அந்த கார் நிறுத்த பட்டிருந்த இடத்தை சுற்றிலும் ஒரு வெள்ளை கூடாரம் அமைத்து உள்ளே என்ன நடக்கின்றது என்று வெளியே இருக்கும் யாருக்கும் தெரியாதபடி மேலும் சில ஆய்வு நடவடிக்கைகள் அந்த சம்பவ இடத்தில் நடந்துகொண்டிருந்தது.
கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவை கடந்து சுமார் 1.00 மணி அதி காலையில் இரண்டு பெரிய நகரங்களை இணைக்கும் பிரதான எட்டு வழி சாலையில் வாகன நடமாட்டங்கள் குறைந்திருந்த அந்த சமயத்தில், நெடுஞ்சாலை விதிகளின்படியான அதிக பட்ச வேகமான 70 மைல் வேகத்தில் ஒரு கார் பயணித்து கொண்டிருந்தது.
நாம் நம் வாழ்நாளில் முதன் முதலில் பார்க்கும், அல்லது, கேள்விப்படும் வழக்கத்திற்கும் நடை முறைகளுக்கும் மாறான செயல்களையும் செய்திகளையும் மிகவும் வியப்புடனும் திகிலுடனும் , அல்லது பரவசமுடனும் தான் பாப்போம், உணர்வோம்.
ஒரு சில விஷயங்களில் ஒருசிலருக்கு ஓரளவிற்குதான் புத்திமதி சொல்ல முடியும், அல்லது ஓரளவிற்குதான்வழி காட்ட முடியும்,அல்லது ஒரு குறிப்பிட்ட எல்லை வரைதான் அழைத்து செல்ல முடியும் மற்றபடி அவர்களை, நாம் சொல்லும் அல்லது நாம் காட்டும் வழியை அல்லது நாம் போதிக்கும் போதனைகளை ஆலோசனைகளை ஏற்க வைக்க முடியாது.
அலுவலக ஊழியருள், வார இறுதி விடுமுறையில் செல்வோரும், ஓரிரு வார அல்லது மாத விடுமுறையில் செல்வோரும் , தங்கள் விடுமுறை நாட்கள் முடிந்து மீண்டும் வேலைக்கு திரும்பும் போது, விடுமுறை எப்படி இருந்தது என்று கேட்டால், ஏகோபித்த பதிலாக அனைவரும் சொல்லுவது :