பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 6 மார்ச், 2016

உப்பிட்ட (தமிழ்) இங்லீஷ் மண்ணை.....

நான் மறக்கமாட்டேன்....

நண்பர்களே,

சூப்பர் ஸ்டார் திரு ரஜினி காந்த் அவர்கள் நடித்து வெளிவந்த திரைப்படம், பாபா.  அதில் அவர் பாடுவதாக அமைந்திருந்த ஒருபாடலில் "உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்கமாட்டேன், நான் உயிர் வாழ்ந்தால் இங்கேதான் ஓடிவிட மாட்டேன் " எனும் வரிகள் வரும்.

இந்த உப்பிட்ட தமிழ் மண்ணை எனும் வார்த்தை, "உப்பிட்டவரை உள்ளளவும் நினை" என்ற   நன்றி மறவாமை வேண்டும் எனும் ஒரு உயரிய பண்பினை அடிப்படையாக கொண்டு சற்று விரிவாக , தம்மை வாழ வைக்கும் தமிழ் நாட்டையும் தமிழ் மண்ணையும் இறுதி நாள் வரை மறக்கமாட்டேன் என்று சொல்வதுபோல் பாடலாசிரியரால் எழுதப்பட்ட பாட்டு அது.

இந்த உப்பு என்ற வார்த்தை நேரடியாகவே, சப்பாட்டைதான் குறிக்கும். தமது ஒரு வேளை பசியை போக்க யாரெல்லாம் உதவுகின்றார்களோ அவர்களை நம் ஜீவன் உள்ளவரை  மறக்ககூடாது என்பதே இதன் நேரடியான அர்த்தம்.

சாப்பாடு என்பது அரிசி பருப்பு காய்கறி பதார்த்தங்களால் சமைத்து பரிமாறுவது மட்டுமில்லாமல், தமது வாழ்க்கைக்கு உதவிய அனைவரையும் நினைக்க வைக்கும் சொல்லாகவே இந்த உப்பு என்ற வார்த்தை கையாளபடுகிறது.

இத்தகைய உயரிய பண்பினை உலகுக்கு உணர்த்தியது தமிழ் மண் என்பதில் தமிழோடு தொடர்புடைய நாம் உண்மையிலேயே பெருமை படவேண்டிய ஒன்று.

இந்த ஒப்பற்ற பண்பினை பெரும்பாலான உலக நாடுகள் ஓரளவிற்கு கடைபிடித்தாலும், இந்த உப்பிடும் உயரிய செயலை நேரடியாக செய்துவரும் நாடுகளில் இங்கிலாந்து முதன்மையாக விளங்குகின்றது என்று அறியும்போது மிகவும் ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது.

அப்படி இங்கிலாந்து நாட்டில், அரசு சார்பாக தான் இடும் உப்பிற்கு எந்த நன்றியும் எதிர்பார்பதில்லை என்றாலும் இங்குள்ள மக்கள் ஏற்ற காலத்தில் அரசு உப்பிடவில்லை என்றால் அரசுமீது வழக்கு தொடுப்பதுதான் மிகவும் வேதனையான ஒன்று.

என்னது உப்பிடவில்லை என்றால் அரசுமீது வழக்கா?

ஆமாங்க, இப்போது இங்கே நிலவும் கடுமையான குளிரினால், மக்கள் வெளியில் போவதும் வருவதும் மிகவும் சிரமமாக இருக்கின்றது.

நடந்து செல்வோரும் வாகனத்தில் செல்வோரும் சாலையில் படர்ந்திருக்கும் ஐஸ் படலத்தினால் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

வெளியில் சென்றால்தானே சம்பாதிக்க முடியும் , சம்பாதித்தால்தானே சாப்பிடமுடியும்?

அப்படி வெளியில் செல்வதாயிருந்தால் சாலைகள் நல்லபடியாக  பராமரிக்கபடவேண்டும் அல்லவா?

சாலை எங்கிலும் ஐஸ் படலங்கள் இருந்தால் நடந்து செல்வோரும் வாகனங்களும் கட்டுபாட்டை இழந்து வழுக்கி விழவும், அதனால் பெரிய விபத்து ஏற்பட்டு,ஆஸ்பத்திரியிலும்  வீட்டிலும் முடங்கி கிடந்தால் "பூவா"விற்கு என்ன வழி, 

யார் நமக்கு உப்பிடுவார்கள், அதாவது சோறு போடுவார்கள்?

மேலும் இந்த ஐஸ் படலங்கள் கண்ணுக்கு தெரியாது, சாலையோடு சாலையாக அதே நிறத்தில் இருக்கும் , இதை கருப்பு ஐஸ் என்றும் சொல்லுவார்கள்.

அப்படி அந்த கருப்பு ஐஸ் மீது நடக்கும்போதும் வாகனத்தை ஓட்டும்போதும் நமது கட்டுபாட்டை இழந்து விடுவோம் அதனால், தலை, கைகால் போன்றவை வெகுவாக பாதிக்கப்பட்டு சில நேரங்களில் அது உயிருக்குகூட ஆபத்தாக அமைந்துவிடும்.

அதேபோல வாகனக்ளை கட்டுபடுத்த முடியாமல் மற்ற வாகனங்களோடு அல்லது பக்க வாட்டு சுவர்மீது மோதி பேராபத்து விளையும்.

இது இயற்கையின் விளையாட்டு என்றாலும், இயற்கை சீற்றத்தில் இருந்து மக்களை காப்பாற்றும் கடமை அரசுக்கு இருப்பதால், இதுபோன்ற குளிர் , பனி காலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காதபடிதேசிய நெடுஞ்சாலைகள் எங்கிலும் பல மைல்களுக்கு விசேஷித்த கனரக வாகனங்கள் கொண்டு , பிரத்தியேகமாக பதபடுத்தபட்ட கடல் "உப்பை"தெளித்து கொண்டே இருப்பார்கள்.(salt spreading)


மேலும் தெருக்களிலும் மாநகராட்சி வாகனங்கள்கொண்டு இப்படி உப்பை இடுவார்கள். இந்த உப்பு சாலையின் மீது படிந்திருக்கும் அந்த உறைந்த ஐசினை உறிந்துகொண்டு சாலையை உபயோகத்திற்கு ஏற்றதாக மாற்றிவிடும்.

அதேபோல சாலைகளில் ஆங்காங்கே இதற்கான விசேஷித்த தொட்டிகளில் இந்த உப்பை நிறைத்து வைத்திருப்பார்கள் சமயத்திற்கு உபயோகிக்க. அதை கிரிட்- Grit  என்றும் சொல்லுவார்கள்.

Image result for salt spreading sign board on motorways

அப்படி சில வேளைகளில் சில இடங்களில் உப்பு இடாமல் போய் அதனால் யாரேனும் வழுக்கி விழுந்து விபத்து நேரிட்டால், அரசின் மீது வழக்கு தொடுத்து நஷ்ட்ட ஈடு வாங்கியவர்களும் இருக்கின்றார்கள்.

சரி சாலைகளிலும் தெருக்களிலும் அரசு உப்பு இடுகிறது,, வீட்டின் முற்றத்தில் யார் இடுவார்கள்?

அது அந்தந்த வீட்டு உரிமையாளர்களின் - குடியிருப்போரின் பொறுப்பு.

இப்படித்தான், கடந்த வாரம் நிலவிய அதிக குளிரின் விளைவாக பொழிந்த பனி, சாலைகளில்  படிந்து உறைந்து சாலையோடு சாலையாக இரண்டற கலந்திருந்ததை அறியாமல்,காலைல அலுவலகம் செல்லும் அவசரத்தில் அந்த கருப்பு ஐஸின் மீது கால் வைக்க,வழுக்கி விழுந்தேன்.

அப்புறம்....

 " என்னாச்சி.... நைட்டு பனி பேஞ்சது.... காலைல ஆபீஸ் போக வெளியே வந்தேன்... வாசலில்காலை வைத்தேன் அப்புறம் ......ஓ....ஓ....வழுக்கி விழுந்து பின் மண்டையில அடி பட்டுச்சி....கால் எல்லாம் சிராய்ப்பு ஏற்பட்டுச்சி....ரெண்டு நாள் லீவு போட்டேன்...மற்றபடி ஐயம் ஆல்ரைட்

அப்புறம்....

" என்னாச்சி.... நைட்டு பனி பேஞ்சது.... காலைல ஆபீஸ் போக வெளியே வந்தேன்... வாசலில்காலை வைத்தேன் அப்புறம் ......ஓ....ஓ....வழுக்கி விழுந்து பின் மண்டையில அடி பட்டுச்சி....கால் எல்லாம் சிராய்ப்பு ஏற்பட்டுச்சி....ரெண்டு நாள் லீவு போட்டேன்...மற்றபடி ஐயம் ஆல்ரைட்

அப்புறம்....

" என்னாச்சி.... நைட்டு பனி பேஞ்சது.... காலைல ஆபீஸ் போக வெளியே வந்தேன்... வாசலில்காலை வைத்தேன் அப்புறம் ......ஓ....ஓ....வழுக்கி விழுந்து பின் மண்டையில அடி பட்டுச்சி....கால் எல்லாம் சிராய்ப்பு ஏற்பட்டுச்சி....ரெண்டு நாள் லீவு போட்டேன்...மற்றபடி ஐயம் ஆல்ரைட்.

ஓ ..ஓ.. சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லினே இருக்கேனா...?

அப்புறம்...

 என்னாச்சி......நைட்டு பனி பேஞ்சது.....................

மற்றபடி ஐயம் ஆல்ரைட்.

"என் நடை கண்டு ஐஸ் கட்டி கரைந்தோட வேண்டும்.
நான் விழுந்தாலும் தலை கைகால் பெலன் கொள்ள வேண்டும்...
சக்திகொடு......."

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ


8 கருத்துகள்:

 1. பாருங்கள் ..எல்லாரும் ஐஸ் வைத்தால் விளுந்துவிவார்கள் என்பது சரியாய்த்தான் இருக்கிறது..ஆனாலும் நீங்கள் ஆரோக்கியமாக இருக்க வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. செல்வகுமார்,

   வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் என் நலனில் தாங்கள் காட்டும் கரிசனைக்கும் மிக்க நன்றி.

   கோ

   நீக்கு
 2. வணக்கம்,
  மக்களைக் காக்கும் நல்ல அரசு,,,
  அய்யோ என்னாச்சு,,
  நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்


  1. வருகைக்கும் என் நலனில் தாங்கள் காட்டும் கரிசனைக்கும் மிக்க நன்றி.
   " என்னாச்சி.... நைட்டு பனி பேஞ்சது.... காலைல ஆபீஸ் போக வெளியே வந்தேன்....."

   கோ

   நீக்கு
 3. எனக்கு ஒரு டவுட்டு நண்பரே ‘’அந்த’’ சக்தி யாரு ?
  அந்தப்பாடலை எழுதியவன் ஒரு தமிழன் இந்தப் பாடலுக்கு வாயசைத்தவனுக்கு இவ்வளவு தூரம் அர்த்தம் விளங்கி இருக்குமா ? என்பது சந்தேகமே.. எப்பொழுதுமே பிறமொழிக்காரனை புகழ்ந்து எழுதியே நிறையப் பேருக்கு ஏணியாக இருந்து விட்டான் தமிழன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பா,

   வருகைக்கு மிக்க நன்றி.

   சக்தி கிடைத்ததும் தகவல் அனுப்பி உங்க டவுட்ஐ தீர்த்து வைக்கிறேன்.

   கோ

   நீக்கு
 4. பதில்கள்
  1. ஐயா,

   தங்களின் முதல் வருகைக்கு மிக்க நன்றி.

   கோ

   நீக்கு