ஆதாமின் ஜாதகம்!
நண்பர்களே,
முன் பதிவை வாசிக்க... சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்!!-2
பார்த்த சாரதியை தொடர்ந்து மேடைக்கு அழைக்கப்பட்டவர், முருகன்.
முன் பதிவில் சொன்னதுபோல், முருகன் நன்றாக பாடக்கூடியவர், இந்த ஆண்டு நடைபெற்ற பாட்டுபோட்டியில் கலந்துகொள்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டவர், எதிர்பாரா சூழ்நிலையால் அவர் கலந்துகொள்ளவில்லை.
சரி, இப்போது மேடையில் முருகன்.
விட்டதை பிடிக்க இப்போது பாடுவாரோ என கூட்டத்தினர் நினைக்க....
விட்டதை பிடிக்க இப்போது பாடுவாரோ என கூட்டத்தினர் நினைக்க....
அனைவருக்கும் வணக்கம் , என் பெயர் முருகன், நான் எங்கள் வீட்டில் இரண்டாவதுமகன், என் தந்தையார் பெயர் காளியப்பன்,என் தாயார் பெயர் மீனாட்சி, எங்கள் தந்தையார் அவரின் பெற்றோருக்கு மூன்றாவது மகன், என் தாயார் அவரது பெற்றோருக்கு ஒரே மகள்.
என் தந்தையாரின் தகப்பனார் பெயர் சிவானந்தம் , என் தந்தையாரின் தாயார் பெயர் துளசி.
என் தந்தை காளியப்பனின் தகப்பனார் சிவானந்தன் , அவரின் பெற்றோருக்கு எட்டாவது மகன், என் தாத்தா சிவனந்தத்தின் மனைவி பெயர் வள்ளியம்மாள் , என் தாத்தா சிவானந்தனின் தகப்பனார் பெயர் ..... இப்படியாக கொடுக்கப்பட்ட ஆறு நிமிடங்களை தொய்வின்றி அதே சமயத்தில் தடுமாற்றமின்றி தனது வம்ச வரலாற்றை சொல்லி முடிக்க கைத்தட்டலுக்களின் ஆரவாரத்தோடு மேடைவிட்டு இறங்கினார் தன் சர்ஜரியை வெற்றியுடன் முடித்த மகிழ்வுடன், கேட்டவர்கள் காதுகளில் ரத்தம் கசிய.
முருகன் முடித்ததும் அடுத்த போட்டியாளரை அழைக்கும் முன் நடுவர்களில் ஒருவர் சொன்ன கமெண்ட் அரங்கை சிரிப்பலையில் மூழ்கடித்தது.
"முருகனுக்கு இன்னும் ஆறு நிமிடங்கள் கொடுத்திருந்தால் ஆதாம் ஏவாள் வரை நம்மை அழைத்து சென்றிருப்பார்."
இப்படி நடுவர்களே சிலாகித்து சொன்னதும், எங்களின் கருத்து கணிப்பு இப்போது பார்த்த சாரதியைவிட முருகனின் வெற்றி வாய்ப்பு கூடியதுபோல் ஒரு தோற்றம் அளித்தது.
சிரிப்பலை ஓய்ந்ததும் அடுத்து அழைக்கப்பட்டவர்.... மூன்றாமாண்டு மாணவர் பன்னீர் செல்வம்.
அவரின் சிறப்பு என்ன? அவர் என்ன செய்யப்போகிறார் .. .. நாளைவரை காத்திருந்து பார்ப்போம்.
அதுவரை,
நன்றி,
மீண்டும் ச(சி)ந்திப்போம்.
கோ
"முருகனுக்கு இன்னும் ஆறு நிமிடங்கள் கொடுத்திருந்தால் ஆதாம் ஏவாள் வரை நம்மை அழைத்து சென்றிருப்பார்."//
பதிலளிநீக்குஹா ஹா ஹா ஹா....
பன்னீர் செல்வம் என்ன செய்யப் போகிறார் என்பதை ஆவலுடன் தொடர்கிறோம்...
எங்கள் கெஸ்ஸில் இன்னும் நம்பிக்கை உள்ளது ஹிஹிஹிஹிஹி
துளசிதரன், கீதா
Guessuuuu.... justtu.. missuuuu.
பதிலளிநீக்கு