பின்பற்றுபவர்கள்

வியாழன், 14 ஜனவரி, 2016

மஞ்சு விரட்டு!!

விரட்டியது யார்??

நண்பர்களே,

மஞ்சு விரட்டுக்குபோன  இளைஞர் ஒருவரை  போலீஸ் வலைவீசி தேடுவதாக ஒரு தகவல் கிடைத்தது.


அதான் மஞ்சு விரட்டுக்கு மத்திய அரசே அனுமதி கொடுத்துவிட்டதே, பின்னே ஏன் அந்த இளைஞரை போலீசு தேடுகிறது?

மத்திய அரசே அனுமதித்திருந்தாலும் சுப்ரீம் கோர்ட்டு தடை விதிச்சிடுச்சே.

அவர் மஞ்சு விரட்ட தடையை மீறி பக்கத்து ஊருக்கு போனாராம். 

அதனால் என்ன? பக்கத்து ஊருக்குத்தானே போனார், மற்றபடி மஞ்சுவிரட்டில் பங்கேற்கவில்லையே. 

இல்லைங்க மஞ்சு விரட்டில் அவருக்கு பங்குண்டாம்.

அப்போ தடையை மீறி மஞ்சு விரட்டில் அந்த இளைஞர் ஈடு பட்டதால் இந்த போலீஸ் தேடலா?

கோர்ட்டு  தீர்ப்புக்கு எதிரா யாருமே எதுவும் சொல்லவோ செய்யவோ கூடாதுதான் எனினும் இப்போ உள்ள இளைஞர்களுக்கு இந்த விளையாட்டு என்பது நம் தமிழ் கலாச்சாரத்தின் ஒரு அங்கம்  என்பது  கொஞ்சம் கொஞ்சமாக மறந்துபோய் பிற்கால சந்ததியினருக்கு நம் பண்டைய தமிழரின் அடையாளங்களான காதல் , வீரம் போன்றவற்றை கல்வெட்டுகளிலும் இலக்கிய சுவடுகளில் மட்டுமே பார்த்து தெரிந்துகொள்ளவேண்டிய சூழ்நிலை உருவாகுமே?

காதலும் வீரமும் நம் தமிழ் மறவரின் இரு கண்கள் அல்லவா?

கண்களால் வந்ததுதான் இத்தனை பிரச்சனைகளுக்கு காரணம்.

என்ன இருந்தாலும் இந்த சின்ன விஷயத்திற்குபோய் , போலீசு , வலை வீச்சி, தேடல் போன்றவை கொஞ்சம் அதிகம்தான்.

என்னங்க நீங்க புரியாம அந்த இளைஞருக்கு சப்போர்ட் பண்ணி பேசிக்கொண்டு இருக்கின்றீர்கள், அவர் என்ன செய்தார் தெரியுமா?

 அப்படி என்ன செய்து விட்டார்?

வரம்புமீறி துன்புறுத்தினாரா அல்லது கொடுமை இழைத்தாரா?

வரம்பு மீறலீங்க , வரப்பு மீறினாராம்.

என்னங்க சம்பந்தமில்லாமல் ஏதோ சொல்றீங்க.

உங்களுக்கு கொஞ்சம் விலாவரியா சொன்னாத்தான் புரியும்போல இருக்கு.

அதாவதுங்க அந்த பையன் ரொம்ப காலமா ரகசியமா ஒரு பெண்ணை காதலித்து வந்திருக்கின்றான், இப்போ விழாக்காலம்  என்பதால் அந்த பெண்ணை பார்த்து தான் அவளுக்காக வாங்கி இருந்த கால் கொலுசை கொடுத்துவிட்டு அப்படியே கொஞ்சம் நேரம் யாருக்கும் தெரியாம சந்தித்துவிட்டுவரலாம்னு அந்த பொண்ணோட வீட்டுப்பக்கம் போனவன் அந்த பெண்ணோட அப்பா கண்ணுல மாட்டிகிட்டானாம்.

அதை தொடர்ந்து ஏற்கனவே பலமுறை எச்சரித்திருந்த அந்த பெண்ணின் அப்பா கொடுத்த புகாரின்பேரில் இப்போ போலீசு தேடுதான்.

சரி அதுக்கும் இந்த தலைப்புக்கும் என்ன சம்பந்தம்?

இருக்காதா பின்னே, அந்த பெண்ணோட பேரு மஞ்சுவாம்.

ஓ...... மேட்டர் அப்படி போகுதா? பொருத்தமான தலைப்புதான்.

மஞ்சுவிற்கு ஒரு செய்தி:

மஞ்சு, இனி "அவர்" வந்தால் உன் அப்பா பார்க்குமுன் அவரை விரட்டிவிடு .

அப்பா மனசு மாறனும் அடுத்த பொங்கலுக்குள் உங்களுக்கு திருமணம் நடக்கனும்னு இந்த மாட்டு  பொங்கல் அன்று மனசார உங்களுக்கா "கோ" மாதா கிட்ட வேண்டிகொள்கிறேன், அதுவரையில் அவர் நினைப்பு உன் மனசில் கொலுசொலியாக  ரீங்காரிக்கட்டும்.

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ


10 கருத்துகள்:

  1. அட பாவி மனுசா.. நானே கோமாதா வூட்டுகாருக்கு ( நன்றி மலரின் நினைவுகள் ஆசிரியர்) சகுனம் சரியில்லைன்னு சோகாமா குந்தின்னு கீரென். இந்தாண்ட வந்து.. மஞ்சு விரட்டு.. அது இதுன்னு..

    சரி அது கடக்கட்டும்..

    பொங்கலோ பொங்கலுங்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னா நண்பா, சவுக்கியமா கீரியா? என்னமா சோக்கா சொல்றப்பா நீ.
      கோமாதாவோட ஊட்டுக்காரனாண்ட சோகத்த மறந்துட்டு ஊட்டுக்காரியோட சந்தோசமா ஒரு நாலாவது நாட்டு நடப்ப(!!??) பத்தி பேசி சிரிக்க சொல்லி வையி.

      பொங்கல் வாழ்த்துக்கள்.

      கோ

      நீக்கு
  2. பொங்கல் வாழ்த்துக்கள்.

    கோ

    பதிலளிநீக்கு
  3. மஞ்சு, கால் கொலுசு, பையன்.
    ஹாஹாஹா.

    வாய்க்கு ருசியா பொங்கல் சாப்டாச்சு. செம டேஸ்ட்:)
    அப்டியே குட்டி தூக்கம்:)))

    பதிலளிநீக்கு
  4. மகேஷ்,

    குட்டி தூக்கம் போடுங்க பரவாயில்லை, ஆனால் கனவில் "அந்த மஞ்சு" வரகூடாது, ஏன்னா அதுக்கு வேற ஆளு இருக்கான். என்ன, இப்போ கொஞ்சம் தலை மறைவா இருக்கான்.

    வருகைக்கு மிக்க நன்றி.

    வாழ்த்துக்கள்.

    கோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. ம்ம்! ஓ! கதை அப்படி போகுதா?
      நீங்கள்தான் அரசர் ஆச்சே. அந்த ரெண்டு பேரையும் சேர்த்து வைக்கலாமே:)))

      நீக்கு
  5. மகேஷ்,

    கண்டிப்பாக சேர்த்து வைக்கிறேன் அடுத்த வருட பொங்கல் பதிவில்.

    நலம்தானே?

    வருகைக்கு மிக்க நன்றி.

    கோ

    பதிலளிநீக்கு
  6. மஞ்சு விரட்டு இப்படி கூடவா நல்லா இருக்கு கதை
    வாழ்த்துக்கள் அரசே

    பதிலளிநீக்கு
  7. பேராசிரியருக்கு,

    வருகைக்கும் பாராட்டு வார்த்தைகளுக்கும் நன்றிகள்.

    கோ

    பதிலளிநீக்கு