முடிச்சி விழுந்தது. !!
நண்பர்களே,
தமிழர் திருநாள் அல்லது உழவர் திருநாள் அல்லது அறுவடை திருநாள், அல்லது நன்றியின் நன்னாள் என்று வரபோகும் தை பொங்கல் திருநாளை எத்தனை விதங்களில் அழைத்தாலும் அவை அத்தனையும் ஒட்டு மொத்தமாக இன்பத்தை நம் இதயங்களில் பொங்கச்செய்யும் மகத்துவ நிறைவையும் குதூகல மகிழ்வையும் கொடுக்கும் , இயற்கையோடு இயைந்த ஒரு உன்னதமான பண்டிகை பொங்கல் திருநாள்.
போகி துவங்கி காணும் பொங்கல் வரை நான்கு நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படும் இந்த பண்டிகையை பொங்கல் திருநாள் என்று ஒற்றை படையில் - ஒருமையில் சொல்லாமல் "பொங்கல் திருநாட்கள்" என பன்மையில் சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும்.
திருமண விருந்து தடபுடலாக இருந்தாலும் பரிமாற பயன்படும் வாழை இலை ,மற்றும் கடைசியாக கொடுக்கப்படும் தேங்காய், பழம் நிரப்பிய தாம்புல "மஞ்சா பை" (இப்பவும் திருமண விருந்தில் பாயாசம் இருக்கா?) போல் இந்த ஒட்டுமொத்த விழா கொண்டாட்டங்களுள் அடிப்படையான இரண்டு விஷயங்களை ஆதார புள்ளிகளாக கருதலாம்.
அவற்றுள் ஒன்று விவசாயத்தின் தோழன் சூரிய பகவான் மற்றொன்று விவசாயியின் தோழன் கால்நடைகள்.
பண்டிகையின் அச்சாணியாக விளங்கும் சூரியனுக்கு முதல் மரியாதை செலுத்தும் வகையில்,பெண்களின் எண்ணங்களில் கருவாகி தங்கள் கை வண்ணங்களில் உருவாகும், வண்ண கோலங்கள் இடப்பட்ட நடு வாசலில் சூரியனை நோக்கி புதுப்பானையில் பொங்கலிட்டு தமது நன்றியை தெரிவித்துவிட்டு மேற்கொண்டு சூரியனுக்கு எதையும் செய்யாமல் விட்டு விடுகின்றோம்.
அவனும் நம் மரியாதையை ஏற்றுக்கொண்டு மாலையில் மேற்கு நோக்கி மறைந்துபோகிறான்.
ஆனால் பண்டிகையின் அடுத்த ஆதார புள்ளியான கால்நடைகளை, குளிக்க வைத்து, மஞ்சள் குங்குமம், சந்தனம் தடவி, கொம்புகளுக்கு வர்ணம் பூசி, புதிய கயிறுகள் மணிகள் பூட்டி அலங்கரித்து,சாம்பிராணி தூபம் காட்டி, கற்பூர ஆரத்தி எடுத்து,மாலை இட்டு, பிரத்தியேகமாக சமைத்த , சர்க்கரை வெல்லம் போட்டு தயாரித்த பொங்கலை படைத்து, விதவிதமான காய் கறிகள் கீரைகளை பழங்களை , சூரியன் போல் மாலை வந்தவுடன் மறைந்துவிடாமல் , காலையும் மாலையும் எவ்வேளையும் நம்மோடு இருக்கும் அந்த கால் நடைகளுக்கு அளித்து அவற்றை மகிழ்ச்சி படுத்தி நமது நன்றியை தெரிவிக்கின்றோம்.
பிறகு அவைகளை மேலும் மகிழ்ச்சி(!!) படுத்தும் எண்ணத்தில் மஞ்சு விரட்டு அல்லது ஜல்லிக்கட்டு என்று அழைக்கப்படும் (வீர) விளையாட்டில் ஈடு படுத்து கின்றோம்.
அப்படி ஈடுபடுத்தப்படும் மாடுகளை அன்புடனும் கரிசனையுடனும் பாசத்துடனும் பரிவுடனும் நடத்தவேண்டும், அப்போதுதான் நாம் அவைகளுக்காக விழா எடுப்பதின் உன்னதம் வி(ல)ளங்கும்.
(Not good.)
தமிழரின் வீரத்தை மாடுகளிடம் காட்டி தன் பராக்கிரமத்தை வெளிபடுத்தும் பாரம்பரியமான இந்த விளையாட்டின்போது , இதற்கு முன் நாம் அவைகளுக்கு செய்த - காட்டிய அன்பு மரியாதைக்கு களங்கம் உண்டாகும் வகையில், ஜல்லிக்கட்டில் ஈடுபடுத்தும் மாடுகளுக்கு கோபத்தையும் எரிச்சலையும் , மிரட்ச்சியையும், பயத்தையும், காயங்களையும், உபாதைகளையும் உண்டு பண்ணும் எந்த செயலையும் செய்யாமல், அவற்றையும் நம் வீட்டில் ஒருவர்போல நடத்துவது மிக முக்கியம்.
சில இடங்களில் முன் காலத்தில் (??)மாடுகளுக்கு மது போன்ற போதை வஸ்த்துக்களை கொடுத்து அவற்றை களத்தில் இறக்கி அவற்றை மூர்க்கமடைய செய்து அதில் வேடிக்கை சுகங்களை அனுபவித்த தருணங்களும் இருந்திருக்கின்றன.
அதனால் தானோ என்னவோ கடந்த ஆண்டு இந்த வீர விளையாட்டிற்கு அனுமதி மறுக்கபட்டிருந்ததோ?
இப்போது ஜல்லிக்கட்டின் மீது இருந்த தடைகள் கட்டவிழ்க்கபட்டிருக்கும் இந்த தருணத்தில் காளைகளின் மீது வன்கொடுமைகளை கட்டவிழ்த்துவிடாமல் அவற்றிற்கு எந்த சிறு பாதிப்பும் இல்லாமல் இந்த விளையாட்டில் ஈடுபடுத்துவோமேயானால் அதுவே, சங்க காலம்தொட்டு கால்நடைகளுக்கு நாம் எடுக்கும் இந்த அற்புத விழாவின் உன்னத நோக்கத்தின் முழுமையான அர்த்தத்தை உலகுக்கு சங்கு கொண்டு முழங்கி சொல்லும்.
(காளைகளின் மீது நமக்குள்ள கரிசனையை தெளிவாக வெளிப்படுத்தும் வகையில் இந்த பாரம்பரிய விளையாட்டை வரை முறைகளுக்கு உட்பட்டு கடைபிடிப்பதை உலகுக்கு உரக்க சொல்லி தெளிவு படுத்துவதோடு செயல் வடிவிலும் உத்தரவாதம் கொடுப்போமேயானால் தற்போது விழுந்த இந்த தடை முடிச்சி விரைவில் அவிழும் என நம்புகின்றேன்.
(காளைகளின் மீது நமக்குள்ள கரிசனையை தெளிவாக வெளிப்படுத்தும் வகையில் இந்த பாரம்பரிய விளையாட்டை வரை முறைகளுக்கு உட்பட்டு கடைபிடிப்பதை உலகுக்கு உரக்க சொல்லி தெளிவு படுத்துவதோடு செயல் வடிவிலும் உத்தரவாதம் கொடுப்போமேயானால் தற்போது விழுந்த இந்த தடை முடிச்சி விரைவில் அவிழும் என நம்புகின்றேன்.
அதே சமயத்தில் இந்த விளையாட்டில் ஈடுபடும்,கூறிய கொம்புகளுடனும் சீரிய கோபத்துடனும் வரும் காளைகளிடம் தேவையற்ற வம்புகள் செய்யாமல் இளைஞர்களும் முழு பாதுகாப்போடும் எச்சரிக்கையோடும் விழிப்போடும் இருப்பது மிக மிக அவசியம்.)
(பயிற்சி தேவைபடுபவர்கள் தாராளமாக தயக்கமின்றி தொடர்புகொள்ளலாம்.....யாரை? )
வேண்டுகோள்:
"ஜல்லிக்கட்டு" தமிழ் வார்த்தையா என்பதை தமிழறிஞர்கள் யாரேனும் கொஞ்சம் சொல்லுங்களேன்.
வேண்டுகோள்:
"ஜல்லிக்கட்டு" தமிழ் வார்த்தையா என்பதை தமிழறிஞர்கள் யாரேனும் கொஞ்சம் சொல்லுங்களேன்.
நன்றி.
மீண்டும் ச(சி)ந்திப்போம்
கோ
நடக்குமா...? நடக்காதா...? ஒன்றும் தெரியவில்லை... புரியவும் இல்லை...
பதிலளிநீக்குஇனிய தமிழர் தின நல்வாழ்த்துகள்...
தனப்பால்,
நீக்குபொறுத்திருந்து பார்ப்போம்.
உங்களுக்கும் இனிய தமிழர் தின நல்வாழ்த்துக்கள்.
கோ
பொங்கல் வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குநண்பரே,
நீக்குஉங்களுக்கும் என் இனிய பொங்கல் நல வாழ்த்துக்கள்.
கோ
பொங்கல் என்றால்ஏ ஊர்பக்கம்தான்.
பதிலளிநீக்குநகரத்தில் இருப்பவரையும் சொந்த ஊர்பக்கம் வரவைக்கும் பண்டிகைதான் பொங்கல்இன் சிறப்பு.
சிறு வயது நினைவுகளை இந்தப் பதிவு கொஞ்சம்/இல்ல இல்ல நிறையவே கிளறி விட்டது சார்.
மகேஷ்,
நீக்குசின்ன வயசு ஞாபகம் என்றால் எப்போது, நீங்கள் இன்னும் சின்ன வயசு பாலகன்தானே?
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
கோ
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குசுரேஷ்
நீக்குஉங்களுக்கும் என் இனிய பொங்கல் நல வாழ்த்துக்கள்.
கோ
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குதமிழர் திருநாள் வாழ்த்துக்களை
பதிலளிநீக்குமகிழ்வோடு நவில்கின்றேன்
கனிவோடு ஏற்றருள்வீர்
வணக்கம்
பதிலளிநீக்குதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது இனிய பொங்கல் வாழ்த்துக்கள்-2016
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
திரு கரந்தையார் அவர்களுக்கு,
பதிலளிநீக்குபொங்கல் வாழ்த்தினை கவிதயாய் பொங்கி கற்கண்டோடும் கரும்புச்சாரோடும் பகிர்ந்தமை நன்று.
உங்களுக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
கோ
ஜல்லிக்கட்டு என்பது மருவிய சொல்லாடல். சல்லிக்கட்டு என்னும் வார்த்தையில் இருந்து. இன்னும் விளக்கம் எழுதி வருகிறேன். இருங்க இதோ வரேன்.
பதிலளிநீக்குபேராசிரியர் அவர்களுக்கு,
பதிலளிநீக்குபதிவில் எழுப்பப்பட்ட என் சந்தேகத்திற்கு பதில் கூற நீங்கள் எடுக்கும் சிரத்தைக்கு மிக்க நன்றி.
கோ
சேகரித்ததை எழுத தான் முடியல ரொம்ப லேட்,,,
நீக்கு