பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 1 மே, 2016

"வேலை வெட்டி"

நிற்ககூட  நேரமில்லை!!


நண்பர்களே,

நம்மில் யாராவது எந்த வேலைக்கும் போகாமல் இருந்தால் பார்ப்பவர்கள் கேட்பார்கள், வேலைக்கு போகலையா? என்று.


நம்மிடம் கேட்டவர்கள் நம்மை பற்றி அடுத்தவரிடம் சொல்லும்போது அவன் வேலை எதுவும் இல்லாமல் வெட்டியாக இருக்கின்றான் என்று.

ஒரு சிலரோ வேலைக்கு போகாதவரை பார்த்து, என்னப்பா, வேலை வெட்டி எதுவும் இல்லையா என்பார்கள்.

இதில் எனக்கு புரியாத ஒன்று என்னவென்றால், வேலைக்கு போகாமல் இருப்பது வெட்டியாக இருப்பதாக அர்த்தபடுத்தபடுகிறபோது, வேலை வெட்டி ஏதும் இல்லையா? என கேட்பது கொஞ்சம் புரியாமல் தான் இருக்கின்றது.

ஒன்று வேலை செய்வது அல்லது வேலை எதுவும் இல்லாமல் வெட்டியாக  இருப்பது.

ஆனால் ஒன்றுக்கொன்று எதிர்மறையான அர்த்தங்கள் கொண்ட இவை இரண்டையும் சேர்த்து சொல்லும்போது இவை இரண்டுமே நேர்மறையான அர்த்தம் கொண்டவைகளாக பயன்படுத்துவதுதான் என் குழப்பத்திற்கு கரணம்.

சமீபத்தில் ஒரு பதிவாளர் ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தார், தமக்கு வேலை வெட்டி ஏதும் இல்லாததால் நிறைய பதிவுகள் எழுதவும் நிறையபேர்களின் பதிவுகளை உடனுக்குடன் படித்து கருத்திடவும் முடிகின்றது என்று. 

வேலை இல்லாமல் இருப்பதாக சொல்வது ஏற்புடைய கூற்றுதான் ஆனால் வெட்டியும் இல்லை என்று சேர்த்து சொல்வது எப்படி சரியாகும் என தெரியவில்லை.

யாரேனும் வேலை வெட்டி இல்லாதவர்கள் கொஞ்சம் இதை ஆராய்ந்து, ஏதோ வெட்டியாக பதிலளிக்காமல், இது பற்றி கொஞ்சம் ஆராய்வதை வேலையாக எடுத்துகொண்டு தங்கள் ஆய்வின் முடிவை பதிவாக்கி சமர்பித்தார்கள் என்றால், வேலை எது வெட்டி எது என்று வேலை வெட்டி இல்லாமல் இருப்பவர்கள் புரிந்துகொள்ள உதவியாக இருக்கும்.

என்னங்க?  நான் ஏன் இதை செய்யகூடாது என்றா கேட்கின்றீர்கள்?  எனக்கு தலைக்கு மேலே ரொம்ப வெட்டிகள் உள்ளன , நான் ரொம்ப...... பிசி. 

இந்த சமயத்தில் என்னோடு கல்லூரியில் படித்த நண்பர் , கல்லூரி படிப்பு முடிந்து வீட்டில் வெட்டியாய்(??!!) இருந்த காலத்தில், (இப்போது அவர் இந்தியாவில்  தணிக்கையாளராக பணிபுரிகின்றார்) தமது  வீட்டு கதவில் எழுதி வைத்திருந்த  வாசகம் நினைவிற்கு வருகிறது.

அந்த வாசகம்,

"FINDING JOB IS NOT MY PROBLEM; FINDING PROBLEM IS MY JOB"


மேதினியில் உழைக்கும் அனைத்து தொழிலாளர்களுக்கும் இனிய மேதின வாழ்த்துக்கள்.


நன்றி,

 மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ


2 கருத்துகள்:

  1. வணக்கம் அரசே,

    என் ஆய்வின் முடிவினை சமர்ப்பிக்கிறேன் பிறகு. இப்போ கொஞ்சம் வேலை வெட்டி இருக்கு, வருகிறேன்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  2. வேலை இல்லாமல் இருப்பதாக சொல்வது ஏற்புடைய கூற்றுதான் ஆனால் வெட்டியும் இருப்பதாக சேர்த்து சொல்வது எப்படி சரியாகும் என தெரியவில்லை.
    நன்றி.
    கோ

    பதிலளிநீக்கு