நன்றி - நம்பிக்கை
நண்பர்களே,
புத்தாண்டின் முதல்நாள் காலையில் ,நம்மில் பெரும்பான்மையானோர், நல்ல செய்திகள் கேட்பது அல்லது நல்ல விஷயங்கள்அறிவது , மங்களகரமான சூழல் நமை சூழ்ந்திருக்க விரும்புவது
, நல்லோர் முக தரிசனம் செய்வது , நல்லோர் மொழி அல்லது நேசத்திற்குரியவரின் குரல் கேட்பது , பெற்றோர் பெரியோர்களை வணங்குவது,தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவது , அல்லது நல்ல கருத்துமிக்க பாடல்களை கேட்பது இப்படி எல்லாமே நன்மையான - நேர்மறையான விஷயத்துடன் புத்தாண்டை துவக்கவே விரும்புவோம்.
, நல்லோர் முக தரிசனம் செய்வது , நல்லோர் மொழி அல்லது நேசத்திற்குரியவரின் குரல் கேட்பது , பெற்றோர் பெரியோர்களை வணங்குவது,தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவது , அல்லது நல்ல கருத்துமிக்க பாடல்களை கேட்பது இப்படி எல்லாமே நன்மையான - நேர்மறையான விஷயத்துடன் புத்தாண்டை துவக்கவே விரும்புவோம்.
நானும் காலையில் எழுந்து,கண்களை மூடிக்கொண்டு மானசீகமாக இறைவனுக்கு, இந்த புதிய ஆண்டை மீண்டும் ஒருமுறை என் வாழ்வில் காண கிருபை புரிந்ததற்கு நன்றி தெரிவித்தேன்.
நன்றி தெரிவித்ததோடு, கடந்த ஆண்டு முழுதும் என் வாழ்வின் எல்லா ஏற்ற இறக்கங்களின் போதும், சுக துக்கங்கள் நேர்ந்தபோதும், பயணங்களின்போதும்,பணியின்போதும்,சுகவீனமாயிருந்த நேரங்களிலும்,மன கஷ்டங்களின் போதும் சோர்வுற்ற வேளைகளிலும் என்னோடு இருந்து இந்த எல்லா சூழ்நிலைகளிலும் நான் சிக்கி மூழ்கி நிர்மூலமாகதபடி என் கரம் பிடித்து, துன்பங்களையும் வேதனைகளையும் சுகவீனத்தையும் தாங்கிக்கொள்ள - அவைகளை மேற்கொள்ள சக்தியையும் மன உறுதியையும் கொடுத்து என்னை எல்லா இக்கட்டுகளில் இருந்தும் , இன்னல்களில் இருந்தும், விலக்கி கண்மணிபோல் காத்து வழி நடத்தியமைக்கு நன்றியையும் தெரிவித்தேன்.
ஏற்ற நேரத்தில் எனக்கு தேவையான எல்லா உதவியையும் அளித்த அந்த பரம்பொருளுக்கு மனதார மீண்டும் ஒருமுறை நன்றி சொல்லிவிட்டு,
இந்த புதிய ஆண்டிலும் உமது கரம் என்னை விலகாமல் இறுக பற்றிகொள்ளவேண்டும் என்ற வேண்டுதலையும் ,என்னுடைய உற்றார், உறவினர், இன ஜன பந்துக்கள், நண்பர்கள் மட்டுமின்றி , உலகில் வாழும் அனாதைகள், விதவைகள், வீடின்றி தவிப்போர்,வியாதியில் இருப்போர் , உணவின்றி இருப்போர் அனைவருக்கும் இந்த புதிய ஆண்டு ஒரு மகிழ்ச்சியான ஆண்டாக அமையவேண்டும் என என் வேண்டுதலையும் வைத்துவிட்டு கண்களை திறந்தேன்.
(இறை வணக்கம் முடிந்ததும் வருட பிறப்பதுவும் காலையில் ஒரு நல்ல பாடலை கேட்கணுமே என்று கணனியில் கண்காணா தெய்வமே.. என்ற பாடலை கேட்கலாம் என்று தட்டச்சி செய்ய ... எனக்கு கிடைத்த பாடல்.... அதை நாளை சொல்கிறேன்.)
மனதார வேண்டும் எல்லா வேண்டுதலையும் நிறை வேற்றுபவனே இறைவன் என்றாலும் , யார் யாருக்கு என்னென்ன , எப்போது, எவ்வளவு கொடுப்பதென்பதை அவன்தானே முடிவு செய்யவேண்டும்.
அப்படி நம்மில் எல்லோருக்கும் ஏற்ற நேரத்தில் ஏற்ற நன்மைகளை எல்லாம் வல்ல இறைவன் அருள் பாலிப்பான் என்ற நேர்மறையான நம்பிக்கையோடு இந்த பதிவை நிறைவு செய்கிறேன்.
பின் குறிப்பு:
அருமை நண்பர் விசு அவர்களின் உந்துதலாலும் உங்கள் அத்தனை அன்புள்ளங்களின் அளப்பரிய ஆதராவாலும் இதுகாறும் அவ்வப்போது எழுதி வந்த பதிவுகள் எண்ணிக்கையில் இத்துடன் 200ஐ எட்டிப்பிடித்திருக்கின்றது என்பதை எண்ணிப்பார்க்கையில் வியப்பு மேலிடுகிறது, விந்தை என் சிந்தையை சிலிர்ப்படைய செய்கிறது.
ஆதரவளித்த - அளித்துகொண்டிருகின்ற அத்தனை அன்புள்ளங்களுக்கும் நன்றிகள்.
மீண்டும் ச(சி)ந்திப்போம்
கோ
200 ரொம்ப கம்மி 2000 பதிவுகள் எழுதி சாதனை படைக்க வாழ்த்துக்கள் சார்.
பதிலளிநீக்குமகேஷ்,
நீக்குஉங்களைபோன்றோரின் தொடர் ஊக்கமே என்னை இந்த எழுத்து தளத்தில் தொடர்ந்து ஓட செய்கின்றது.
உங்களின் பேராதரவிற்கும் உற்சாகமூட்டலுக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.
2000.... கொஞ்சம் த்ரீ.... மச்சாக தோன்றவில்லை?
வாழ்த்துக்கள்.
நன்றி கோ
வணக்கம் அரசே,
பதிலளிநீக்குஆஹா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 200 பதிவிற்கு. நீங்களும் நூல் வெளியிடலாமே, தங்கள் நண்பர் சொல்லவில்லையா? ம்ம் இன்னும் அவர் நூலையே படிக்கல,,
இந்த புது ஆண்டும் தங்களுக்கும், தங்கள் உறவுகளுக்கும் எல்லா நலங்களும் வளங்களும் வழங்க உங்களுக்காக இறையிடம் வேண்டுகிறோம்.
வாழ்த்துக்கள்,,,,,
தொடருங்கள் இன்னும் பல நல்ல பதிவுகளை,,,,,,,,,,,
பேராசிரியரே,
நீக்குஇந்த 200 ஐ அடைந்ததில் உங்களுக்கும் பங்குண்டு, எப்படி எனில், என்னுடைய ஏறக்குறைய அனைத்து பதிவுகளிலும் உங்கள் பின்னூட்டமெனும் வருகையின் பாத சுவடுகள் பதிதிந்ததினால் உற்சாகத்துடன் எழுத முடிந்தது.
இன்னும் உங்களின் ஆலோசனைகள், திருத்தங்கள், வழி காட்டுதல் தொடருமாயின் மேலும் சில பதிவுகள் எழுதுவேன் என்று நம்புகிறேன்.
நண்பரின் புத்தகத்தையே இன்னும் படிக்க முடியாத அளவிற்கு நீங்களும் பிசியாகத்தான் இருக்கின்றீர்கள் போல் தெரிகிறது. நீங்கள் எப்போது ஓய்வாக இருக்கின்றீர்கள் என்று தெரிந்தால் அப்போது யோசிக்கலாம் புத்தக வெளி ஈட்டை பற்றி.
வீட்டில் அனைவரும் சுகம் தானே?
வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றிகள்..
கோ
200 ஐத் தொட்டமைக்கு வாழ்த்துகள் நண்பரே விரைவில் 300 ஐத் தொடவும் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குநண்பா,
நீக்குஎனது ஆரம்ப கால பதிவு பயணத்திலிருந்து கூடவே துணையாக என்னோடு பயணிக்கும் உங்களின் ஆலோசனைகளும் , அறிவுரைகளும் இந்த எண்ணை அடைய பெரிதும் உதவியது என்றால் அது மிகை அல்ல.
தொடர் கண்காணிப்பிற்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்.
moon ஐ தொட்டதே யாருன்னு பதில் தெரியல இதுல 300 ஆ... முயற்சிக்கிறேன்.
நட்புடன்
கோ
தாமதமான வாழ்த்துகளுக்கு மன்னிப்பு முதலில். மனமார்ந்த வாழ்த்துகள் பாராட்டுகள் டபுள் சென்ட்சுரி அடித்தமைக்கு!! இன்னும் பல சென்ட்சுரிகள் அடிக்க வாழ்த்துகள்!
பதிலளிநீக்கு