பின்பற்றுபவர்கள்

புதன், 22 ஜூன், 2016

அம்மா இங்கே வா! வா!!...வேண்டாம் ... நான் வருகிறேன்.

நண்பர்களே,

என்னுடைய பதிவுகளை தொடர்ந்து வாசித்துவரும் உங்களில் பெரும்பான்மையானவர்களுக்கு மிகவும் பரிட்சயமானவரும், என் நிழலாக விளங்குபவரும்  வெளி நாட்டில் வசித்துவருபவருமான ஒருவரின் வாழ்க்கையில் சமீபத்தில், அதாவது 30 நாட்களுக்கு முன்,  ஏற்பட்ட நிகழ்வு ஒன்றை உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்க விழைகின்றேன்.

21/05/2016 சனிக்கிழமை  அன்று இந்தியாவிலிருந்து அவரது சகோதரியின் தொலைபேசி அழைப்பு வருகிறது, அதில்,

"அம்மாவிற்கு காலில் கொஞ்சம் வீக்கம் இருக்கின்றது , எனவே வருகிற திங்கட்கிழமை மருத்துவமனை அழைத்து செல்ல போகிறோம்,கவலை படும்படி ஒன்றும் இல்லை".

"சரி அம்மாவை கிட்டே இருந்து பார்த்துக்கொள்ளுங்கள், என்னுடைய விசாரிப்புகளையும் சொல்லுங்கள்".

இதற்கிடையில் சுகவீனமாக இருக்கும் தன் தாயாரை பார்த்து, சிகிச்சைகளுக்கு ஏற்பாடு செய்துவிட்டு குணப்படுத்தி வீட்டிற்கு அழைத்து வந்து அவரோடு சில நாட்கள் தங்கி இருந்துவிட்டு மீண்டும் திரும்பிவரும்படி வெள்ளிக்கிழமை அதாவது 27/06/2016 ஆம் தேதி ஊருக்கு செல்ல எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டார்,

மீண்டும் 23/05/2016 அன்று தன் சகோதரியிடம் ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது அதில்,

"அம்மாவை நேற்றே , அதாவது ஞாயிற்று கிழமையே மருத்துவ மனைக்கு அழைத்து வந்துவிட்டோம் ஏனென்றால் ஞாயிற்று கிழமைகளில்  மருத்துவமனையில் கூட்டம் அதிகமாக இருக்காது".

"சரி உடனிருந்து பார்த்துக்கொள்ளுங்கள், நான் 27 ஆம் தேதி வெள்ளிக்கிழமை புறப்பட்டு சனிக்கிழமை காலை வந்துவிடுவேன்" என தகவல் சொல்லிவிட்டு பயணத்திற்குமுன் செய்ய வேண்டிய அலுவலக மற்றும் வீட்டு காரியங்களை ஒழுங்கு செய்ய துவங்கி இருக்கின்றார்.

செவ்வாய்க்கிழமை, 24/05/2016 அதிகாலை சுமார் 4.00 மணிக்கு தொலை பேசி அழைப்பு தன் சகோதரனிடமிருந்து.

"அம்மாவிற்கு கொஞ்சம் முடியாம இருக்கு, நீ வந்தால் நன்றாக இருக்கும்".

"நான் வெள்ளிக்கிழமை வர ஏற்பாடு செய்திருக்கின்றேன், வந்துவிடுகிறேன்".

"வெள்ளிக்கிழமைவரை தாமதிக்க வேண்டாம் முடிந்தால் கொஞ்சம் முன் கூட்டியே வர பார்."

இத்தனை காலையில் அழைக்கும்படி , அப்படி அம்மாவின் உடல் நிலை என்னவாகி இருக்கும்?  ஒருவேளை........அதற்குமேல் சிந்திக்க மறுத்த இதயத்தை இறுக பற்றிக்கொண்டு..... 

காலை 4.30 க்கு பயண ஏற்பாடு செய்யும் முகவரை  அழைத்து , பயணத்தை இன்றைக்கே - அதாவது 24/05/2016 செவ்வாய் கிழமைக்கே  மாற்றி தரும்படி செய்து அதற்கான தகவலை உறுதி செய்து மின் அஞ்சல் செய்யும்படி சொல்லிவிட்டு , தனது பயண ஏற்பாடுகளை துரித கதியில் செய்துவிட்டு, விமான நிலையம் புறப்பட்டார்.

விமான நிலையம் அடைந்தவர், தன் மனதில் அம்மாவின் சுகத்திற்காக கண்ணீரோடு இறைவனிடம் பிரார்த்திக்கொண்டிருந்தார்.

அந்த சமயத்தில் அவரின் தொலைபேசியின் வாயிலாக ஒரு செய்தி வருகிறது அது  அவருக்கு மன நிறைவையும் மகிழ்ச்சியையும்  தருகிறது கண்களில் ஆனந்த கண்ணீர் வருகிறது , கவலையோடு துவங்கப்பட்ட தன் பயணத்தை சுகமான பயணமாக மாற்றிய அந்த மகிழ்ச்சி செய்தி என்ன?

நாளை சொல்கிறேன்.

நன்றி.

 மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ12 கருத்துகள்:

 1. கடைசியில் டிவிஸ்டா ... சரி நல்லதாகவே இருக்கட்டும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பரே,

   வருகைக்கு மிக்க நன்றி.

   ஆமாம் கடைசியில் ட்விஸ்ட்டுதான்.

   நடப்பவை எல்லாம் நல்லதிற்காகவே(!!??)

   நன்றி.

   கோ

   நீக்கு
 2. எதிர்பார்ப்போடு...நிறுத்திவிட்டீர்களே?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐயா,

   வருகைக்கு மிக்க நன்றி.

   பல எதிர்பார்ப்புகள் இப்படித்தான் இடை மறிக்கப்படுகின்றன.

   நன்றி.

   கோ

   நீக்கு
 3. ஆவலோடு .. காத்து கொண்டு....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விசு,

   வருகைக்கும் உங்கள் வாசிப்பின் வாஞ்சைக்கும் மிக்க நன்றி.

   கோ

   நீக்கு
 4. வெகுநாட்களுக்குப் பிறகு வலைப்பக்கம் வருகை நாங்கள். நலமா நண்பர் கோ அவர்களே..

  பரிச்சயமான நண்பர் என்று சொல்லியிருக்கின்றீர்கள் யார் அவர் என்று தெரியவில்லை. அந்த மகிழ்ச்சியான செய்தி என்ன தெரிந்து கொள்ள இதோ அடுத்த பதிவிற்குச் செல்கின்றோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பிற்கினிய நண்பர்களே,

   வெகுநாட்களுக்குப் பிறகு வருகை என்றாலும் உங்கள் வருகை எனக்கு எப்போதும் புத்துணர்வூட்டுபவைதானே.

   வருகைக்கு நன்றிகள்.

   கோ

   நீக்கு
  2. அன்பிற்கினிய நண்பர்களே,

   வெகுநாட்களுக்குப்பின் வருகை என்றாலும் உங்கள் வருகை எனக்கு எப்போதும் புத்துணர்வூட்டுபவைதானே.

   அன்பிற்கினிய நண்பர்களே,

   வெகுநாட்களுக்குப்பின் வருகை என்றாலும் உங்கள் வருகை எனக்கு எப்போதும் புத்துணர்வூட்டுபவைதானே.

   பரீட்ச்சையமானவர் யார் என்று பரீட்ச்சை வைத்தா சொல்ல முடியும்?

   வருகைக்கு நன்றிகள்.

   கோ

   நீக்கு
 5. நண்பரே,

  வருகைக்கு மிக்க நன்றி.

  ஆமாம் கடைசியில் ட்விஸ்ட்டுதான்.

  நடப்பவை எல்லாம் நல்லதிற்காகவே(!!??)

  நன்றி.

  கோ

  பதிலளிநீக்கு
 6. மனநிறைவையும் மகிழ்ச்சியும் என்றவுடன் நிம்மதியாக தொடர்ந்தேன்.

  பதிலளிநீக்கு
 7. பேராசிரியருக்கு,

  தங்களின் வருகைக்கும் தொடர்வதாக வாக்களித்தமைக்கும் மிக்க நன்றிகள்.

  கோ

  பதிலளிநீக்கு