பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 1 ஜனவரி, 2016

"புத்தாண்டின் முதல்நாள்போல்"

வாழ்த்துக்கள்!!


"புத்தாண்டு மலரட்டும் 
புது வாழ்வு புலரட்டும் 
சத்தான மகிழ்வென்றும்
சளைக்காமல் வளரட்டும்

கடந்த நாள்  துயரங்கள் 
கடக்கட்டும்  தூரங்கள்
அடைந்திட்ட வேதனைகள்
அடியோடு தீரட்டும்.

புத்தொளி வீசட்டும்
புன்னகை பேசட்டும்
எத்திக்கும் இன்பமெனும் 
ஏகாந்தம் பரவட்டும்.

சாதிமத பேதமெல்லாம் 
சாக்கடையில் மூழ்கட்டும்
சந்தனமாய் மனிதநேயம்
ஆதிக்கம் செய்யட்டும்.

வறுமை, பிணி, அறியா(மை)துயர் 
வற்றியே  காய்ந்து போகட்டும்
வெறுமை சூழ் இருளகன்றி - வாழ்வு 
வெற்றி கீதமாகட்டும். 

சிறுமை கண்டு பொங்கும் எண்ணம் 
சீறி பாய்ந்து ஓடட்டும் - நம் 
பெருமை கண்டு உலகமேன்மை
புரண்டு நம்மை நாடட்டும்.

நமது நட்பு  தொடரட்டும் அது
நாளும் பற்றி  படரட்டும்
சுமைகள் விஞ்சும்  நேரங்களில் - நம்
தோள்கள் கொஞ்சம்  பகிரட்டும்.

மனதினில் அன்பு  அரும்பட்டும் 
மனைதனில் மகிழ்ச்சி  மலரட்டும்
தினம் தினம் புத்தாண்டின் முதல்நாள்போல்-இந்த 
முழு ஆண்டும் நமக்கெலாம் அமையட்டும்.


அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Image result for happy new year 2016


நன்றி

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ


14 கருத்துகள்:

  1. அருமை நண்பரே நம்பிக்கையூட்டும் வரிகள் புத்தாண்டு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றிகள்.

      கோ

      நீக்கு
  2. பதில்கள்
    1. வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள்.

      கோ

      நீக்கு
  3. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

      கோ

      நீக்கு
  4. வணக்கம் அரசே

    அருமையான வார்த்தைகள் அவை கோர்த்த வரிகள்

    சுமைகள் விஞ்சும் .
    .......

    அருமை அருமை வாழ்த்துக்கள் அரசே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றிகள்.

      கோ

      நீக்கு
  5. அருமையான வரிகள்! இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றிகள்.

      கோ

      நீக்கு
  6. அருமையான நேர்மறை எண்ணங்களுடன் கூடிய வலுவூட்டும் வரிகளுடன் புத்தாண்டு வாழ்த்துகளைக் கவிதையாய் வடித்திட்டத் தங்களுக்கும் எங்கள் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றிகள்.

      கோ

      நீக்கு
  7. அருமையான கவிதை சார்! ஒரு நீண்ட கேப்பிர்க்கு அடுத்து படிக்க ஆரம்பித்த முதல் பதிவே சூப்பர்!
    தாமதமான புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    சாதிமத பேதமெல்லாம்
    சாக்கடையில் மூழ்கட்டும்

    சந்தனமாய் மனிதநேயம்
    ஆதிக்கம் செய்யட்டும்.//

    கவிதையில் மிகவும் ரசித்த வரிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகேஷ்,

      மீண்டும் இந்த புத்தாண்டில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.

      புத்தாண்டு பல புதிய நன்மைகளை உங்கள் வாழ்வின் வருகை பதிவேட்டில் பொன்னெழுத்தில் பதித்து மிளிர வாழ்த்துக்கள்.

      பதிவினை ரசித்தவிதம் பாராட்டுக்குரியது.

      வாழ்க வளமுடன்.

      கோ

      நீக்கு