பயணம் எதுவரை?!!
நண்பர்களே,
1960 களில் துபாய் சாலைகளில் ஒரே நேரத்தில் எதிரும் புதிருமாக ஐந்து வாகனங்கள் பயணிக்கும் நேரங்கள் போக்குவரத்து காவலர்களுக்கு அவற்றை ஒழுங்கு படுத்துவதில் பெரிய சவாலாக அமைந்திருந்தது என்றால் அதை நம்ப முடியுமா?
நம்பித்தான் ஆகவேண்டும்.
ஒழுங்கான, நேர்த்தியான சாலைகள் மட்டுமின்றி, அதிகப்படியான சாலைகள்கூட இல்லாத சமயம் அது.
மொத்த துபாய் மாகாணத்தின் அதிகப்படியான மோட்டார் வாகனங்களின் மொத்த எண்ணிக்கை வெறும் அறுபது என்பதுகூட நம்பும்படியாக இல்லை என்றாலும் உண்மை நிலை அதுதான்.
2015 மார்ச் மாத கணக்கெடுப்பின்படி சுமார் 2.35 மில்லியன் ஜனத்தொகைக்கொண்ட துபாயில் 1.4மில்லியன் பதிவு செய்யப்பட்ட கார்கள் பயன்பாட்டில் இருந்திருக்கின்றன, இவை லண்டன் பெருநகரத்திலுள்ள கார்களின் எண்ணிக்கையைவிட கூடுதலானது.
இன்றைய நிலவரப்படி 2.8 மில்லியன் ஜனத்தொகைக்கு குறைந்த பட்சம் 1 .7 மில்லியன் கார்களாவது இருக்கும்.
இத்தனை கார்களும் தினமும் சாலைகளில் பயணிக்க வேண்டுமானால் எத்தனை பெரிய சாலைகளும், மேம் பாலங்களும், அவற்றில் எத்தனை வழி தடம்களும் அமைந்திருக்க வேண்டும் என்பதை கணக்கிட்டு பார்த்துக்கொள்ளலாம்.... முடியவில்லை என்றால் கற்பனை செய்து பார்த்துக்கொள்ளலாம்.
மேலே சொன்ன வாகனங்கள் அனைத்தும் பூமிக்கு மேலே செல்லும் வாகனங்கள் மட்டுமே.
அவை தவிர பாதாள ரயில் போக்கு வரத்தும் சலிப்பின்றி, நிறம்பி வழிந்தவண்ணம் தமது பயணத்தை நாள்தோறும்- நிமிடம்தோறும் மேற்கொண்டு வருகிறது.
போக்கு வரத்தில் இத்தனை அசுர வளர்ச்சியினை துபாய் இந்த குறுகிய காலத்தில் எட்டி பிடித்திருக்கின்றது என்பதை நினைக்கும்போது, வியப்பு என்ற வார்த்தையால் வரையறை படுத்திவிட முடியாது.
பதிவின் முன் பகுதியில் சொன்னதுபோல் வெறும் ஐந்து கார்கள் மட்டுமே ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் வந்து சேர்ந்து பயணிக்கும் தருவாயில் போக்குவரத்து காவலர்கள் அவற்றை ஒழுங்கு செய்ய கடும் சிரமத்திற்கும் சவால்களுக்கும் ஆளாக நேரும்போது இத்தனை மில்லியன் கார்களும் லாரிகளும் , மோட்டார் வாகனங்களும் கணரக வாகனங்களும் நிமிடத்திற்கு ஆயிர கணக்கில் பயணிக்க நேரும் இந்த நவீன கால கட்டத்தில் எத்தனை சவால்களை சந்திக்க நேரும்?
தனியார் வாகனங்கள் மட்டுமின்றி அரசு சார்ந்த வாகனங்கள், பேருந்துகள், டிராம்கள், மெட்ரோ ரயில்கள் போன்றவையும் போட்டிபோட்டுக்கொண்டு சீறிப்பாயும் இந்த நாட்டில், இவை அத்தனையும் உயரிய தரத்தில் பராமரிக்கப்பட்டு , ஒழுங்குடன் கட்டுப்படுத்தப்படுகின்றன என்றால் அதற்கு முக்கிய காரணம் அங்கே நிலவும் சட்டதிட்டங்களும் அவற்றை பின் பற்றும் மக்களும்தான் என்றால் மிகை அல்ல.
மணலை மசியவைத்து ஊரெங்கும் ரோடு போட்டு சாலை மற்றும் படகு, ரயில் போக்குவரத்தை உயரிய தொழில்நுட்பத்துடன் மக்கள் சேவைக்கு அர்பணித்திருக்கும் இந்த அரசு அங்கே சில வரையறை-வரைமுறை கோடுகளையும் போட்டிருக்கின்றனர்.
வரையறை அறிந்துகொள்ள நாளைவரை....கொஞ்சம் காத்திருக்கக்கூடாதா?
அதுவரை..
நன்றி.
மீண்டும் ச(சி)ந்திப்போம்.
கோ
மணலை மசியவைத்து ஊரெங்கும் ரோடு போட்டு சாலை மற்றும் படகு, ரயில் போக்குவரத்தை உயரிய தொழில்நுட்பத்துடன் மக்கள் சேவைக்கு அர்பணித்திருக்கும் இந்த அரசு அங்கே சில வரையறை-வரைமுறை கோடுகளையும் போட்டிருக்கின்றனர்.
வரையறை அறிந்துகொள்ள நாளைவரை....கொஞ்சம் காத்திருக்கக்கூடாதா?
அதுவரை..
நன்றி.
மீண்டும் ச(சி)ந்திப்போம்.
கோ
துபாயின் வளர்ச்சி அபரிதமான ஒன்றுதான். பிரமிப்பாகத்தான் இருக்கிறது.
பதிலளிநீக்குதொடர்கிறோம் கோ...அரசன் எவ்வளி அவ்வழி மக்கள் தானே....
வருகைக்கு நன்றிகள் ஆமாம்.
நீக்குஇதுதான் அசுர வளர்ச்சி. நாட்டின் வளத்தையும் வருமானத்தையும் நாட்டின் நலனுக்காகவே பயன்படுத்தும் எந்த நாடும் இதுபோன்ற வளர்ச்சியை அடைவது சாத்தியமே.
கோ
kaathirukkirom... ok... nalaikku varren:)
பதிலளிநீக்குவரணும்
நீக்குகோ
வரையறைகள், வரையறைக்குள் இருக்கிறதா என்று எதிர்பார்க்கிறோம்.
பதிலளிநீக்குஐயாவிற்கு வணக்கங்கள்.
நீக்குஇல்லாமல் போகுமா?
கோ