பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 24 ஜூன், 2016

அம்மா இங்கே வா! வா!!--2



இனிய பயணம்.

நண்பர்களே,

 தொடர்கிறது......

முதலில் இருந்து வாசிக்க.....அம்மா இங்கே வா! வா!!

விமான நிலையத்தில் தன் அம்மாவை நினைத்து கண்ணீரோடு இறைவனிடம் பிரார்த்திக்கொண்டிருந்தவரின் தொலைபேசி சிணுங்கிடும் அதிர்வலைகளால் தன் இயல்பிற்கு திரும்பியவருக்கு, தன் சகோதரியின் அழைப்பு.

 அதில்,

"அம்மா காலையில் காபி வேண்டும் என்று கேட்டார், கொடுத்தோம் குடித்தார், பிறகு நீ வருவதாக சொன்னோம், அதற்கு அவன் ஏன் வரவேண்டும் என்று கேட்டார், அதற்கு நாங்கள், அவனுக்கு இந்த வாரம் விடுமுறையாம் அதனால் நம் எல்லோரையும்  பார்க்க வருகிறான்  என்று  சொன்னோம்".

இந்த செய்தி கேட்டதும் அம்மாவின் உடல் நிலை நன்றாக இருக்கின்றது, என்று மனதினில் மகிழ்ச்சி பொங்க   இறைவனுக்கு நன்றி சொன்னாராம்.

நாம் ஏதேதோ நினைத்துவிட்டோமே என்றெண்ணியவர்,

அம்மா இதோ வந்து விடுகிறேன், என சொல்ல அம்மாவின் காதருகில் தன் சகோதரியின் கைபேசியை வைக்குமாறு சொல்லிவிட்டு, "அம்மா இதோ வருகிறேன், புறப்பட்டுவிட்டேன் நாளை காலையில் நேராக மருத்துவ மனை வந்து உங்களோடு இருக்கப்போகிறேன் ,  என்னமா, நான் சொல்றது கேட்கிறதா?"  என அம்மாவிடம் பேசுகிறார், அம்மாவின் முனகல் சத்தம் கேட்கிறது, சகோதரி சொன்னார், "அம்மா தூங்குகிறார்கள் போல் தெரிகிறது, நீ விமானம் ஏறுவதற்குள்  - எழுந்தவுடன் பேச வைக்கிறேன்".

இந்த உரையாடல்கள்  தன் உள்ளத்தில் தேனோடு பாலையும் தெவிட்டாத அமுதத்தையும் பிணைந்து வார்த்ததை எந்த வார்த்தையாலும் அவரால் வார்த்து வருணிக்க முடியவில்லை.

பயணம் தொடங்குகிறது, அம்மாவின் நினைவுகள் 40,000 அடி உயரத்தில் மணிக்கு 575 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும்  விமானத்தின் வேகத்தைவிட பல மடங்கு வேகத்தில் இந்தியாவை நோக்கி பறந்துகொண்டிருந்தது.

அம்மாவின் அன்பான நினைவுகளிலும்  மானசீக அரவணைப்பின் கதகதப்பிலும் தாலாட்டிலும் மனமும் உடலும் அமைதியாக விமான இருக்கையில் சுகமுடன் துயில ஆரம்பித்தன.  

சுமார் 10 மணிநேர பயணத்திற்கு பிறகு வழிமேல் விழிவைத்து விழித்திருக்கும் தன் தாயின் கண்ணை - கன்னங்களை  முத்தமிடுமுன் தன் தாய் மண்ணை முத்தமிட்டது அவர் பயணித்த விமான சக்கரங்கள், மறு நாள் அதாவது மே மாதம் 25 ஆம் தேதி காலை 5.30 மணிக்கு.

ஓட்டமும் நடையுமாக  தன் கால்களில் சக்கரங்களை கட்டிக்கொண்டதுபோல் குடியேற்ற சடங்குகளை முடித்துக்கொண்டு வெளியில் வருபவரை அழைத்து செல்ல வந்தவர்களிடம், "அம்மா எப்படி இருக்கின்றார்கள்,கால் வீக்கம் குறைந்துவிட்டதா, சாப்பிட்டார்களா, பேசினார்களா, டாக்டர்கள் என்ன சொன்னார்கள்.".....போன்ற அடுக்கடுக்கான கேள்விகளுக்கெல்லாம் நேர்மறையான பதில்களை கேட்டு உள்ளம் மிகவும் உற்சாகம் அடைந்தது.

இப்போது விமானநிலையத்தில் இருந்து வீட்டிற்கு காரில் பயணம் தொடர்கிறது.

வழி நெடுகிலும் அம்மாவை பற்றிய  பேச்சுக்களிடையே, நாட்டு நடப்புகளையும் பேசிக்கொண்டு பயணம் தொடர்ந்தது.

இன்னும் 10 அல்லது 15 கிலோ மீட்டர் தூரமே உள்ளது அம்மா இருக்கும் மருத்துவமனை.

அம்மாவை பற்றிய இன்னும் சில கேள்விகளுக்கு மகிழ்வளிக்கும்  பதில்களாக சொல்லி வந்தவர்களின் குரலில் செய்திக்கேற்ற உணர்வும்  சுரமும்  இல்லாததை  உணர்ந்தவராக, "உண்மையை சொல்லுங்கள் அம்மாவிற்கு என்ன ஆனது"?

அவர்கள் சொன்ன பதில் என்ன?

நாளை தொடர்கிறேன்.

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ.

12 கருத்துகள்:

 1. மறுபடி டிவிஸ்ட் வச்சுடின்களே???? தொடர்கிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பரே,

   மறுபடியும் ட்விஸ்ட் வைத்தது நான் அல்ல.

   தொடர் வருகைக்கு மிக்க நன்றிகள்.

   கோ

   நீக்கு
 2. பதில்கள்
  1. ஐயா,

   காத்திருப்பிற்கு பிறகு கிடைப்பவைதானே சுவாரசியம்(??) மிகுந்தவை.

   இன்னும் கொஞ்சம் அவகாசம் கொடுங்களேன்.

   தொடர் வருகைக்கு மிக்க நன்றிகள்.

   கோ

   நீக்கு
 3. நானும் ஆவலோடு காத்திருக்கிறேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சுரேஷ்,

   உங்களைப்போன்று நானும் காத்திருக்கிறேன் முழுமை படுத்த.

   காத்திருத்தலுக்கும் தொடர் வருகைக்கு மிக்க நன்றிகள்.

   கோ

   நீக்கு
 4. ஆமாம் அடுத்த பகுதி எப்போது?

  நலமா சார்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மகேஷ்,

   நலம்தான்.

   நீங்கள்?

   இதோ அடுத்தப்பகுதி தயார் உங்களுக்காக.

   நன்றி

   கோ

   நீக்கு
 5. தொடங்கும் போதே ஏதோ மனதில் தோன்றியது இருந்தாலும் அதை இது போன்ற ஒரு பதிவில் ஊகித்ததைச் சொல்லத் தோன்றவில்லை....மனது சற்றுக் கலக்கத்துடன் அடுத்த பதிவிற்குப் போகின்றோம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பிற்கினிய நண்பர்களே,

   தங்களின் மனவருத்தம் கண்டு தலை வணங்குகிறது என் மனம்.

   கோ

   நீக்கு
 6. தங்களால் மட்டுமே இப்படி எழுத முடியும்

  தொடர்கிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பேராசிரியருக்கு,

   தங்களின் தங்களின் தொடர் வருகைக்கு மிக்க நன்றிகள்.

   கோ

   நீக்கு