பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 19 செப்டம்பர், 2017

புன்னகையின் அர்த்தம்!!

சுவையுடனே சுட்டது!! 

கடந்துபோன ஆண்டு ஒன்றின்
கடைசி  இரு மாதம் ஒன்றில் -என்னை

கடந்துபோன அவள் முகத்தை
கடந்துபோக  மனம் மறுக்க

தினமதே இடத்தில் நானும்
தியானம்போல தவமிருக்க
ஆனது மாதங்களாறு
அவள் மட்டும் போனதெங்கே?.

காத்திருந்த சாலை ஓரம்
பூத்திருந்த ரோஜா ஒன்று
கண் சிமிட்டி புன்னகிக்க
ஏறெடுத்து பார்த்தேன் அந்த
ஈரெழுத்து மலர் முகத்தை

புன்னகையின் அர்த்தம்  -எனக்கு
புரிந்ததுபோல் இருந்தது.

உனக்காக பூ(கா)த்திருக்கும்
என்னை நீயும் பாராமல்
என்றோ தோன்றி 
எங்கோ மறைந்தவளை 
ஏக்கத்துடன் தேடுவதென்ன?

யாருக்காகவோ காத்திருந்து 
காலம்தான் கழித்திடாமல்- உனக்காய்
காத்திருப்போரை கண்பார்த்து
காலமெல்லாம் மகிழ்ந்திடு! 

என  என் முகத்தில் உமிழ்ந்தது  
தன் தேனென்னும் உமிழ் நீரால்
தென்றலதன்  துணையுடனே.

மலர்  தந்த பாடம் எந்தன் 
மன சுவற்றை தொட்டது-மதி 
மயக்கத்தில் இருந்தஎன்னை 
வடுவின்றி சுட்டது
அதுவும் இனிப்பெனவே பட்டது..

நன்றி .

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ

9 கருத்துகள்:

  1. யாருக்காகவோ காத்திருந்து
    காலம்தான் கழித்திடாமல்- உனக்காய்
    காத்திருப்போரை கண்பார்த்து
    காலமெல்லாம் மகிழ்ந்திடு!

    அருமை
    அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றிகள் கரந்தையாரே.

      கோ

      நீக்கு
  2. வரிகள் அருமை!

    கடைசியில் இப்படி ஆகிப் போச்சே! "என் முகத்தில்" என்று சொல்லப்பட்டிருப்பது கோ வின் முகமல்ல என்பதை உறுதியாக நம்புகிறோம்! ஹாஹாஹாஹா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு மிக்க நன்றிகள்.

      நீங்கள் எப்போதும் நேர்மறை சிந்தனையாளராகவே இருப்பதால்தான் அது என் முகமல்ல என்பதை உண்மையாக - உறுதியாக நம்புகின்றீர்கள் போலும்.

      கோ

      நீக்கு
  3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  4. நண்பரே உங்களையும் காதல் வயப்படுத்திய க(ன்)னியவள் யாரென்று காண ஆவல்...

    பதிலளிநீக்கு
  5. பலரை அவரவர்களின் இளமைக்காலத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த பலரில் ஒருவராக ..........

      நன்றி ஐயா வருகைக்கும் வாக்கு மூலத்திற்கும்..

      கோ

      நீக்கு