பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 12 ஜனவரி, 2016

பிரிட்டனில் நாடி ஜோசியர்!?!?!

 நாள்  நட்ச்சத்திரம் 

நண்பர்களே,

நம் நாட்டில்  சாஸ்த்திரங்கள் ,சாங்கியங்கள், சம்பிரதாயங்கள், சகுனங்கள் சடங்குகள்,தோஷங்கள் பரிகாரபூசைகள்,
நாள், நேரம் ,தேதி, கிழமை, இராகுகாலம், எமகண்டம், அஷ்டமி நவமி,அமாவாசை பௌர்னமி, கிரக பலன்கள், பஞ்சாங்கம், வாஸ்த்து, கைரேகை. ஜோசியம், ராசிகள் என்று  இது போன்று எண்ணற்ற விஷயங்களில் மூட முடியாத நம்பிக்கை உடையவர்கள் ஏராளம் என்பது நமக்கு தெரியும்.

வியாக்கியானங்கள் பேசுபவர்கள், வெளி நாட்டினரை பாருங்கள் அவர்கள் எத்தனை முற்போக்குடன் இதுபோன்ற எந்த விஷயத்தையும் மதிக்காமல் - துதிக்காமல்,பெரிதுபடுத்தாமல் நாளுக்கு நாள் அறிவியலிலும் விஞ்ஞானத்திலும் வளர்ந்துகொண்டுபோகிறான், நாம் மட்டும்தான் இதுபோன்ற தேவையற்ற மூட நம்பிக்கைகளை  இன்னமும் தலையில் தூக்கி வைத்து கொண்டாடிக்கொண்டு இருக்கின்றோம் என்று சொல்வதையும் கேட்டிருப்போம்.

சமீபத்தில் கேட்க்க நேர்ந்த ஒரு இறை மறுப்பாளரின் சொற்பொழிவில் அவர்கூட பஞ்சாங்கத்தில் சொல்லபட்டிருக்கும் கால  கணிப்புகள் எண் கணக்கு மிகவும் துல்லியமாக இருப்பதை ஒப்புகொள்கிறார்.

எனக்கும் இந்த வியாக்கியானம் சரி என்றுதான் பட்டது சமீப காலம் வரை.

கடந்த மாத தொடக்கத்தில் இருந்து கோலாகலமாக (தள்)ஆடியும் , கொண்டாடியும் குதூகலித்து மகிழ்ந்த கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு இங்கே தொன்னூற்றி ஒன்பது சதவிகிதம் மக்கள் தங்கள் வீடுகளை வண்ண விளக்குகளாலும் , வண்ண சரிகைகளாலும் விதவிதமான பளபளக்கும் அழகு பொருட்களாலும்அலங்கரித்திருந்தனர்.

அவற்றுள் பிரத்தியேகமாக கிறிஸ்மஸ் மரங்களை வீடுகள்தோறும், கடைகள்தோறும், பல்பொருள் அங்காடிகள் தோறும் , வணிக வளாகங்கள் தோறும் அலுவலகங்கள் தோறும் , நகரின் பிரதான சாலைகள், தெருக்கள்தோறும் அமைத்தும் அவற்றில் விதவிதமாக மின்னும் அலங்கார அணிகலங்களாலும் வண்ண மின் விளக்குகளாலும் ஜோடித்து மகிழ்ந்திருந்தனர்.

சரி இதற்கும் இந்த பதிவின் முதல் இரண்டு பத்திகளில் உள்ள செய்திகளுக்கும் என்ன தொடர்பு?

தொடர்பு இல்லாமல் இருக்குமா? சொல்றதுக்குள்ள அவசரபட்டா எப்படிங்க, அததுக்கு ஒரு நேரம் காலம் வரவேண்டாமா?

அதாவது மேலே சொன்ன அலங்காரங்களை விழா தொடங்குவதற்கு எத்தனை நாட்கள் வாரங்கள் அல்லது மாதங்களுக்கு முன்பே கூட செய்யலாமாம், ஆனால் செய்யப்பட்ட இந்த எல்லா அலங்காரங்களையும் விழாமுடிந்த 12 நாட்களுக்குள் கலைத்து, அடுத்த வருடத்திற்கு தேவையானவற்றை பெட்டியில்போட்டு மூட வேண்டுமாம் 
இப்படி இவர்களிடம் ஒரு வினோத (மூட) பழக்கம் ஒன்று இருப்பதை பரவலாக அறிய முடிகிறது.

அப்படி இந்த எல்லா அலங்காரங்களும் விழா முடிந்து பன்னிரெண்டாம் நாள் கடந்தும்  அப்படியே இருக்கும் பட்ச்சத்தில் தங்களுக்கு ஏதேனும் கெட்டது நடக்கும் என்ற தீராத நம்பிக்கையின்மீது  மாறாத பற்று கொண்டவர்களாக கிறிஸ்மஸ் சம்பந்தப்பட்ட அனைத்து அலங்காரங்களையும் குறித்த நாளுக்கு முன் களைவதில் தீவிரமாக இருப்பது விந்தையாக இருந்தாலும் , இது முற்றிலும் சந்தைக்கு வராத உண்மைதான்.

சரி கிறிஸ்மஸ் பண்டிகை அலங்காரங்களை நாள் நட்ச்சத்திரம் பார்த்து களையவேண்டும் என்னும் சிந்தை - பழக்கம்  அறிவிலும் அறிவியலிலும் உலகத்தில் தலை சிறந்து விளங்குவதாக கருதிக்கொள்ளும் இந்த மேற்கத்திய நாடுகளில் எதனால் உருவானது?

ஒருவேளை இப்படி இருக்குமோ?  

அதாவது கிறிஸ்மஸின்  தொடக்கமே ஒரு "வால்" நட்ச்சத்திரம் என்பதில்  ஆரம்பித்ததால் இந்த "நாள்" நட்ச்சத்திரம் பார்க்கும் வழக்கம் உருவாகி இருக்குமோ?

இப்படி நாள் நட்ச்சத்திரம் நல்ல நேரம் பார்க்கும் இவர்களிடம் தம்மை  நாடி வருபவர்களின் எதிர்காலத்தை கணித்து சொல்லும் நாடி ஜோசியர்களும் இல்லாமலா போவார்கள் ?  அதைக்குறித்த தகவலை  பிறகு சொல்கிறேன்.

பின் குறிப்பு:  இவர்களின் பஞ்சாங்க (??) கணக்குப்படி ஜனவரி 5 அல்லது ஆறு தேதிக்குள் இந்த அலங்காரங்களை கலைத்துவிடவேண்டுமாம்.

இதுபோல் நம்ம ஊர்ல அமைக்கப்படும் (விழா) அலங்காரங்களை களைய ஏதேனும் கால அவகாசம் இருக்கின்றதா?

நன்றி. 

(ஒரு நல்ல நாள் பார்த்து)

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ


14 கருத்துகள்:

  1. சில மூட நம்பிக்கைகள் உலகெங்கும் பரவியுள்ளன நண்பரே
    அதற்கு எல்லைகள் கிடையாது

    பதிலளிநீக்கு
  2. (ஒரு நல்ல நாள் பார்த்து)///

    ellaa naalum nalla naale:)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகேஷ்,

      சௌக்கியமா?

      எல்லா நாட்களும் நல்ல நாள்தான் - சரியான கூற்று.

      வருகைக்கு நன்றியும் பொங்கல் வாழ்த்துக்களும்.

      கோ

      நீக்கு
  3. கிறித்துமஸ் அலங்காரங்கள் அப்படியே இருந்தால், அது அவ்வளவு ரசிக்காது. குறிப்பிட்ட காலம், கொண்டாட்டமாக இருந்தால்தான் அதனை வரவேற்பதிலும் உற்சாகம் இருக்கும். சமயத்துல விழா அலங்காரங்கள் 'நகரின் அழகுக்கு இடைஞ்சலாகவும் இருக்கும். அதனால் இந்த வழக்கம் வந்திருக்கலாம். நேரம் காலம் பார்க்க ஆரம்பிச்சாச்சுன்னா அதுக்கு முடிவே கிடையாது. இது எல்லா (மூடப்) பழக்கவழக்கங்களுக்கும் பொருந்தும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை தமிழரே,

      பண்டிகை கொண்டாட்டமும் அலங்காரம், விருந்து எல்லாம் தினமும் இருந்தால் சுவைபடாதுதான்.

      வருகைக்கு நன்றியும் பொங்கல் வாழ்த்துக்களும்.

      கோ

      நீக்கு
  4. இதெல்லாம் ஒரு நம்பிக்கை அடிப்படையில் தொடர்கின்றார்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுரேஷ்,

      இவற்றில் கொஞ்சம் கூட உண்மை இல்லையா?
      வருகைக்கு மிக்க நன்றியும் பொங்கல் வாழ்த்துக்களும்.

      கோ

      நீக்கு
  5. கரந்தையர் அவர்களுக்கு,

    ஆமாம் உண்மைதான்.

    வருகைக்கு நன்றியும் பொங்கல் வாழ்த்துக்களும்.

    கோ

    பதிலளிநீக்கு
  6. வணக்கம்

    மூட நம்பிகைக்கு விடிவு காலம் எப்பதான் வரும்.. பழக்க தோசம்.. எல்லாம் அருமையாக சொல்லியுள்ளீர்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  7. ரூபன்,

    வருகைக்கும் தங்களின் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிகளும் பொங்கல் நல வாழ்த்துக்களும்.

    கோ

    பதிலளிநீக்கு
  8. இதுவும் ஒருவகை நம்பிக்கைதான். இங்கும் கொலு வைப்பது ஒரு குறிப்பிட்ட நாளில் தான் தொடங்குவார்கள், முடிப்பதும் அப்படியே. அமாவாசை அன்று அடுக்க ஆரம்பிப்பார்கள். அது போன்று முதல் நாள் வைக்க முடியாதவர்கள் இடையில் நாள் தேர்ந்தெடுத்து வைப்பார்கள். முடிக்கும் நாள் அதாவது 10 வது நாள் எல்லா பொம்மைகளையும் படுக்க வைத்துவிடுவார்கள். அது போன்று ஒற்றை எண்ணில்தான் படி அமைப்பார்கள். இப்படிப் பல உண்டு இங்கும். நம்மூரைப் போல உலகம் முழுவதும் ஏதேனும் ஒரு வகையில் மூடநம்பிக்கைகள் நிறைய இருக்கத்தான் செய்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பிற்கினிய நண்பர்களே,

      வருகைக்கும் சிறப்பு தகவல்களுக்கும் மிக்க நன்றிகள்.

      இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

      கோ

      நீக்கு
  9. நம்பிக்கைகள் எல்லா இடத்திலும் உண்டோ.

    பதிலளிநீக்கு