பின்பற்றுபவர்கள்

திங்கள், 9 மே, 2016

"படிக்காத மேதைகளுக்கு"


சுய புராணம்!! 

நண்ப(ரே)ர்களே,

தமிழ் பெற்றோர்களின் தவப்புதல்வனாக பிறந்ததால் மட்டுமின்றி, பள்ளி நாட்களில் தமிழை எனக்கு விருப்பபாடமாக்கிய தமிழாசிரியர்களின் பாடம் கவிதை,  நடத்திய விதங்களும், தமிழின் சிறப்பான படைப்புகள்
  இலக்கிய காட்சிகள் , செய்யுள், இலக்கணங்கள் போன்றவற்றின் மீது ஏற்பட்ட அபரிமிதமான காதலும் எழுதுவதின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தியதின் விளைவாக ஆங்காங்கே அவ்வப்போது எழுதிவந்த என்னை வலைத்தளம் பக்கமாக தலை வைத்து இளைப்பாற வைத்த நண்பர்களின் பெரிதான ஊக்கத்தின் தாக்கத்தால், கண்டவற்றையும், அதாவது கண்களால் கண்டவற்றையும், செவியினூடாய் கேட்டவற்றையும்,வாசித்த செய்திகளின் விடயங்களையும் ஆங்காங்கே தளைபடும் கற்பனைகளையும் குழைத்து இதுவரை எழுதிய பதிவுகளில் பத்து பதிவுகளை என் பத்துப்பாட்டாக நீங்களும் உங்களின் கண்களாலும் , உணர்வுகளாலும், கருத்துக்களாலும் தொட்டுப்பார்க்கவே, இதோ பட்டியலிடுகிறேன்.

சுவாசமும் வாசமும் வெள்ளையர் நாடென்றாலும் நெஞ்சம் நிறைந்த நேசம் என் தமிழின் மீதுதான் என்பற்கான அடையாள கல்வெட்டின் உளி பதிக்கும்  தடயங்களே எமது படைப்புகள்.

தரமிருப்பதாக தங்களிடமிருந்து வரும்  அங்கீகார பின்னூட்டத்தினை வரமாக ஏற்க காத்திக்கின்றேன்.


நன்றி.

வணக்கம்.

கோ

பின் குறிப்பு:  மீள் பதிவு என்பது எழுதுபவர்களுக்கு மட்டுமல்ல வாசிப்பவர்களுக்கும்தானே, எனவே ஏற்கனவே இந்த பதிவுகளை வாசித்திருந்தாலும் ஒரு மீள் வாசிப்பு செய்வது எந்த விதத்திலும் குறைவு அல்ல.

இதுவரை என் பதிவுகளை படிக்காத மேதைகளுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்..

பதிவுகள் எழுத ஆரம்பித்த சில மாதங்களில் அறிமுகமில்லாத நண்பர் ஒருவருக்கு அனுப்பி இருந்த கடிதத்தின்  தோற்றம்தான் இந்த பதிவு சில மாற்றங்களுடன்.


1  கலாமுக்கு சலாம் -  மேதகு ஐயா அவர்களுக்காக 2001ல் எழுதியது.

2.அவர் பெயர் தங்கமணி - சந்தித்த மனிதருள் சிந்தனை புகுந்தவர்.

3.பாபியும் அதன் பேபியும் - இன்றளவும் நெஞ்சம் நிறைந்திருக்கும் நினைவுகளோடு.

4.ஹாஸ்டலில் ஒரு ஹமானுஷ்யம்  - பள்ளி கால பவித்திர - பத்திர  நினைவுகள்.. 

5.பாரதியார் இன்றிருந்தால் .. - என்ன நடந்திருக்கும்?

6.புஷ்பவனத்தில் புஸ்வான வேடிக்கை - தீபாவளி கொண்டாட்டம்.

7.அது -இது- எது  - பயணத்தில் படித்ததும் பிடித்ததும்

8.தேன்மொழி  - நெஞ்சம் மறப்பதில்லை.

9.பாட்டுக்கு பூட்டு - கல்லூரி கல்வெட்டு

10.அலைகள் ஓய்வதில்லை   - மீனவ நண்பனுக்கு.


மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ


6 கருத்துகள்:

 1. சிலவற்றை ஏற்கனவே படித்து விட்டேன். மீண்டும் படிக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் மீண்டும் வாசிப்பதற்கும் மிக்க நன்றிகள்.

   கோ

   நீக்கு
 2. தங்களின் பத்து பதிவுகளை ஒரு மீள் வாசிப்புக்கு பரிந்துரைத்தது அருமை,,

  நன்றி அரசே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பரிந்துரையை புரிந்துரைத்தமைக்கு நன்றிகள் பல.

   கோ

   நீக்கு
 3. கோ தங்களின் பதிவுகள் பல வாசித்திருக்கின்றோம். விடுபட்டிருந்தால் வாசித்துவிடுகின்றோம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பிற்கினிய நண்பர்களே,

   என் பதிவுகள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் படிப்பவர்கள் நீங்கள் விடுபட்டிருக்க வாய்ப்பில்லை.

   கோ

   நீக்கு