ராமர் கேடு!!
நண்பர்களே,
முதலில் இருந்து வாசிக்க வரையறை-வரைமுறை ...
மெட்ரோ ரயிலில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு சில பெட்டிகளும் ஆண்களுக்கு என்று சில பெட்டிகளும் நியமிக்க பட்டிருக்கின்றன. தனித்தனி பெட்டிகள் என்றாலும் எல்லா பெட்டிகளும் ஒரே வரான்டாபோல்தான் இருக்கும் .
ஆண்களுக்குரிய பெட்டிகளில் பெண்கள் மற்றும் சிறார்கள் பயணிக்கலாம். ஆனால் பெண்களுக்குரிய பெட்டிகளில் ஆண்கள் ஏறினாலும் துரிதமாக ஆண்கள் பெட்டிக்கு மாறிவிடவேண்டும்.
ஏற்கனவே சொன்னதுபோல் ஒரே வாசலில் ஏறினாலும் அவை ஒரே பெட்டிபோல இருந்தாலும் பெட்டியின் தரையில் ஒரு இளஞ்சிவப்பு கோடு வரையப்பட்டிருக்கும். ஆண்கள் அந்த கோட்டை கடந்து நிற்பது அமர்வது மட்டுமல்ல அந்த கோட்டின் மீது கால் கூட வைக்கக்கூடாது.
இந்த விஷயமரியாத நான் பெண்களுக்கான பெட்டியில் ஏறியதுமல்லாமல், பெண்கள் அமரும் சீட்டில் சென்று அமர்ந்து கால் மேல் கால் போட்டுகொண்டு நண்பருக்கு தொலைபேசியிலும் கால் போட்டுகொண்டு ஒய்யாரமாக பயணமாகிக்கொண்டிருந்தேன்.
எனக்கு அடுத்த பெட்டியில் அமர்ந்திருந்தவர் என்னை பார்த்து இங்கே வந்து அமருங்கள் என்று சொல்லி அவர் எழுந்து எனக்கு இடம் கொடுக்க முயற்சிக்க, பெருந்தன்மையுடன் அதனை மறுத்துவிட்டு அதே இருக்கையில் அமர்ந்திருந்த எனக்கு, அடுத்த ஸ்டேஷனில் ஏறிய டிக்கட் பரிசோதகர் என்னை பார்ப்பதற்குள் எனக்கு சீட் கொடுக்க முன்வந்தவர், என் முன் இருந்த அந்த இளஞ்சிவப்பி எல்லை கோட்டையும், கருப்புக்கோட்டு அணிந்திருந்த பரிசோதகரையும் மாறி மாறி காட்டி சைகை செய்தார்.
முழுமையாக அர்த்தம் புரியவில்லை என்றாலும், ஏதோ வில்லங்க சொதப்பலோ என்றெண்ணி.. எழுந்து கோட்டை தாண்டி அந்த நபர் இருந்த இடத்திற்கு வந்து நிற்க அவர் சொன்னார், அது பெண்கள் மட்டுமே பயணிக்கவேண்டிய பெட்டி.
தப்பித்தவறி ஆண்கள் அங்கே இருப்பதை பரிசோதகர் பார்த்துவிட்டால் கடுமையான அபராதம் என்று எச்சரித்து தாம் அடுத்த ஸ்டேஷனில் இறங்கப்போவதாக சொல்லி அவரிடத்தில் என்னை அமர்த்திவிட்டு புன்னகித்தார்.
ராமாயணத்தில் கோடு சீதைக்குத்தான் இங்கே கோடு தாண்டினால் ராமனுக்கு கேடு.
நான் அசடு வழிந்ததை சி சி டீவி பார்த்திருக்கும் என்றாலும் என் மீசையில் மண் ஒட்டவில்லை.
அதேபோல பயண நேரம் முழுவதிலும் சுயிங்கமோ எந்த உணவையோ பாணத்தையோ பயன்படுத்தக்கூடாது ,மெட்ரோவில் தூங்கிக்கொண்டு சென்றாலும் பெரும்தொகை அபராதம்.
பெண்கள் பெட்டி பக்கம் தவறுதலாக நின்றுகொண்டுபோவது மட்டுமின்றி ரயிலில் எதையாவது மென்றுகொண்டு விதிமுறை மீறலில் சிக்குபவர்கள் நூற்றுக்கு நூறு ராமர்களே.
ரயிலில் ஏறி சன்னல் ஓரமாக அமர்ந்து பராக்கு பார்த்துக்கொண்டு செல்லலாமே தவிர பான் பராக்கு சுவைத்துக்கொண்டு நம்ம ஊர் ரயில்போல் நினைத்து , நனைத்து, குதப்பி, துப்பி, மெழுகி போவதுபோல் செய்தால் அபராத தொகை மட்டுமல்லாமல் நம் பயணம் சிறையில் முடியும்படி ஆகிவிடும் என்பதையும் அறிந்து தொடர்ந்து பயணித்தேன்.
இப்போது புரிந்தது இத்தனை தூய்மையாகவும் பளிச்சென்றும் புத்தம்புதிகாக ரயில் நிலையமும் ரயில் வண்டிகளும் முன்னணியில் காட்சியளிப்பதன் பின்னணி காரணம் அங்கே இருக்கும் கடுமையான வரையறையும், வரைமுறையும் அதனை செயலாக்கும் நடைமுறையும் என்று.
சரி.. பயணம் எதை நோக்கி?
பிறகு சொல்கிறேன்.
அதுவரை....
நன்றி.
மீண்டும் ச(சி)ந்திப்போம்.
கோ.
மகேஷ்: மகேஷ்: துபாய்க்கு செல்லும்போது வீட்டிலிருந்து கொண்டுபோகும் இட்டிலியை நம்ம ஊரு ரயிலிலேயே முடித்துவிடுங்கள் துபாய் மெட்ரோ வரை கொண்டு சென்றால்...மென்றால் பிறகு நம்மை அபராதம் என்ற பெயரில் சட்டினி அரைத்துவிடுவார்கள்.
அதேபோல பக்கத்து சீட்டில் "யுவதி கிவதினு" பல்ல இளிச்சினு போய் உட்கார்ந்தால் பின்னர் "அவதி"தான். Mind it.!!!!.
அதேபோல பக்கத்து சீட்டில் "யுவதி கிவதினு" பல்ல இளிச்சினு போய் உட்கார்ந்தால் பின்னர் "அவதி"தான். Mind it.!!!!.
அதேபோல பயண நேரம் முழுவதிலும் சுயிங்கமோ எந்த உணவையோ பாணத்தையோ பயன்படுத்தக்கூடாது ,மெட்ரோவில் தூங்கிக்கொண்டு சென்றாலும் பெரும்தொகை அபராதம்.// அடடா! அப்போ தண்ணீர் கூடக் கொண்டு போக முடியாதா? ஐயோ தூங்கக் கூடாதா?! இங்கிருந்து செல்லும் நம்ம ஊர் மக்கள் அவ்வளவுதான்!! பெரும்பான்மையோர் வண்டியில்தான் தூங்குவார்கள்! ஹாஹாஹா....கண்ணை மூடிக் கொண்டு கனவு காணலாமோ?!!!
பதிலளிநீக்குமகேஷுக்கு கொடுத்த டிப்ஸ் ஹாஅஹாஹாஹா....ரசித்தோம் பதிவை..
வருகைக்கு மிக்க நன்றிகள்.
நீக்குதண்ணீர் மற்றும் உணவுப்பொருட்களை கொண்டு போகலாம் ஆனால் பயணத்தின்போது சாப்பிடவோ குடிக்கவோ கூடாது என்பது மிக கடுமையாக கடைபிடிக்கவேண்டிய ஒன்று.
இல்லை என்றால் நம்ம ஊர் போல நிர்வாகத்திற்கு பயணிகள் தண்ணீர் கட்டிவிடுவார்கள்.
கனவு காண்பதென்றாலும் கண்ணை திறந்துகொண்டுதான் காணவேண்டுமோ என்னவோ.
நானும் அப்படித்தான் கண்ணை மூடாமலேயே கனவு கண்டேன் இதேபோல ஒழுங்குமுறை, பராமரிப்பு நம்ம நாட்டிலும் வரவேண்டுமென்று.
ஆனால் து பகலில் கண்டா கனவு... பலிக்குமா?.
ஏதோ நம்மால ஆனா ஒரு உதவியைத்தான் மகேஷுக்கு செய்தேன்.
கோ
நல்ல தகவல். இப்படியான வரைமுறைகளும், அதை சிறப்பாகச் செயல்படுத்தும் நிர்வாகிகளும் இந்தியாவின் அவசரத் தேவை. தில்லி மெட்ரோ ஆரம்பித்த புதிதில் சிறப்பாக இருந்தது. இப்போது மெட்ரோ நிறுவனம் கதறிக்கதறிச் சொல்லிக்கொண்டிருந்தாலும் மக்கள் கவனிப்பதே இல்லை!
பதிலளிநீக்குவாங்க வெங்கட்,
நீக்குஒவ்வொரு இடங்களுக்கு செல்லும்போதெல்லாம் அங்கே இருக்கும் ஒழுங்குமுறைகளை கண்டு ஆச்சரியமும் வியப்பும் அடைந்த அதே சமயத்தில் நம்ம ஊருக்கு இவை சாத்தியப்பட இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகுமோ என்ற ஆதங்கமும் அடைந்தேன்.
சட்டங்கள் கடுமையாக்கப்படவேண்டும் அதே சமயத்தில் அதை நிறைவேற்ற நியமிக்கப்படுபவர்கள் நேர்மையாக நடந்துகொள்ளவேண்டும், அப்போதுவேண்டுமானால் இவை சாத்தியமாகலாம்.
வருகைக்கு மிக்க நன்றிகள் வெங்கட்.
கோ
dubai metro under ground laiya allathu elevated laiya oduthu?
பதிலளிநீக்குaankal/penkal petti concept singapore irukkirathaa theriyala illa nan kavanikkalaiya theriyala.
அதேபோல பக்கத்து சீட்டில் "யுவதி கிவதினு" பல்ல இளிச்சினு போய் உட்கார்ந்தால் பின்னர் "அவதி"தான். Mind it.!!!!.///
aiyyo, appo naa dubaikku pooka matteen. amam london la eppadi?:)
மகேஷ்
நீக்குவருகைக்கு நன்றி.
துபாய் மெட்ரோ பாதாள சுரங்க பாதையிலும் பிறகு பூமிக்கு மேலுள்ள இருப்பு பாதைகளிலும் செல்கிறது.
இங்கே யுவதியால் அவதி.....இல்லை(வேற மாதிரி...) யார் வேண்டுமானாலும் யார் பக்கத்திலேயும் அமர்ந்து பயணம் செய்யலாம் பல்லை இளிக்காமல்..... அப்போ அடுத்த பிளைட் லண்டனுக்குத்தானே..?
கோ
யார் வேண்டுமானாலும் யார் பக்கத்திலேயும் அமர்ந்து பயணம் செய்யலாம் பல்லை இளிக்காமல்..... அப்போ அடுத்த பிளைட் லண்டனுக்குத்தானே..///
பதிலளிநீக்குநோஓஓ...
ஜெஸ்ட் பக்கத்துல அமர்ந்து போக யார் பார்ட்டிடவ்சன் செலவு செய்து அங்க வருவார்:)))
*
அடுத்த பதிவு எப்போ சார்?
வேலைப்பளு சற்று குறைந்தவுடன்.
பதிலளிநீக்குThangalin padivu arumai vaalthukal aya.
பதிலளிநீக்குநன்றி நண்பரே.
நீக்குகோ
இதெல்லாம் நம்ம ஊர் ரயிலிலா?
பதிலளிநீக்குஅய்யாவின் வருகைக்கு மிக்க நன்றிகள்.
நீக்குநம்ம ஊரு ரயிலிலும் இதுபோன்று அமைந்தால் நல்லதுதான்... நம்ம ஊரில் "ஓடும்" ரயிலில் இது "நடக்குமா"?
கோ