பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 25 ஆகஸ்ட், 2017

முனிமா சாலையில் மினிமா!! - 2

அது தனிமா!

நண்பர்களே,

முன் பதிவை பார்க்க...முனிமா  சாலையில்  மினிமா!!

என்னுடைய இந்த குழப்பமான தடுமாற்றத்தினால் எந்த தடுமாற்றமும் அடையாத ஊழியர் ,  சார்     நீங்க சொன்ன பெரும்பாலான அத்தனையும் சேர்ந்தாற்போல்  ஒரு மெனு இருக்கின்றது.

அதில் இட்டிலி, சாம்பார், மூன்று வித சட்டினிகள், மசாலா தோசை உருளைக்கிழங்கு புட்டு, மற்றும் சாம்பார், தேங்காய் சட்டினி, பொங்கல், கிச்சடி, வடை, பூரி, உப்புமா... கேசரி  மற்றும் காஃபீ....

அண்ணே... அண்ணே.... சர்வர் அண்ணே.... கொஞ்சம் நிதானமாக சொல்லுங்கள்....

 சொன்னார்.

இத்தனையும் ஒரே மெனுவிலா?

ஆமாம் சார் இதற்கு மினி காலை சிற்றுண்டி என்று பெயர்.

ஆஹா... அருமையான கலவை ... ஆனால் இத்தனையும் என்னால் சாப்பிட முடியாதே?

சார்,... இட்டிலி என்றால் மினி இட்டிலி சொர்ணா அக்கா நெற்றி பொட்டைவிட ஒரு சுற்று சிறியதாக(??) இருக்கும் அதில் ஒரு ஐந்தாறு..., வடை என்றால் ஒரே ஒரு வடை உங்கள் உள்ளங்கை சுற்றளவில் பாதி... மசாலா தோசை A4 சைஸ்ல ஒன்று, பொங்கல் அதை உருட்டினால்... ஒரு ஒரு கிரிக்கட் பால் சைசுக்கு..   உப்புமா.... ஒரு கமலா ஆரஞ்சு அளவுக்கு... (யார் அந்த கமலா..?) பூரி ...பானிபூரியோட 'பிக்பிரதர்'  ...கேசரி... ஒரு சாதாரண சைஸ் லட்டை  உதிர்த்தால் வரும் அளவு... காபி மட்டும் நார்மல் டபரா அளவு....

ஓ..... மினிக்குள் இத்தனை மெகா சீரியல் அளவு திரைக்கதையா....?

எல்லாமே கேட்க கேட்க நாக்கில் உருவாகி உதட்டில் எட்டிப்பார்த்த உமிழ் நீரைஅடக்கிக்கொண்டு ஒரு "மினி " ப்ளீஸ்.

உணவுகள் வரும் வரை அங்கே அமர்ந்திருந்த மற்ற வாடிக்கையாளர்களை பார்க்கும்போது கோவிலுக்கு போய்விட்டு வந்ததற்கான அடையாளமான பூக்கூடைகள், திருநீர், குங்கும பொட்டுக்கள், தூய ஆடைகளோடு தரிசனமாயிருந்ததை பார்த்து இங்கே அருகில் ஏதேனும் இந்து கோவில் இருக்கின்றதா என கேட்டேன்.

ஆமாம் இங்கேய பக்கத்தில் ஒரு ஆலயம் இருக்கின்றது என்றனர்.

துபாயில் இந்துக்கோவிலா...   என்ன கோயில்...?

குறிப்பிட்டு சொல்லமுடியாது ... இங்கே இருப்பது ஒரு வித்தியாசமான கோயில் என்றனர்.

"கோ"யிலுக்கே புரியாதபடி  வித்தியாசமான "கோ"யிலா..?

ஆச்சரியமாக இருந்தது, அவசியம் போகவேண்டு என தீர்மானித்தேன்.

அடுத்த ஐந்து நிமிடங்களில் மேசை நிறைந்த உணவினை  அடுத்த அரை மணி நேரத்தில் உண்டபின் வயிறு மட்டுமல்ல மனமும் நிறைந்தவனாக,   42 டிகிரி வெளியில் இருந்தாலும் (டிகிரி) காபீ இல்லாமல் ஒரு காலை துவக்கமா? பில்டர் காபியை முகர்ந்து....சுவைத்து.... பருகிவிட்டு  உரிய காசு கொடுத்துவிட்டு உவகையுடன் வெளியில் வந்தேன்.

இந்நாள் வரை வாழ்வில் இப்படி அனைத்து சிற்றுண்டி பதார்த்தங்களையும்   ஒரு சேர  ஒரே வேளையில் சுவைத்தறியாத எனக்கு அது ஒரு தனி அனுபவமாக இருந்தது.

மீண்டும் வந்த வழியே ... விழியில் நிறைந்து வழிந்த காட்சிகளை ரசித்தவண்ணம் விடுதி வந்து அறைக்கான திறவுகோலை  பெற்று கொண்டு... 'பெல்பாய்' காட்டிய வழியில் 'செல்வாய்'  என கால்களுக்கு அன்பு கட்டளை இட்டு  அறையை வந்து சேர்ந்ததும் - கட்டிலை பார்த்ததும் உண்ட மயக்கமும் உடன் வந்து சேர்ந்தது.

அடுத்து என்ன ....

பிறகு பார்ப்போம்.

அதுவரை.

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்..

கோ

11 கருத்துகள்:

  1. நான் மினி டிஃபன் விரும்பி சாப்பிடுவேன் நிறைவாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பின்னே, இத்தனையும் கொடுத்தா விரும்பி சாப்பிடாமல் எழுந்து போகவா மனசு வரும்?

      வருகைக்கு மிக்க நன்றி நண்பரே,

      கோ

      நீக்கு
  2. ahaa super ideavaa irukkee மினி காலை சிற்றுண்டி...

    கால்களுக்கு அன்பு கட்டளை இட்டு அறையை வந்து சேர்ந்ததும் - கட்டிலை பார்த்ததும் உண்ட மயக்கமும் உடன் வந்து சேர்ந்தது.//// breakfast saptathukkevaa!!!


    sari sari sikkiram dubaila day1 engaenga suthi paarkka poninga ezuthunga sir:)

    பதிலளிநீக்கு
  3. மகேஷ்,

    இட்லி தோசையையே வருஷத்துல ஓரிரு நாட்கள் மட்டுமே அதுவும் மாவு புளிச்சி பொங்கி வந்திருந்தா..... அப்படி இருக்கும்போது இத்தனை ஐட்டங்களை...(ஐட்டம் என்றல் உன் வயசுக்கேத்தபடி எல்லாம் நினைக்க கூடாது) ஒரு சேர ஒரே வேளையில் சாப்பிட கொடுத்தால் உண்டபின் மயக்கம் வராம தயக்கமா வரும்.

    கோ.

    பதிலளிநீக்கு
  4. மகேஷ்,

    காலை உணவுதான் என்றாலும் திக்கு முக்கடவைத்த வகைகளும் ருசிய்களும்.

    வருகைக்கு நன்றி.

    கோ

    பதிலளிநீக்கு
  5. மூன்று பகுதிகளையும் ஒரு சேர படித்து மினி டிஃபன் சாப்பிட்ட உணர்வு.

    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வெங்கட்,

      எனக்குதான் வேற வழி இல்லாம அனைத்தையும் ஒருசேர சாப்பிட வேண்டிய சூழல் உங்களுக்குமா? ஒவ்வொன்றாக நிறுத்தி நிதானமாக படித்திருக்கலாமே.

      உங்களின் மகிழ்சியே எமது லட்ச்சியம்.

      கோ

      நீக்கு
  6. ஓ..... மினிக்குள் இத்தனை மெகா சீரியல் அளவு திரைக்கதையா....?// ஹாஹாஹாஹா!!!

    அட கடைசில நாங்க சொன்ன டிஃபன் தானே!!! ஹிஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க.... நீங்க ஒரு தீர்க்கதரிசி என்பது தீர்க்கமான உண்மை.

      கோ

      நீக்கு
  7. அதானே "கோ" விற்கே "கோ"யில் புதிரா??!!!

    சரி அடுத்து என்ன ??!! தூக்கம்! அப்புறம் என்ன என்பதை நீக்னள் தூங்கி எழுந்து செல்லும் வரை நாங்களும் கொஞ்சம் வலையில் உலாவி விட்டு வருகிறோம்!! ..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படி எல்லாம் நாங்க விட்டுடுவோமா?... அடுத்த விவரம் வெளி வந்துடுச்சு.. போய் பாருங்கள் உங்கள் கருத்து கணிப்பை தாருங்கள்..

      கோ

      நீக்கு