பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 6 மே, 2016

"கொல்"வதெல்லாம் உண்மை!!


"வெள்ளை"(யர்) அறிக்கை"

நண்பர்களே,

நான்கு சுவர்களுக்குள்  நடக்கவேண்டிய எத்தனையோ அந்தரங்க - தனி மனித, தனிப்பட்ட குடும்ப விஷயங்களை வெளிச்சம் போட்டு காட்டி அம்பலபடுத்தி அதில் ஆதாயம் காணும் ஊடகங்களில்...
நிரந்தரமாக இடம்பிடிக்கும் நிகழ்ச்சிகள் வருடக்கணக்கில் தொடர்களாக வெளி இடப்படும் செயல்கள் கொஞ்சம் வேதனையாகத்தான் இருக்கின்றன.

சமீப காலங்களாக நம் நாட்டிலும் குறிப்பாக ம், தமிழ்நாட்டிலும் இருக்கும் பல தொலைக்காட்சி நிறுவனங்கள் தயாரித்து ஒளிபரப்பப்படும் பல நிகழ்சிகளை பார்க்கும்போது, நம் நாட்டு மக்களின் கற்பனை திறனும்(Imagination) , புதிதாக உருவாக்கும் திறமையும்(Creativity) கொஞ்சம் கூட இல்லையா என்ற கேள்வி எழுகிறது.

ஏனென்றால், நம் தொலைக்காட்சி நிகழ்சிகளுள் பெரும்பான்மையான நிகழ்ச்சிகள் மேலை நாடுகளில் காலா காலமாக தயாரித்து வழங்கப்படும் நிகழ்ச்சிகளின் மொழி மாற்றம் மட்டுமே.

இந்த வகையில் ஒளிபரப்பப்படும் நிகழ்சிகளில் பெயர் குறிப்பிட்டு  பல நிகழ்சிகளை பட்டியலிடலாம், ஆனால் அதுவல்ல இந்த பதிவின் நோக்கம்.

பொதுவான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை மறு தயாரிப்பு செய்து நம் நாட்டு மக்களுக்கு வழங்குவதில் எந்த மாற்று கருத்தும்  இல்லை.

அதே சமயத்தில்,மேலை நாட்டு பண்பாடு நாகரீகம் கலாச்சாரம் சம்பந்தமான நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்குவது நம் நாட்டு நடை முறைகளுக்கு ஏற்புடையதாக இருக்குமா என சிந்தித்து பார்க்கவேண்டும்.

குறிப்பாக கணவன் மனைவி உறவுகள் - அர்பணிப்பு, திருமண பந்தம்,  உடை கலாச்சாரம், குடும்ப மானம் மரியாதையை கட்டி காப்பது, குடும்ப ஒற்றுமை, குடும்ப உறவுகள், கூட்டுகுடும்பம், பெற்றோர் மற்றும் முதியவர் மீதுள்ள மரியாதை - பாதுகாப்பு, பாச பிணைப்பு , பெண்களை தெய்வமாக(!!??) மதிக்கும் மாண்பு , சகோதரத்துவம், கூழானாலும் குளித்து குடிப்பது, கந்தையானாலும் கசக்கி கட்டுவது   போன்ற எத்தனயோ அடிப்படியான நமது கலாசார அடையாளங்களை  புகழ்ந்து பாராட்டி பின்பற்ற துடிக்கும் வெளி நாட்டவர் , தங்கள் நாட்டில் இது போன்று இல்லையே என ஏக்க பெருமூச்சி விட்டு கொண்டிருக்கின்றனர். 

ஆனால் நம் நாட்டிலோ  , வெளி நாட்டு மோகத்தாலும் , எப்படியாவது பணம் பண்ணவேண்டும் என்ற பேராசையாலும், அக்கம் பக்கம் கூட தெரிய கூடாத குடும்ப சண்டைகளையும் கண்ணிய குறைவான அவலங்களையும் மேடை ஏற்றி வெளிச்சம் போட்டு காட்டி,  ஊர் மட்டுமன்றி உலகமும் அறிய செய்வது அவலத்தின் உச்சம்.

வெள்ளையரின் வாழ்க்கை முறை வேறு அவர்கள் எல்லாவற்றையும் "ஒளிவு மறைவின்றி" வெள்ளை அறிக்கையை போல வெளிச்சம் போட்டு காட்டுவதும் சுற்றத்தாரை பற்றியும் உறவுகள், சொந்தங்கள்  பற்றியும்   சிறிதும் கவலை இன்றி தங்கள் சொந்த ஆசா பாசங்கள், சுகங்களுக்காக எந்த எல்லையையும் தாண்டுவது அவர்களுக்கு சாதாரணம், ஆனால் நமக்கு அப்படி இல்லையே-- மயிர் நீத்தால் உயிர் நீக்கும்(!!) மறத்தமிழர் -இந்தியர் என்பதை மறக்கலாமா?

ஏதோ பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலும் வழிகாட்டுதலையும் , அறிவுரைகளையும் போதிப்பதுபோல பாசாங்கு செய்து, அவர்களது அந்தரங்க சொந்த பிரச்சனைகளை அம்பலபடுத்தும் நிகழ்ச்சிகள் மூலம் , பெரும் பணம் சம்பாதிப்பதோடும் ,சம்பந்தப்பட்டவர்களின் மரியாதையையும் கௌரவத்தை   சீரழிப்பதோடும்    இளைய தலைமுறையினருக்கும்  ஒரு எதிர் மறையான முன்னுதாரணத்தை ஏற்படுத்துவது ஏற்கமுடியாது.  

இத்தகைய ஊடகங்கள் சொல்வதெல்லாம் உண்மையோ இல்லையோ, நம் பாரம்பரியமான கலாச்சார பண்பாட்டு மேன்மையினை அவைகள் "கொல்"வதெல்லாம் உண்மைதான்.

இதுபோன்ற ஊடகங்களின் உண்மையான நோக்கத்தை மக்கள் உணராதவரையில்  இந்த மாதிரியான நிகழ்ச்சிகள் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கும் என்று   சொல்வதெல்லாம் கூட (கசப்பான) உண்மைதான்.

நன்றி. 

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ

15 கருத்துகள்:

  1. நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டிருக்கிறோம். நமது பெருமைமிகு பண்பாட்டை மறந்துவிட்டு முகமூடி வாழ்க்கை வாழ்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா.

      கோ

      நீக்கு
  2. அதுவும் இந்த அம்மா சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ் மாதிரி பேசுவதும் ,எதிரில் இருப்பவர்களை பேச விடாமல் ஒரு தலை பட்சமாக பேசுவதும் தாங்க முடியாமல் இந்த நிகழ்ச்சியை பார்ப்பதையே விட்டு விட்டேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றி .

      கோ

      நீக்கு
  3. சொன்னதெல்லாம் உண்மைதான்!மக்களுக்கு புரிய மாட்டேங்குதே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சுரேஷ்.

      வருகைக்கு மிக்க நன்றி.

      கோ

      நீக்கு
  4. வணக்கம் அரசே,

    நல்ல பகிர்வு,, நன்றி,,

    பதிலளிநீக்கு
  5. மக்ளை மேலும் மேலும் கெடுப்பவை ஊடகங்களே!ஐயமில்லை !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஐயா,

      அவைகளுக்கு இவைகள்தானே மூலதனம்.

      வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா.

      கோ

      நீக்கு
  6. வணக்கம்
    நல்ல பின்னூட்டம்
    நன்றி.

    கோ

    பதிலளிநீக்கு
  7. எல்லாம் தெரிந்த மாதிரி இந்த அம்மா பேசுவதை செருப்பால அடிக்கணும்.. நடத்துவது தமிழிச்சி இல்லை , இந்த டிவியும் தமிழனோட இல்லை . பின் எப்படி தமிழ் பண்பாடு இவர்களிடம் இருக்கும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே,

      கூல்டௌன். செருப்பால் அடிப்பதுவும் இந்த நிகழ்ச்சிகளில் காட்டபடுவது வேதனைதான்.

      ரொம்ப சூடான உங்கள் கருத்து தங்களின் ஆதங்கத்தை அனல் தெறிக்க பிரதிபலிக்கின்றது.

      நடத்துபவர்களை தண்டிப்பதைவிட நடப்பவற்றை பார்க்காமல் தவிர்ப்பது நல்லது.

      வருகைக்கு மிக்க நன்றிகள்.

      கோ

      நீக்கு
  8. மிகவும் கீழ்த்தரமான நிகழ்ச்சி இது. டிவி பார்ப்பதே அபூர்வம். அப்படிப் பார்த்த விழைந்தாலும் எப்போதேனும் ஏதேனும் நல்ல ஆங்கிலப்படங்கள் போடுகிறார்களா என்று ஆங்கில சானல்களைப் பார்க்கும் போது சானல் மாற்றும் போது பார்த்து அதிர்ந்து அதன் பின் அந்தப் பக்கமே போவதில்லை. நாங்களும் இதைப் பற்றி முன்பு ஒரு பதிவில் குறிப்பிட்டாகிவிட்டது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பிற்கினிய நண்பர்களே,

      "தீ (அ)யதை" பார்க்காதே - நல்ல கொள்கைதான்.

      வருகைக்கு மிக்க நன்றிகள்.

      கோ

      நீக்கு