உடனே அவளை குரல் மூலம் எழுப்பி, " நீ பார்ப்பதற்கு களைப்பாக இருக்கின்றாய் என நினைக்கின்றேன் எனவே நான் அமர்ந்திருக்கும் ஜன்னல் ஓரமாக உட்கார்ந்துகொள்" என சொல்லி என் இடத்தை கொடுக்க எழுந்தேன்.
ஒவ்வொருமுறையும் நான் துபாய் என்று தட்டச்சு செய்யும்போதெல்லாம் முதலில் டுபாய் என்றுதான் எழுத்துக்கள் பதிவாகின்றன பிறகே அவற்றை துபாய் என்று மாற்றிவருகிறேன்.
மெட்ரோ ரயிலில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு சில பெட்டிகளும் ஆண்களுக்கு என்று சில பெட்டிகளும் நியமிக்க பட்டிருக்கின்றன. தனித்தனி பெட்டிகள் என்றாலும் எல்லா பெட்டிகளும் ஒரே வரான்டாபோல்தான் இருக்கும் .
1960 களில் துபாய் சாலைகளில் ஒரே நேரத்தில் எதிரும் புதிருமாக ஐந்து வாகனங்கள் பயணிக்கும் நேரங்கள் போக்குவரத்து காவலர்களுக்கு அவற்றை ஒழுங்கு படுத்துவதில் பெரிய சவாலாக அமைந்திருந்தது என்றால் அதை நம்ப முடியுமா?