பின்பற்றுபவர்கள்

சனி, 30 செப்டம்பர், 2017

இமைகளின் பாரம்....

பின்னிரவின்  நேரம்...... 

நண்பர்களே,.

நேற்றைய பதிவிலிருந்து தொடர......யுவதியின் அவதி ..

உடனே அவளை குரல் மூலம் எழுப்பி, " நீ பார்ப்பதற்கு களைப்பாக இருக்கின்றாய் என நினைக்கின்றேன் எனவே நான் அமர்ந்திருக்கும் ஜன்னல்  ஓரமாக உட்கார்ந்துகொள்" என சொல்லி என் இடத்தை கொடுக்க எழுந்தேன்.

ஆனால் அந்த பெண்ணோ, ஆமாம் களைப்பாகத்தான் இருக்கின்றேன், எனினும் பரவாயில்லை நான் இங்கேயே அமர்ந்துகொள்கிறேன் என  எனக்கு நன்றியை சொல்லிவிட்டு அங்கேயே அமர்ந்துகொண்டிருந்தாள்.

நானும் அவ்வப்போது அவள் கேழே விழுந்துவிடாதவண்ணம் கண்காணித்துக்கொண்டே இருந்தேன் அவளும் கொஞ்சம் சுதாரித்தபடியே   தூக்கத்தோடு கடுமையாக போராடி போராடி தோற்றுகொண்டே இருந்தாள்..

நீண்ட பயணத்திற்கு பிறகு நான் இறங்கும்போது  அவளை எழுப்பி எனக்கு வழிவிடச்சொல்லிவிட்டு , " பார்த்து போ" என சொல்ல அவளும் சரி மிக்க நன்றி என சொல்லி புன்னகைத்தாள்.

அந்த நாள் முழுதும் அந்த பெண்ணின் தூக்கத்தை நினைத்து பல சிந்தனைகள் என் நெஞ்சில் உதித்துக்கொண்டே இருந்தன.

இப்போதெல்லாம், பள்ளி கல்லூரி மாணவர்களின் கல்விச்சுமை , ப்ராஜக்ட் வேலைகள், வீட்டுப்பாடங்கள்  கூடிக்கொண்டே போவதால் இரவு வேளைகளில் நீண்ட  நேரம் கண் விழித்து படிப்பதால் இப்படி மாணவர்கள் காலை நேரத்தில் கடுமையான களைப்பிற்குள்ளாகின்றனரோ?

அல்லது இப்போதுள்ள நவீன தொழில் நுட்ப தகவல் பரிமாற்ற கருவிகள், - கைபேசி, கணினி போன்றவற்றில் மூழ்கி, பலதரப்பட்ட வலை தலங்களையும் ஊடக செய்திகளையும் சினிமா, நாடகங்கள், நண்பர்களோடு இரவு முழுவதும் அரட்டை அடித்துக்கொண்டு சரிவர தூங்காமல் அடுத்த நாள் அதீத களைப்புடன் காணப்படுகின்றனரோ என்ற கவலை நிறைந்த எண்ணமும் மனதில் தோன்றியது.

காலையில் பட்டாம் பூச்சிகளைப்போல , பறவைகளைப்போல, மான்களைப்போல, முயல்களைப்போல , அன்றலர்ந்த பூக்களைப்போல புதிய  உற்சாகத்துடன், புத்துணர்வுடன், மகிழ்ச்சியுடன் பள்ளிக்கும் கல்லூரிக்கும் செல்லவேண்டிய மாணவர்கள் , பல சமூக சீர்கேட்டு பாதைகளை தேர்ந்தெடுத்து அவற்றில் தங்களின் நேரத்தையும் சக்த்தியையும் ஆரோக்கியத்தையும் தொலைத்துவிட்டு, அடுத்த நாளுக்கான புதிய  சவால்களை எதிர்கொள்ள திராணி இல்லாமல் துவண்டும் சோர்ந்தும்போகும் நிலை கண்டு வேதனையாக இருந்தது.

இதில் மற்றோரு விபரீதமும் கூடவே கைகோர்த்திருப்பதை இவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லையோ எனவும் தோன்றுகின்றது.

அதாவது இப்படி பொது இடங்களில் தன்னை மறந்து தூங்கிக்கொண்டிருக்கும்போது, அவர்களுக்கெதிராக சமூக விரோத சீர்கேடுகள், கொடுமைகள் நிகழ்வதை எப்படி அவர்கள் எதிர்கொள்ளமுடியும் அல்லது தடுத்துக்கொள்ளமுடியும் அல்லது அதிலிருந்து தப்பிக்க  முடியும்?

இந்த நிலை மாற, வளர்ந்த பிள்ளைகள் இருக்கும் வீடுகளில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் செயல்பாட்டில் கொஞ்சம் கவனம் செலுத்துவதும், சரியான நேரத்தில் உறங்க செல்கின்றனரா என்றும் , பின்னிரவு நேரமாகியும் சமூக வலைத்தளங்களிலும், தேவையற்ற காட்சி   ஊடகங்களிலும்  மூழ்கி இருக்கின்றனரா என்று கண்காணித்து கொஞ்சம் கண்டிப்புடன் வரையறை படுத்துவது நல்லது என்று நினைக்கின்றேன்.

(பெண்)பின் குறிப்பு : யாரு பெத்த புள்ளையோ... இன்றைக்கு இந்த பதிவு  மூலம் பலரது கண்களை திறக்க   எனக்கு வாய்ப்பு தந்தது.

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ.

10 கருத்துகள்:

  1. oru velai antha maanavi athikaalaiyil elunthurithu andraiya thinam nadakka irukkum examku padikka nernthirukkalaam ennavo?!!


    petrorukkum;pillaikalukkum nalla arivurai sir:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றி மகேஷ்.

      கோ

      நீக்கு
  2. முடிவில் தந்த தகவல் பலனளிக்கும் வகையில் இருக்கிறது நண்பரே...

    மேலே தந்திருக்கும் சுட்டி தவறாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு மிக்க நந்திகள். சுட்டியில் தவறு என சுட்டிக்காட்டியதற்கும் நன்றி, அது என்ன தவறு என கொஞ்சம் விவரமாக சுட்டி காட்டி இருந்தால் திரு( ந்) த்த வசதியாக இருக்கும்.

      கோ

      நீக்கு
  3. அனைவரும் பின்பற்றவேண்டிய, அறிந்துகொள்ளவேண்டிய பாடம் ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அய்யாவின் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றிகள் .

      கோ

      நீக்கு
  4. நல்ல பதிவு கோ! ஆமாம் பல இளைஞர்கள் இரவு கண் விழித்து படிப்பு மட்டுமில்லாமல் நீங்கள் சொல்லியிருப்பது போல சரியான நேரத்தில் உறங்காமை இன்னும் பல எதிர் விளைவுகளை விதைக்கிறது. பெற்றோர் கவனத்தில் கொள்ள வேண்டியது மிகவும் இன்றியமையாதது... நல்ல விழிப்புணர்வுப் பதிவு...ஜஸ்ட் ஒரு சிறு பெண் உங்கள் பக்கத்தில் சுறு சுறுப்பாக இருக்க வேண்டிய நேரத்தில் சோர்ந்து தூக்கத்துடன் இருப்பதை வைத்து மிக அருமையான பதிவைக் கொடுத்தமைக்குப் பாராட்டுகள் கோ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி.

      நம் ஒவ்வொருவரின் அன்றாட வாழ்வில் "ஜஸ்ட் ஒரு சின்ன..." என்று நாம் நினைத்து பாராமுகமாக இருக்கும் நிகழ்வுகளும் செயல்களும் நமக்கு எத்தனை பெரிய பாடங்களையும் கொடுக்கக்கூடியவை, அவற்றை அலட்ச்சிய படுத்த கூடாது என்பதையும் உங்களின் பின்னூட்டம் வாயிலாக அறிந்துகொண்டேன்.

      மிக்க நன்றிகள் .

      கோ

      நீக்கு