்தியையும் தன் கடமை உணர்வையும் நிலை நாட்டிய அந்த மாவீரன் நம் விமானப்படை விங் கமாண்டர் - பைலட் - ஆற்றல் மிகு அபி, அவர் கையில் எதிரி நாட்டின் தேநீர் கோப்பை.
எதிரியின் முன்னால் பதட்டத்தின் சாயலோ மிரட்சியின் சாயலோ ஏதுமின்றி சர்வ சாதாரணமாக நின்றுகொண்டு, சூடான தேநீரை மிக மிக கூலாக குடித்துக்கொண்டே கேட்ட கேள்விகளுக்கு (அபி)நயமாக பதிலுரைத்த அந்த அஞ்சா நெஞ்சன் பருகிய அந்த "கூல் சாய்க்கு" இந்த பதிவு வீர வணக்கத்துடன் சமர்ப்பணம்.
நன்றி,
மீண்டும் ச(சி)ந்திப்போம்,
கோ.
எதிரியின் முன்னால் பதட்டத்தின் சாயலோ மிரட்சியின் சாயலோ ஏதுமின்றி சர்வ சாதாரணமாக நின்றுகொண்டு, சூடான தேநீரை மிக மிக கூலாக குடித்துக்கொண்டே கேட்ட கேள்விகளுக்கு (அபி)நயமாக பதிலுரைத்த அந்த அஞ்சா நெஞ்சன் பருகிய அந்த "கூல் சாய்க்கு" இந்த பதிவு வீர வணக்கத்துடன் சமர்ப்பணம்.//
பதிலளிநீக்குஅட்டகாசம்! ஆமாம் தலைப்பைப் பார்த்ததும் தெரிந்டு விட்டுஅது கூல் சாய் என்று போட்டாலும் அபி-நயம் என்ற சொல்லே சொல்லிவிட்டது இது அபிநந்தன் குறித்த பதிவு என்று..
என்ன தைரியம் இல்லையா? இவர்தான் நிஜ ஹூரோ. இன்று கில்லர்ஜியும் அபி பதிவுதான். இப்போது எல்லோருக்கும் இவர் ஹூரோ செல்லப் பிள்ளையாகிவிட்டார்!!
இவரை நினைத்தாலே மனம் சிலிர்த்து புளகாங்கிதம் அடைகிறது.
வீர வணக்கங்கள்!
துளசிதரன், கீதா
அன்பிற்கினிய நண்பர்களே,
நீக்குஅபி நயம் என்ற வார்த்தை உங்களுக்கு ஒரு க்ளூ வாக அமைந்ததும் பதிவு எதைபற்றி என்பதை யூகித்ததையும் நீங்கள் எப்பேர்ப்பட்ட ஆட்கள் என்பதை புலப்படுத்துகிறது அதானே... நீங்க யாரு?...
வருகையும் உங்களின் தேச பக்தியும் பாராட்டுக்குரியது.
நன்றிகள்.
கோ
அவரைக் குறித்த வீடியோக்கள் எல்லாம் அன்று மனதை பதைபதைக்க வைத்தது. மீண்டு வர வேண்டும் என்று..
பதிலளிநீக்குஇறுதியில் அவர் மீண்டு வந்தது மனதிற்கு மிக மகிழ்ச்சியைக் கொடுத்தது...
கீதா
அன்பிற்கினிய நண்பர்களே,
நீக்குஉங்கள் பதைபதிப்பிற்கும் வேண்டுதலுக்கு பலன் கிடைத்தை எண்ணி மகிழ்கிறேன்.
வருகைக்கு நன்றிகள்.
கோ
அந்தப் புகைப்படத்தினை நானும் ரசித்தேன். வீடியோ பதிவில் அவர் பேசிய விதம் (உடல் மொழி) அருமை.
பதிலளிநீக்குஆம் ஐயா, என்ன ஒரு கம்பீரம்.
நீக்குஐயாவின் வருகைக்கு நன்றிகள்.
கோ.
வீர வணக்கம் - என் சார்பிலும்...
பதிலளிநீக்குபதிவினூடே வீர வணக்கம் செலுத்தியமைக்கு நன்றிகள் வெங்கட்.
நீக்குகோ
சல்யூட்
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குஉங்களுக்கும் - வருகைக்கு.
கோ.