பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 1 மார்ச், 2016

அந்த சிலமணி நேரம் ??!! --3

மர்ம இருள்!!

நண்பர்களே,

முன் பதிவை வாசிக்க...அந்த சிலமணி நேரம்--2 ??!!


அந்த கார் நிறுத்த பட்டிருந்த இடத்தை சுற்றிலும் ஒரு வெள்ளை கூடாரம் அமைத்து உள்ளே என்ன நடக்கின்றது என்று வெளியே இருக்கும் யாருக்கும் தெரியாதபடி மேலும் சில ஆய்வு நடவடிக்கைகள் அந்த சம்பவ இடத்தில் நடந்துகொண்டிருந்தது.


அந்த நேரத்தில் அங்கே வந்த ஒரு தீயணைப்பு வாகனத்திலிருந்து தண்ணீர் அந்த கூடாரத்தின் உள்ளே இருந்த காரின் மீது பீச்சி அடிக்கப்பட்டது.

காரை மூடி இருந்த பனி கட்டிகள் கொஞ்சம் கொஞ்சமாக கரைய ஆரம்பிக்க , காரின் உள்ளே இருக்கும் அனைத்தும் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக -தெளிவாக தெரிய ஆரம்பித்தது.

உள்ளே இருந்தவை காவல் துறைக்கு மேலும் பல சவால் நிறைந்த சந்தேகங்களை உருவாக்கின.

இரண்டு நிமிடங்கள் கழித்து வெளியில் வந்த ஒரு அதிகாரி தமது தொலைபேசியிலிருந்து யாருக்கோ தகவல் சொல்ல இப்போது மேலும் ஒரு ஆம்புலன்ஸ் வந்தது.

 அதிலிருந்து மருத்துவர் குழு ஒன்று அந்த கூடாரத்திற்கு உள்ளே சென்றது.

அவர்களை தொடர்ந்து கைரேகை நிபுணர்களும் மோப்ப நாயும் வந்து சேர்ந்தனர்.

சுமார் 8.30 மணியளவில் தொலைக்காட்சி வாயிலாக இந்த நிகழ்வை குறித்த  பல ஆதார பூர்வமான செய்திகள் வெளி இடப்பட்டன.

அந்த கார் ஒரு பிரபல நிறுவனத்தை சார்ந்த அமரர் வாகனம் எனும் விவரம் சேகரிக்கப்பட்டு , விசாரணை இப்போது ஒரு திசையை நோக்கி பயணிக்க ஆயத்தமானது.

மேலும் அந்த வாகனத்தில் புதிதாக செய்யப்பட்ட ஒரு சவப்பெட்டி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த சவபெட்டியின் உள்ளே ஒரு 58 வயது மதிக்கத்தகுந்த ஒரு ஆணின் சடலம்.

அந்த சடலத்திற்குரியவர் இறந்து சுமார் 12 மணி நேரம் ஆகி இருக்க வேண்டும் எனும் நிபுணர்களின் அனுமானமும் தெரிவிக்கப்பட்டது.

அப்படி யானால் அந்த சடலத்தை இங்கு கொண்டுவந்தவர் யார்?

சடலமாக இருப்பவர் யார்? அவர் எப்படி இறந்தார்?

காரை ஒட்டியது யார்?

இப்போது கார் வந்து நின்றிருக்கும் இடம் என்ன இடம்? போன்ற கேள்விகளுக்கு விடை தெரிந்துகொள்ள உங்களை போல நானும் பேரார்வம் கொண்டிருந்தேன். 

எனினும் இதில் மர்ம முடிச்சிகள் நிறைய இருப்பதால் அவ்வளவு சீக்கிரம் எந்த முடிவிற்கும் வர முடியாமல் காவல் துறை தடுமாறியது. 

இதை தொடர்ந்து ஊர் முழுவதுமட்டுமல்லாது நாடு முழுவதும் ஒரு அமானுஷ்ய செய்தியும் பரவத்துவங்கி விட்டது.

ஆளாளுக்கு பல செய்திகளை பரப்ப ஆரம்பித்துவிட்டனர்.

இறுதியாக, கண்டெடுக்கப்பட்ட அனைத்து விவரங்களையும் தடயவியல் துறைக்கு அனுப்பிவிட்டு பிரேத பரிசோதனைக்காக அந்த சடலமும் இடம் மாற்றப்பட்டது.

பிறகு என்ன நடந்தது?  சீக்கிரம் மர்ம இருள் விலகுமா?

பிரேத பரிசோதனை அறிக்கை வரும்வரை கொஞ்சம் காத்திருக்ககூடாதா?

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ  


4 கருத்துகள்:

  1. நல்லா திரில் கதை போல் இருக்கு,இப்படியா தொடரும் போடுவது, சரி பிறகு என்ன தான் நடந்தது? காத்திருக்கிறோம்,, தொடருங்கள் அரசே,

    பதிலளிநீக்கு
  2. இதோ அடுத்தப் பதிவிற்குச் செல்கிறோம் என்னாச்சுனு தெரிந்து கொள்ள

    பதிலளிநீக்கு