பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 10 மே, 2016

"MONEY ஓசை வரும் முன்னே"

 "சின்ன மீன் பெரிய மீன்"!!

நண்பர்களே,

சமீபத்தில் கேட்ட தொலைகாட்சி செய்தியில், இதுவரை, சட்டத்திற்கு புறம்பாக வீடுகளிலும், பண்ணைகளிலும் , குடோன்களிலும் வாகனங்களிலும் பதுக்கி, தேர்தலை முன்னிட்டு, பட்டுவாடா செய்யவும் , தேர்தல் செலவுகளை உச்ச வரம்பிற்கு மீறி ஆடம்பரமாக செலவழிக்கவும் வைக்கபட்டிருந்த பணத்தில் பிடிபட்ட பணம் மட்டும் சுமார் 100 கோடி ரூபாய் என தகவல் சொல்லக்கேட்டு அதிர்ச்சியாக இருந்தது.


பிடிபட்டவை அல்லது பிடிபட்டதாக சொல்லப்பட்ட பணமே இத்தனை கோடிகள் என்றால், பிடிபடாமல், பதுக்கி வைக்கபட்டிருக்கும் பணமும் பிடிபடாமல், மக்களுக்கு விநியோகிக்கபட்டுகொண்டிருக்கும் பணமும் இன்னும்  எத்தனை கோடிகள் என்பதை கற்பனை செய்து பார்த்துகொள்ளலாம்.

Image result for pictures of confiscated indian rupees

இத்தனை கோடிகளை இறைத்து, வரபோகின்ற தேர்தல்களில் வெற்றிபெற துடிக்கும் கட்சிகளும் வேட்பாளர்களும் ஒருவேளை வெற்றிபெற்றால் எத்தனை - எத்தனை  மடங்கு கோடிகளை - மக்கள் பணத்தை  கொள்ளையடிப்பார்கள் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.

கோடிகணக்கில் பணம் செலவு செய்து ஓட்டு கேட்கும் வேட்பாளர்களின் நேர்மையும் , அவர்கள் சார்ந்திருக்கும் கட்சிகளின் மாண்பும் அவர்களது நோக்கமும் என்னவென்று புரிந்துகொண்டு செயல் படுவது நல்லது.

எவன் ஒருவன் பணம் கொடுத்து வாக்கு கேட்கின்றானோ அவனது மக்கள் சேவையும் மக்கள் நல சிந்தனையும் எப்படி இருக்கும் என்பதை தெளிவாக சிந்தித்து செயல் படவேண்டிய ஒரு தருணம் இது.

இன்னும் ஒன்றும் கெட்டுபோகவில்லை, It is not too late, தேர்தல் நாள் இன்னும் இருக்கின்றது.

சின்ன மீன் போட்டு பெரிய மீன் பிடிக்கும் தந்திர குணம் மிக்க இதுபோன்ற அரசியல் தரகர்களிடம் உஷாராக இருக்கவேண்டியது அவசியம்.

சின்ன மீனே இத்தனை கோடிகள்  என்றால் நம்மை வஞ்சக வலையில் சிக்கவைத்து கீழ்த்தரமான முறையில் சம்பாதிக்கபோகும் லாபமென்னும் பெரிய மீனின் மதிப்பு எத்தனை கோடிகளாக இருக்கபோகின்றதோ தெரியவில்லை. (ஆங்கிலத்தில் மீன் - mean  என்றால் கீழ்த்தரம் என்பது ஒரு அர்த்தமுள்ள - "பொருள்")

பணமோ பொருளோ எதுவும் இன்றி ஞாயமான முறையில் வாக்கு கேட்கும் நேர்மையான வேட்பாளரை இனம் கண்டு வாக்களிப்பது நல்லது.

யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே எனும் வழக்கு சொல் மாறி இப்போது தேர்தல் வரும் பின்னே "MONEY"  ஓசை வரும் முன்னே என்பதாக மாறி விட்டது.

தேர்தல் பேச்சும் கூட்டணி செய்திகளும் வேட்பாளர் பட்டியலும் முடிவானதற்கு பிறகு பணத்தின் வருகையும் அதிகரித்து ஊரெங்கும் வியாபித்திருப்பதாக செய்திகள் தினமும் நம் காதுகளை வந்தடையும் இந்த தருணத்தில்,தற்காலிக நிவாரணமாகிய இந்த சின்ன மீன்களை நம்பி நிரந்தரமான நிம்மதியை இழக்காமல், விரிக்கபட்டிருக்கும் பணமென்னும் கபட வலையில் சிக்கிக்கொள்ளாமல் இருப்பதுவும் நம் ஜனநாயக நேர்மையும் கடமையும் ஆகும்.

வாக்குபதிவன்று முடிந்தவரை அனைவரும் வாக்கு சாவடிகளுக்கோ அல்லது தபால் மூலமோ தங்களது வாக்குகளை "பிழை" இன்றி செலுத்துவது மக்கள் எதிர்பார்க்கும் நல்ல மாற்றம் உருவாக வாய்ப்பாக இருக்கும்.

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ

10 கருத்துகள்:

 1. மக்களுக்கு இன்னும் விழிப்புணர்வு வரவில்லை நண்பரே இதனால் சிறு வியாபாரிகளின் பிழைப்பு பாதிக்கப்படுகிறது.

  நேற்று நான் சம்பளம் வாங்கி விட்டு வெளியில் வரும் பொழுது போலீஸ் என்னை மடக்கி விட்டது பிறகு நான் அவருக்கு தேர்தல் இந்தியாவில்தானே அபுதாபியில் இல்லையே என்று விளக்கிய பிறகே அவருக்கு புரிந்தது.

  பதிலளிநீக்கு
 2. அபுதாபி போலீசுமா அப்படி?

  பதிலளிநீக்கு
 3. எவ்வளவு சொன்னாலும் மக்கள் சிந்திப்பதாக தெரியவில்லை இம் முறை பார்போம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மனம் மாறுமோ அல்லது கை மாறும் பணம் மனதை மாற்றுமோ, பொறுத்திருந்துதான் பார்க்கணும்.

   வருகைக்கு மிக்க நன்றி ஐயா.

   கோ

   நீக்கு
 4. மாறும் மாற்றம் வரும் என்று நம்புவோம் அப்படி மக்கள் செய்யவில்லை என்றால் அந்த மக்களை பார்த்து அய்யோ என்று சொல்வதை தவிர வேறு ஏதும் இல்லை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒவ்வொரு முறையும் இப்படி போனால் எப்போதுதான் விடியலோ?

   வருகைக்கு மிக்க நன்றி ஐயா.

   கோ

   நீக்கு
 5. பணமோ பொருளோ எது வாங்கினாலும் மக்கள் அனைவருக்கும் ஓட்டு போடமுடியாதே,,,
  அவர்கள் தவறான வழியில் சேர்த்தது இப்படியாவது செலவு ஆகட்டுமே அரசே,,,,,,,,,

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பேராசிரியருக்கு,

   இதுவரை எவ்வளவு தேறியது?

   அனைவருக்கும் ஒட்டுபோடமுடியாதுதான் போடும் ஒரு ஓட்டையும் - எந்த "ஓட்டையும்" இல்லாமல் சரியாக போட்டால் போதுமே, நாட்டில் இருக்கும் சில "ஓட்டைகளை" அடைக்களாம் "ஒட்டடையும்" அடித்து சுத்தமாக்கலாம்.

   வருகைக்கு நன்றிகள்


   கோ

   நீக்கு
 6. பதில்கள்
  1. ஆம் ஐயா, கடமை உணர்ந்து செயல்படவேண்டிய தருணம் தான் இது.

   வருகைக்கு மிக்க நன்றிகள்.

   கோ

   நீக்கு