பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 29 செப்டம்பர், 2017

யுவதியின் அவதி ...

இமைகளின் அசதி.... 
நண்பர்களே,

நேற்று வழக்கம்போல அலுவலகம் செல்ல பேருந்தில் ஏறி ஜன்னல் பக்கத்து இருக்கையில் அமர்ந்து அன்றைய செய்தித்தாளில் கண்களை தழுவ செய்தேன்.

அடுத்த இரண்டாவது நிறுத்தத்தில் ஒரு  இளம் பெண் , (வயது அதிக பட்சம் பதினேழுதான்  இருக்கும் , கல்லூரியில் படிப்பவராகவோ அல்லது பகுதி நேர வேலை செய்பவராகவோ இருப்பார் என நினைக்கின்றேன்). தலைமுடியை முழுவதுமாக மூடி இறுக்கமாக கட்டிய முக்காடுடனும் தான் அணிந்திருக்கும் ஆடைகளை சுற்றி மறைத்தபடி அணிந்திருந்த ஒரு முழுமையான அங்கி போன்ற மேலாடையுடனும் வந்து என்னருகில் அமர்ந்தாள்.

நானும் அவருக்கு போதிய இடத்திற்கும் அதிகமான இடத்தை ஒதுக்கி கொடுத்து சொற்ப இடத்தில் நான் ஒதுங்கிக்கொண்டு செய்தித்தாளில் மூழ்கிவிட்டேன்.

அமர்ந்த  பெண் எனக்கு நன்றி சொல்லிவிட்டு கைபேசியை ஒலிவாங்கி யோடு இணைத்து அதன் இரு ஸ்பீக்கர்களை தலை  மூடியிருந்த துணிக்குள் மறைந்திருந்த தன் இரு காதுகளில் பொருத்திக்கொண்டு பாடல் கேட்பதுபோல் தோன்றியது.

அமர்ந்த சிறிது நேரத்திற்கெல்லாம் அவள்  தலை அசைப்பதை உணர்ந்தேன்,.

கண்களை மூடிய நிலையில் பாடலில்  அத்தனை லயித்துவிட்டாள்போலும்  என்றெண்ணிய எனக்கு அவளது அடுத்த அடுத்த அசைவுகள் அதிர்ச்சியளித்தன. 

என்னதான் இசை என்றாலும் அவளின் தலை  அசைவு வினோதமாக தோன்றவே தலையை திருப்பி அவளை பார்த்தேன்.

கண்கள் மூடி இருந்த அவளால் பாட்டிற்கேற்ப தலை அசைக்காமல் தூங்கி வழிந்தவண்ணம் தலை தடாலென்று ஒரு பக்கம் சாய்வதும் பின்னர் கண்கள் திறக்கப்படாமலேயே நிமிர்வதும் மீண்டும் தடால் என்று சாய்வதுமாக இருந்ததை கண்டு அதிர்ச்சியானேன்.

காலையில் பேருந்தில் ஏறி ஒரு ஐந்து அல்லது ஆறு நிமிடத்திற்குள் இந்த  சின்ன பெண்ணுக்கு இத்தனை தூக்கம் வருகின்றதென்றால் , அவளுக்கு என்ன பிரச்சனையாக இருக்கும்?

பார்க்கவே கொஞ்சம் பரிதாபமாகவும் , முன்னே இருக்கும் இரும்பு கைப்பிடியில் தலை இடித்துகொள்ளப்போகிறாளோ அல்லது வலது பக்கத்தில் சரிந்து கீழே விழுந்துவிடுவாளோ என்ற அச்சமும் என்னுள் நிலவியது.

அடுத்து நடந்ததை நாளை சொல்கிறேனே...

அதுவரை  அவளுக்கு ஏதும் விபரீதங்கள் நடக்கக்கூடாது என அவரவர்கள் குலதெய்வங்களை வேண்டிக்கொண்டிருங்கள்...

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ

4 கருத்துகள்:

 1. லண்டன்காரியான அவளது நலனுக்கு இந்தியாவில் இருக்கும் பாண்டி முத்துக்கருப்ப முணியாண்டியை வேண்டினால் நலமாகுமா நண்பரே ?

  பதிலளிநீக்கு
 2. என்ன கோ இப்படி ஸஸ்பென்ஸில் வைத்துவிட்டு.....பதிவு ஒன்றும் பெரிதாக இல்லையே...தொடரும் போட...ஹாஹாஹா...ம்ம்ம்ம இது தானே கோ ஸ்டைல்!!!

  பதிலளிநீக்கு
 3. மனமிருந்தால் பாண்டி முத்துக்கருப்ப முனியாண்டியை வேண்டினாலும் மார்க்கமுண்டு.

  உங்க பதில் ஒரு மார்கமாகத்தான் இருக்கிறது.

  வருகைக்கு மிக்க நன்றிகள்.

  கோ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சஸ்பென்ஸுக்காக தொடரும் என்று "போடுபவர்கள்??" மத்தியில் அது இல்லாமலும் கூட தொடரும் போடமுடியும் என்று காட்டத்தான் தொடரும் போட்டதாக நினைக்கவேண்டாம்..அனைத்துமே ஒருசேர சொன்னால் பதிவு "பெருசா"கிப்போய்விடும் என்ற எண்ணத்திலும் . பதிவு பயணிக்கும் தளம் ஒரு பேருந்து என்பதாலும் கொஞ்சம் பிரேக் போட்டேன் அவ்வளவுதான்.
   வருகைக்கு மிக்க நன்றிகள்.

   கோ

   நீக்கு