பின்பற்றுபவர்கள்

புதன், 24 பிப்ரவரி, 2016

அந்த சிலமணி நேரம்??!!

கா - ரோடுதான்.... .... !

நண்பர்களே,

நாம் நம் வாழ்நாளில் முதன் முதலில் பார்க்கும், அல்லது, கேள்விப்படும் வழக்கத்திற்கும் நடை முறைகளுக்கும் மாறான செயல்களையும் செய்திகளையும் மிகவும் வியப்புடனும் திகிலுடனும் , அல்லது பரவசமுடனும் தான் பாப்போம், உணர்வோம்.

ஆதி மனிதன், தான்  முதன் முதலில் பார்த்த சூரியன், சந்திரன், விண் மீன், ஆகாயம், இடி, மின்னல்,  மழை, நெருப்பு போன்ற இயற்கையை கூட   பரவசத்துடனும் ,ஓரளவிற்கு அச்சத்துடனும் பெருமளவிற்கு அதிசயத்துடனும்தான் பார்த்தான் என நாம் அறிவோம், அது நாகரீக வளர்ச்சி அடையாத காலங்கள்.

ஆனால் நாகரிகமும் , கல்வி, மொழி, அறிவு  வளர்ச்சிக்கு பின்னும்  மனிதன், சில செயற்கை பொருட்களை , கண்டுபிடிப்புகளை  கண்டு ஆச்சரியத்துடனும், பரவசத்துடனும், சில வேளைகளில் திகிலுடனும் வாழ்ந்தான்  - வாழ்கிறான் .

அவற்றுள், முதன் முதலில் கண்டு பிடிக்கப்பட்ட ரயில், தொலைபேசி கருவி,, வானொலி பெட்டி, கடிகாரங்கள் முதல் இன்றைய தொலைகாட்சி பெட்டி, கணணி, மடி கணணி, கை தொலைபேசி, ஐ பேட், ஐ பாட் போன்ற கருவிகளின் வருகையும் தமக்கு மிகுந்த ஆச்சரியத்தை கொடுப்பதோடு இன்னும் இது போன்று என்னெல்லாம் வரபோகின்றதோ என்ற பரவசத்துடன் கூடிய ஆச்சரிய எதிர்பார்போடு வாழ்ந்து கொண்டு இருக்கின்றான்.

ரயில்   விமானம், நீர்மூழ்கி கப்பல்கள்,  ராக்கெட்டும் கூட இப்போது சகஜமானதாகிவிட்ட நிலையில், ஆளில்லா, விமானம், ஆளில்லா ரயில்(??) ஆளில்லா ராக்கெட்டு போன்றவையின் வருகையும் புழக்கமும்  இன்னும் நம்மை பிரமிப்படைய செய்கின்றன.

இப்படி இயற்கை , மற்றும் செயற்கை படைப்புகளை முதன் முதலில் கண்டு ஆச்சரியப்பட்ட நாம், மனித குலத்தின் நம்பிக்கை மற்றும் அனுமானங்களின் அடிப்படையில் அவ்வப்போது  வேற்று கிரக வாசிகள் , பறக்கும் தட்டு போன்ற  அமானுஷ்ய நிகழ்வுகளையும் , செய்திகளையும் கூட குறித்து ஆச்சரியபடாமல் இருக்க முடியாது.

கல்வியில் வளர்ந்த , நாகரீகத்தில் செழித்த, பொருளாதாரத்தில் முன்னேறிய , பகுத்தறிவும், அறிவியல் சிந்தனையும் மேலோங்கிய நாடுகள் என கருதப்படும் மேலை நாடுகளிலும் பல வகையான மூட பழக்க வழக்கங்கள் இருந்தாலும் , அவை பெருமளவிற்கு வெளியில் தெரியுமளவிற்கு நாடு முழுவதும் பரவி வியாபித்திருக்கும் நிலை இல்லைதான்.

இப்படிபட்ட மேலை நாடுகளில் ஒன்றான பிரிட்டனில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அதிகாலை 1.00 மணிக்கு நடந்த ஒரு நிகழ்ச்சி நாடு முழுதும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.

அந்த நிகழ்ச்சி, மனிதனின் அறிவியல் ஞானத்தின் விரிவாக்கத்தால் கண்டு பிடிக்கப்பட்ட சாதாரணமான ஒரு காரோடு சம்பந்தப்பட்ட  நிகழ்வு என்றாலும்,சம்பந்தப்பட்ட நிகழ்வு சாதாரணமானதல்ல என்பதே பரபரப்பிற்கு, பரவலான காரணமாய் அமைந்தது.

இதுவரை அது போன்ற ஒரு செய்தியையோ, நிகழ்வையோ கேட்டோ பார்த்தோ அறியாத ஒட்டு மொத்த நாடும்  அந்த நிகழ்ச்சியை குறித்து அறிந்து அதிர்ந்து போய் விட்டது.

என்ன அந்த நிகழ்ச்சி?

காத்திருங்கள், நாளை தொடர்கிறேன்.

நன்றி,

மீண்டும் ச(சி)ந்திப்போம்,

கோ

10 கருத்துகள்:

 1. அட இப்படி பதிவ பாதியில விட்டுட்டு நாளை தொடர்கிறேன் போட்டுட்டீங்களே சார்?
  ம்ம் நாளை வந்து வாசிக்கிரேன்:)
  நலமா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மகேஷ் ..

   இதோ .... வந்துட்டேன். கொஞ்சம் பொறுங்கள்.

   கோ

   நீக்கு
 2. இப்படி ஒரு சஸ்பென்சா ? ஆவலாய் இருக்கிறேன் ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. செல்வகுமார்,

   இன்னும் கொஞ்சம் நேரம் காத்திருங்கள் சஸ்பென்ஸ் விடுவிக்கபடும்.

   கோ

   நீக்கு
 3. பதில்கள்
  1. நண்பா,

   காத்திருங்கள் ... இன்னும் சிலமணி நேரங்கள்.

   கோ

   நீக்கு
 4. வணக்கம்
  கதை நன்றாக உள்ளது தொடருங்கள் காத்திருக்கேன்..
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரூபன்,

   இது கதையல்ல.....போக போக புரிந்துகொள்வீர்கள்.

   கோ

   நீக்கு
 5. வணக்கம் அரசே,

  அதிர்ந்து பார்க்கும் அளவிற்கு என்ன நிகழ்வு ,,,

  தொடர்கிறோம் அரசே.

  பதிலளிநீக்கு
 6. இதை வாசித்துவிட்டோம் அந்த அதிர்வைத் தெரிந்து கொள்ள அடுத்த பதிவிற்கு இதோ ஜூட்....

  பதிலளிநீக்கு