மறைந்தாலும் மறையாது !!
நண்பர்களே,
நேற்றைய பதிவினூடே, (கண்மணிபோல்) புத்தாண்டின் முதல் நாள் நான் கேட்ட பாடல் ஒன்றை நாளை சொல்வதாக சொல்லி இருந்தேன் அல்லவா? அதை பற்றித்தான் இன்றைய பதிவு.
இறைவனுக்கு நன்றி சொல்லிவிட்டு குளிக்க செல்லுமுன் கணனியில் ஒரு பாடலை தவழவிட்டு அதன் பின்னணி இசை வெள்ளத்தில் மூழ்கியபடியே தலை முழுகி குளிக்கலாம் என்றெண்ணி மடி கணணியை உயிர்பித்தேன்.
பொதுவாக நான் அவ்வளவாக பாடல்களை கேட்க்கும் வகையாரா கிடையாது என்றாலும் இதுபோன்ற சிறப்பு நாட்களில் மன ரம்மியமாகவேண்டி பாடல்களை கேட்பது உண்டு.
அடிக்கடி பாடல்கள் கேட்க்காததினால் சில புதிய பாடல்களின் வரவும் எனக்கு அறிமுகம் இல்லை.
எனவே எனக்கு தெரிந்த சில வார்த்தைகளை கொண்டு பாடல்களை தேடுவதுதான் என் நிலைமை.
அப்படி எப்போதோ கேட்ட பாடலின் வார்த்தை ஒன்று என் உள் மனதில் இருந்த கீறல் விழுந்த நினைவு பதிவேட்டில் கொஞ்சம் மினுமினுத்தது.
சரி அதையே போட்டு பார்ப்போம் என்று நினைத்து , "கண்ணுக்கு எட்டாத" ...என தட்டச்சு செய்தேன்.
ஆனால் அந்த வார்த்தையில் தொடங்கும் எந்த பாடலும் என் கண்ணுக்கு எட்டவில்லை.
மாறாக , இறை தியான பாடல்களிலும் இதுபோன்றதொரு படிப்பினையையும் பாடத்தையும் தரவல்ல வேறொரு பாடல் இருக்க முடியுமா என்று வியக்கும் வண்ணம் ஒரு காணொளி பாடலாக காணப்பட்ட படலை கேட்டு மகிழ்ச்சி இரட்டிப்பாக மெய் மறந்துபோனேன்.
அந்த பாடலின் முதல் வார்த்தையும் "கண்" என்றே ஆரம்பித்தது, எனவே அதன் மீது என் கண் பார்வை படிந்தது.
அந்த பாடலை நான் மெய் மறந்து காலத்தின் சூழ்நிலையோடு ஒன்றிணைத்து கேட்டு மகிழ்ந்ததை நீங்களும் கேட்க்கனுமா?
இதோ அந்த பாடல் உங்களுக்காக:
கண் போன போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா
நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும்
நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்
ஊர் பார்த்த உண்மைகள் உனக்காக வாழும்
உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும்
பொய்யான சிலபேர்க்கு புது நாகரீகம்
புரியாத பலபேர்க்கு இது நாகரீகம்
முறையாக வாழ்வோர்க்கு எது நாகரீகம்
முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரீகம்
திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்
வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்
"இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்"
இன்னும் சில நாட்களில் அவரது 99 வது பிறந்த நாள் விழா கொண்டாடபோகும் இந்த தரணத்தில் இந்த பாடலின் வாயிலாக அவரது தீர்க்கதரிசன வாக்காக இந்த பாடலை கேட்பதும் பொருத்தம்தான்.
அந்த பாடலில் அவர் கூறுவதுபோல் அவர் மறைந்தாலும் இன்றும் நம்மிடையே மங்கா புகழுடன் வாழ்ந்து கொண்டு இருக்கும் அந்த மூன்றெழுத்து மந்திர பெயர் கொண்ட மாமனிதரை நேரில் பலமுறை பார்த்து சிலாகித்த மகிழ்வுடன் இந்த பாடலை வருடத்தின் துவக்க நாளில் கேட்டு மகிழ்ந்ததை இந்த ஆண்டு முழுவதும் என் மனம் அசைபோடும் ஆசையோடும்.
அந்த பாடலில் அவர் கூறுவதுபோல் அவர் மறைந்தாலும் இன்றும் நம்மிடையே மங்கா புகழுடன் வாழ்ந்து கொண்டு இருக்கும் அந்த மூன்றெழுத்து மந்திர பெயர் கொண்ட மாமனிதரை நேரில் பலமுறை பார்த்து சிலாகித்த மகிழ்வுடன் இந்த பாடலை வருடத்தின் துவக்க நாளில் கேட்டு மகிழ்ந்ததை இந்த ஆண்டு முழுவதும் என் மனம் அசைபோடும் ஆசையோடும்.
நன்றி.
மீண்டும் ச(சி)ந்திப்போம்
கோ
நான் மிகவும் கேட்டு ரசிக்கும் பாடல்
பதிலளிநீக்குநன்றி நண்பரே
கரந்தையார் அவர்களுக்கு,
பதிலளிநீக்குநன்றி
எனக்கும் மிகவும் பிடித்த பாடல்! இசையும் வார்த்தைகளும் கைகோர்க்க எம்.ஜி.ஆர் சவுகார் ஜோடியின் நாட்டியமும் ரசிக்க வைக்கும். பகிர்வுக்கு நன்றி!
பதிலளிநீக்குநன்றி
நீக்குமிக மிக அருமையான பாடல். இங்கு எஃப் எம் இல் மதியம் ரெட்ரோ பாடல்கள்..அதில் இது பெரும்பாலும் ஏதெனும் ஒரு எஃப் எம் ல் ஒலிபரப்பாகும்...
பதிலளிநீக்குநன்றி
நீக்குநான் பெரிதாக பாடல்கள் கேட்கும் பழக்கம் இல்லை. ஆனால் தாங்கள் குறிபிட்டுள்ள பாடல் வரிகள் அருமை தான். வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குநன்றி
நீக்கு