பின்பற்றுபவர்கள்

புதன், 22 ஜூன், 2016

அம்மா இங்கே வா! வா!!...



வேண்டாம் ... நான் வருகிறேன்.

நண்பர்களே,

என்னுடைய பதிவுகளை தொடர்ந்து வாசித்துவரும் உங்களில் பெரும்பான்மையானவர்களுக்கு மிகவும் பரிட்சயமானவரும், என் நிழலாக விளங்குபவரும்  வெளி நாட்டில் வசித்துவருபவருமான ஒருவரின் வாழ்க்கையில் சமீபத்தில், அதாவது 30 நாட்களுக்கு முன்,  ஏற்பட்ட நிகழ்வு ஒன்றை உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்க விழைகின்றேன்.

வெள்ளி, 20 மே, 2016

"நான் தான் அப்பவே சொன்னேனே"


இப்ப பார்த்தீர்களா?

நடந்து முடிந்து, முடிவுகள் அறிவிக்க பட்ட தமிழக மற்றும் வேறு பல மாநிலங்களின் தேர்தல்களை குறித்து  ஒரு சிலர்  , நான் தான் அப்பவே சொன்னேனே இப்படித்தான் ஆகும் என்று, என்று சொல்பவர்கள் இப்போது ஆங்காங்கே இருப்பதாக செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன.

செவ்வாய், 17 மே, 2016

தொலை(ந்துபோன)பேசி எண்கள் - 2

 தொடர்பு எ(இ)ல்லைக்கு அப்பால். 

நண்பர்களே,

தொடர்பு தொடர்கிறது....

முதலில் இருந்து வாசிக்க.. தொலை(ந்துபோன)பேசி எண்கள்.

மனதிற்குள் மடை திறந்த மகிழ்ச்சி வெள்ளம், அதே  சமயத்தில் என் கண்களில் ஆனந்த  கண்ணீர் துளிகள்..

வெள்ளி, 13 மே, 2016

தொலை(ந்துபோன)பேசி எண்கள்.

மீண்டும் தொடர்பில்...

நண்பர்களே,

பள்ளி, கல்லூரியில் பல வருடங்கள் ஒன்றாக இணைந்து படித்திருந்தாலும், படிப்பிற்கு பின்னர், அவரவர் பாதையில் பயணிக்க நேரும்போது  நண்பர்களை பிரிந்து செல்வது வாடிக்கை.

புதன், 11 மே, 2016

"தலை(முறை) காக்கும்"

அ(ம்மா)தர்மம் ...தாயே..!!..  

நண்பர்களே,

தர்மம் தலைகாக்கும்  என்பது நம் நாட்டில் தொன்றுதொட்டு சொல்லபட்டுகொண்டிருக்கும் ஒரு பழமொழி.

செவ்வாய், 10 மே, 2016

"MONEY ஓசை வரும் முன்னே"

 "சின்ன மீன் பெரிய மீன்"!!

நண்பர்களே,

சமீபத்தில் கேட்ட தொலைகாட்சி செய்தியில், இதுவரை, சட்டத்திற்கு புறம்பாக வீடுகளிலும், பண்ணைகளிலும் , குடோன்களிலும் வாகனங்களிலும் பதுக்கி, தேர்தலை முன்னிட்டு, பட்டுவாடா செய்யவும் , தேர்தல் செலவுகளை உச்ச வரம்பிற்கு மீறி ஆடம்பரமாக செலவழிக்கவும் வைக்கபட்டிருந்த பணத்தில் பிடிபட்ட பணம் மட்டும் சுமார் 100 கோடி ரூபாய் என தகவல் சொல்லக்கேட்டு அதிர்ச்சியாக இருந்தது.

திங்கள், 9 மே, 2016

"படிக்காத மேதைகளுக்கு"


சுய புராணம்!! 

நண்ப(ரே)ர்களே,

தமிழ் பெற்றோர்களின் தவப்புதல்வனாக பிறந்ததால் மட்டுமின்றி, பள்ளி நாட்களில் தமிழை எனக்கு விருப்பபாடமாக்கிய தமிழாசிரியர்களின் பாடம் கவிதை,  நடத்திய விதங்களும், தமிழின் சிறப்பான படைப்புகள்