சரிதானோ?
நண்பர்களே,
இரண்டு நாட்களுக்கு முன்பு செய்தி தாளில் இருவேறு செய்திகளோடு வந்த புகை படங்கள் இருவேறு பக்கங்களில், ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத செய்திகளை உள்ளடக்கியதாக இருந்தாலும் அவற்றை காணும்போது எனக்கு சட்டென்று ஒரு பிரபலம் நினைவிற்கு வந்தார்.
முன்னேற்பாடு இல்லாமல் குதிரை பந்தயத்தை பார்த்துக்கொண்டிருந்த பெண்கள் திடீரென வந்த மழையிலிருந்து தங்களை காத்துக்கொள்ள கையிலிருந்த துணியை கொண்டு தங்களை மூடிக்கொள்கின்றனர். இது பத்தொன்பதாவது பக்க செய்தி படம்.
உணவு தேடி காட்டில் அலைந்துகொண்டிருக்கும் ஒரு குரங்கு திடீரென வந்த மழையிலிருந்து தன்னை காத்துக்கொள்ள அருகிலிருந்த தாவரத்தின் இலையை பறித்து குடையாக பயன்படுத்துகிறது. இது இருபத்தி ஏழாம் பக்கத்தில் வந்த செய்தி படம்
மண்ணில் இருந்து மனிதன் வந்தான் மனிதனிலிருந்து மனுஷி வந்தாள் என்று நிலைநாட்டப்பட்ட தத்துவங்களை தலைமேல் சுமந்து அந்த நம்பிக்கைகளை மத நம்பிக்கையுடன் இணைத்து பிணைத்து பிரகடனப்படுத்தியும் பிரபல படுத்தியும்கொண்டிருந்த மேலை நாடுகள் பல.
அவற்றுள் ஒன்றான இங்கிலாந்தில் தனது அறிவியல் ஆய்வின் முடிவுகளான ஒரு செல் உயிரிலிருந்து மனிதனாக பரிணாமம் அடைவதற்கு முந்தின நிலை குரங்கு என சாசனம் எழுதி வைத்தவர் - பரிணாம அறிவியல் மேதை சார்லஸ் ராபர்ட் டார்வின்தான் என் நினைவில் வந்தவர்.
இந்த இரண்டு காட்சிகளையும் பார்க்கும்போது.... அவர் சொல்றதும் சரிதானோ... என தோன்றுகின்றது.
யார் சொல்றதை நம்புவது என்று ஒன்றுமே வி(ல)ளங்கவில்லை
என்ன நான் சொல்றதும் சரிதானே?
நன்றி.
மீண்டும் ச(சி)ந்திப்போம்
கோ.
குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்! :) விள[ல]ங்காத விஷயம் தான்!
பதிலளிநீக்குவருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றிகள் வெங்கட்.
நீக்குகோ
டார்வினின் தியரி சரிதானே...! பாருங்க நம்மவர் செய்வதைத்தான் நாமும் செய்கிறோம்..!!!
பதிலளிநீக்குதுளசிதரன், கீதா
கீதா: நம்மவர் படத்தைதான் நான் ரொம்ப ரசித்தேன்!!! என்ன அழகாக உட்கார்ந்திருக்கிறார் பாருங்கள் புத்திசாலித்தனமானவர்!
அன்பிற்கினிய நண்பர்களே,
நீக்குஎதோ இந்த பதிவின் முலம் தங்களின் முன்னோர்களை நினைவு படித்து தங்களை மகிழ்சிக்குள்ளாக்கியதை நினைத்து மகிழ்கின்றேன்.
புகைப்படத்தில், அச்சு அசலாக தங்களின் சாயல் எங்கேனும் தெரிந்திருக்கும் , அதனால் தானோ என்னவோ இத்தனை சந்தோஷம் உங்களுக்கு என நினைக்கின்றேன்.(எந்த புகைப்படத்தில்??!!)
கோ.
பொருத்தம் எதேச்சையாக, சிறப்பாக அமைந்துவிட்டது போலுள்ளது.
பதிலளிநீக்குவருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றிகள்.
நீக்குகோ
குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்று டார்வின் எந்த இடத்திலும் சொல்லவில்லை ... குரங்கிற்கும் மனிதனுக்கும் ஒரே முன்னோர்கள் என்றுதான் சொல்லிருக்கிறார்...(அந்த முன்னோர் இனம் தற்போது இல்லை ... டைனோசரை போல அதுவும் அழிந்து போய்விட்டது.) அதாவது ஒரு மரத்திலிருந்து பிரியும் இரு கிளைகளைப் போல ஒரு இன முதாதையர்களிடமிருந்து பிறந்த இரு குட்டிகளில் ஒன்று குரங்காக வாழ்க்கையை தொடங்கியது மற்றொன்று மனிதனாக வாழ்க்கையை தொடங்கியது அவ்வளவே.... ஒரே பெற்றோர்களுக்கு ஒருகுழந்தை நெட்டையாகவும் மற்றொரு குழந்தை குட்டையாகவும் பிறக்கிறதல்லவா அதுபோலத்தான் இதுவும் ... ஒன்று குரங்கு மற்றொன்று மனிதன்...
பதிலளிநீக்குhttps://www.scientificjudgment.com/
judgement sustained, thanks for coming.
பதிலளிநீக்குஅய்யா நலம் தானே
பதிலளிநீக்குபதிவு எங்க போச்சு? பதிவு எங்க போச்சு?
பதிலளிநீக்குநீங்க பதிவு போட்டிருக்குரீங்கனு தெரிஞ்சதுமே வாசிக்கலாம்னு ஓடோடி வந்தா
பதிவை நீக்க்லஆமாஆஅ சார்.