பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 20 மே, 2016

"நான் தான் அப்பவே சொன்னேனே"


இப்ப பார்த்தீர்களா?

நடந்து முடிந்து, முடிவுகள் அறிவிக்க பட்ட தமிழக மற்றும் வேறு பல மாநிலங்களின் தேர்தல்களை குறித்து  ஒரு சிலர்  , நான் தான் அப்பவே சொன்னேனே இப்படித்தான் ஆகும் என்று, என்று சொல்பவர்கள் இப்போது ஆங்காங்கே இருப்பதாக செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன.


ஆனால் இப்போது வெளியான ஊர்ஜிதமான செய்திகளின் அடிப்படையில் யாருமே இந்த முடிவுகளை தொகுதிகளின் எண்ணிக்கை அடிப்படியில் கணித்திருக்கவே முடியாது என்றே தோன்றுகின்றது.  

தொலை காட்சி  ஊடகங்கள், செய்திதாட்கள், மேடை பேச்சுக்கள் , அறிக்கைகள், பிரச்சாரங்கள் அனைத்தையும் அவ்வப்போது பார்த்தும் கேட்டும் வந்த எவரும் அவற்றின் அடிப்படியில் கொஞ்சம் மாற்றங்களுக்கு உள்ளாயிருப்பர் என்பதில் ஐயமில்லை.

அனைத்து கட்சியினரும் தங்களுக்கே பெரும்பான்மையான வாய்ப்புகள் இருப்பதாக சொல்லிகொண்டிருந்த போக்கை பார்க்கும்போது பெயர் தெரிந்த சில கட்சிகளும் பெயர்தெரிந்த சில பிரபலங்களும் நிச்சயம் வெற்றி பெற்று பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைப்பர் என்றும் நினைக்க தோன்றியது என்பதுவும் உண்மைதான்.

அதே சமயத்தில் சில கட்சிகள் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி அவரவர்கள் சார்பாக  பலவிதமான பொய்மை (பொய்யும் + மெய்யும்) செய்திகளை காற்றில் கலந்து நம் காதுகளை சேர்த்தவற்றையும் சேர்த்து பார்க்கும்போது கண்டிப்பாக இந்த முடிவுகளை யாரும் , கணித்திருக்க வாய்ப்பில்லை.(ஓரிரு இடங்கள் முன்னே பின்னே இருக்கும் அளவிற்கு கூட)

இந்த அழகில், பல தனியார் மற்றும் சுய சேவை நிறுவனங்கள், தன்னார்வலர்கள் ஆளாளுக்கு, தேர்தல் கணிப்புகள் என்று ஒவ்வொரு வாரம் ஒவ்வொரு அறிக்கையை வெளி இட்டும் மக்களை குழப்பி வந்ததின் அடிப்படையிலும் நாட்டின் போக்கு வேறு திசையை நோக்கி பயணிக்கும் என்றும் நினைக்க தோன்றியது.

ஆனால்,  மக்களின் எண்ண ஓட்டங்களை துல்லியமாக கண்டறிய எந்த ஊடகங்களாலும்  , எந்த தொண்டு நிறுவனங்களாலும் , எந்த தன்னார்வ நிறுவனங்களாலும் முடியாது என்பது மீண்டும் நிறுபனமாகி இருக்கின்றது.

இனியாவது இதுபோன்ற கருத்து கணிப்புகளை (சும்மா பொழுதுபோக்கிற்காக கூட செய்யாமல்)   தங்கள் சொந்த ஆதாயத்திற்காக , கட்சி தலைவர்களை மகிழ்விக்க , செய்வதை நிறுத்திக்கொண்டு , ஊராரை திசை  திருப்ப முயற்சிக்க கூடாது என்பதும் பலருக்கு புரிந்திருக்கும். 

எது எப்படியோ, வெற்றி பெற்றவர்களோ , தோற்று போனவர்களோ,எதிர்கட்சிகளோ, ஆளும் கட்சிகளோ, மற்றவர்கள் மீதுள்ள காழ்ப்புணர்வுகளையும், போட்டி எண்ணங்களையும்   ஒருவரை ஒருவர் தோற்கடிக்க வேண்டும் என்ற வைராக்கிய சிந்தைகளையும் தேர்தலோடு விட்டுவிட்டு இனி நாட்டு மக்களின் நலன் கருதி ஆக்கபூர்வமான சிந்தையுடன் ஆள்பவர்களோடு ஒத்துழைக்கவும் அதே சமயத்தில் ஞாயமான எதிர்ப்புகளை கண்ணியமான முறையில் வெளிபடுத்தியும் வருகின்ற காலங்களில் செயல்பட்டு வளம் பெறுவோம்.

ஆளும் கட்சிகளும் தங்களது பலம், செல்வாக்கு மக்கள் பின்னணியை காரணமாக்கி , அடக்குமுறைகளையும் , மக்கள் விரோத செயல்களிலும் பழி வாங்கும் செயல்களிலும்  ஈடுபடாமல் , மக்கள் சேவைபுரிய இந்த பதவியும் வாய்ப்பும் "இறைவன் கொடுத்த ஒரு உன்னத வாய்ப்பாக"   கருதி தன்னலமின்றி தங்கள் கடமைகளை செய்து மக்களின் நல்வாழ்வை மேம்படுத்தி நாட்டில் மகிழ்ச்சி பெருக செய்யவேண்டும்.

சாதாரண  பொதுமக்கள் சொல்வதுபோல்,"நான் தான் அப்பவே சொன்னேனே இப்படித்தான் ஆகும் என்று" என்பதுபோல் அல்லாமல்,வெற்றி பெற்றவர்கள் ஆளும் கட்சியாகவோ, எதிர்கட்சியாகவோ, கூட்டணி கட்சியாகவோ, சுயேச்சைகளாகவோ   இருந்தாலும் தங்கள் அதிகாரத்திற்கு  உட்பட்டு, தேர்தல் சமயத்தில் தாங்கள் மக்களிடம் சொன்ன வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக துரிதமாக நிறைவேற்றி, " நான் தான் அப்பவே சொன்னேனே" இப்ப பார்த்தீர்களா, நிறைவேற்றி இருக்கின்றேன் என்று தங்கள் பதவி காலம் முழுவதும் மக்கள் நன்மையை கருத்தில்கொண்டு நேர்மையுடன் செயல்பட வேண்டும்  என்ற என் எண்ணத்தை  இங்கே வேண்டுகோளாக வைத்து  இந்த பதிவை நிறைவு செய்கிறேன்.

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ


6 கருத்துகள்:

 1. நல்ல புத்திமதி. கடைபிடிக்கிறார்கள் என்று நம்புவோம்.

  பதிலளிநீக்கு
 2. வணக்கம் அரசே,

  இங்கு தேர்தல் என்பது,, கட்சிகளுக்கிடையே இல்லை,, ஒவ்வொரு மனிதருக்கும் இடையே ஏற்படும் போட்டி பொறாமை தான்.....

  புரியலையா? நம் தமிழகம் பெரும்பான்மையும் கிராமப்பகுதிகளைக் கொண்டது,,,, அங்கு வாழும் மனிதர்கள்,, தங்கள் பகுதிகளில் கோஷ்டி மோதல் வருவது ஒன்று சாதி,, அடுத்தது அரசியல்,,,மதம் என்பது இங்கு அவ்வளவாக இல்லை,,,, வெற்றி பெற்ற கட்சியோ,, அதற்கு அடுத்த நிலையில் உள்ள கட்சியோ,, தங்கள் நற்செயல்களால் வந்ததாக நினைத்தால் ,,,,,,,,,,,, பூனைக் கண்ணை மூடிக்கொண்டு இந்த உலகம் இருட்டு என நினைப்பது போல் எனலாம்,,,,,
  எல்லா இடத்திலும் இப்படி தானா? என்றால்,, நன்றாக சிந்தனைப் பன்னி பாருங்கள்,, புரியும்,, இரு கோஷ்ட்டியினரும் தங்களால் முடிந்த அளவு மக்களை மிரட்ட,, காரணம் தாம் இருக்கும் பகுதியில் குறைந்தது 500 முதல் 700 வரையிலான எண்ணிக்கையில் இருக்கும் இந்த மக்களை நேரில் பேசி எனக்கு தான் அதாவது நான் சொல்பவருக்கு தான் ஓட்டு போடனும்,, இல்ல நமக்குள்ள உறவே இல்ல,, என்று,,, இது தான் இங்கு நடப்பது,, மாற்றம் என்பது இங்கு வருவது என்பது இவர்கள் மாறாத வரை மாற்றம் வராது,,,
  நகர் புறம் என்பதும் இதனை உள்அடக்கியே தான்,,,

  இதிலும் இந்த ஊடகங்கள் இப்ப ரொம்ப,,,தாங்கள் தான் எல்லாம் என,,, பணம் ஜனநாயகம்,,,, என்று,
  பணமும் இது போன்ற மனிதர்களும் மாறனும்,,,
  அய்யோ பதில் நீண்டு விட்டது மன்னிக்கவும் அரசே,,

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் நீண்ட விளக்கத்திற்கும் மிக்க நன்றி

   கோ

   நீக்கு
 3. உண்மைதான்! கருத்துக்கணிப்புக்களை முழுமையாக தடை செய்ய வேண்டும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சுரேஷ்,

   நடக்குமா?

   வருகைக்கு மிக்க நன்றிகள்.

   கோ

   நீக்கு