பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 22 ஏப்ரல், 2016

வந்துட்டான்யா...... வந்துட்டான்யா!!

நினைத்தீர் வந்தேன் !!


நண்பர்களே,

கடந்த சில வாரங்களாக பதிவுகள் எதுவும் என் பட்டறையில் இருந்து வெளிவரவில்லை என்ற ஏக்கம் உங்களில் பலருக்கு இருந்ததை நீங்கள் வெளிபடுத்திய அர்த்தமுள்ள ஆதங்க வெளிப்பாடுகள்  மூலம் அறிந்துகொண்டேன்.


கடைசியாக கடந்த மாதம் அதாவது மார்ச் மாத துவக்கத்தில் எழுதிய பதிவிற்கு பிறகு சில வாரங்கள் எழுதும் சூழலில்  நான் இல்லாமல் போனதும் அதைதொடர்ந்து ஆண்டு இறுதி (கணக்கு) முடிப்பு - ஒப்படைப்பு பணிக்காக  வார இறுதி நாட்களில்கூட அலுவலகம் செல்ல வேண்டி இருந்ததாலும்  பதிவுகள பக்கம் தலை வைத்துக்கூட படுக்க முடியாமல் போனது.

தலைக்கு மேலே வேலைகள் இருந்தது மட்டுமில்லாமல் தலைக்கு உள்ளேயும், என் "கடமை", "கண்ணியம்", "கட்டுப்பாடுகள்" என்னை கட்டிபோட்டிருந்ததாலும், எனது ஆசா பாசங்கள் என் கட்டுப்பாட்டை விட்டு தூர விலகி இருந்ததாலும் என்னால் பதிவுகள் எழுத முடியாமல் போனது.

எனினும் என்னுடைய முந்தைய பதிவுகளை நீங்கள் எல்லோரும் தினமும் வாசித்து மகிழ்ந்து வருவதை அவ்வப்போது அறிந்து,  வேலை சுமைகளுக்கு இடையிலும் வண்ண பூஞ்சோலையின்  நடுவில் இருந்த  சுகந்த அனுபவமாய் எண்ணி நானும் மகிழ்ந்தேன்.

உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் "என் இனிய தமிழ் மக்களின்" விசாரிப்பு கடிதங்கள், மற்றும் அலை அலையாய்(?) வந்த அலைபேசி, தொலைபேசி அழைப்புகள்  மூலம் "என் சேவை இந்த உலகத்திற்கு - பதிவுலகத்திற்கு எந்த அளவிற்கு(??) தேவை" (!!!!)என்பதை  புரிய வைத்தீர்கள் அதை நானும்  புரிந்துகொண்டேன். 

"காணவில்லை" என்ற அறிவிப்பு மட்டும்தான் இல்லை மற்றபடி என் பதிவுகளை காணாமல் துடித்த உங்க இதய துடிப்புகளை என்னால் உணர முடிந்தது.

சரி போனது போகட்டும் இனி சரிவுகள் சரியாய் ஆகட்டும்  என்ற எண்ணத்தில் மீண்டும் பதிவுகள் மூலம் இணைப்பு பாதைகளை புதுபித்துக்கொண்டு உங்களுடன்  பயணிக்க  உடன்படுகிறேன் .

இனி தொடர்ந்து எழுத முயற்சிக்கின்றேன்.

அனைவருக்கும் என் வணக்கங்களும் தொடர் ஆதரவிற்கும்  நன்றிகளும்.

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ

12 கருத்துகள்:

 1. வருக ஆவலுடன் தொடர்கின்றேன் நண்பரே

  பதிலளிநீக்கு
 2. ஆண்டு இறுதி (கணக்கு) முடிப்பு - ஒப்படைப்பு பணிக்காக  வார இறுதி நாட்களில்கூட அலுவலகம் செல்ல வேண்டி இருந்ததாலும்  பதிவுகள பக்கம் தலை வைத்துக்கூட படுக்க முடியாமல் போனது.///

  இதச் சொல்லத்தான் இம்புட்டு பில்டப்பா:) ம்ம்ம்

  மீண்டும் ஃப்ரெஷ்ஷா எழுத ஆரம்பிக்க வாழ்த்துக்கள். சார்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மகேஷ்,

   நன் மீண்டும் எழுத ஆரம்பிக்க வேண்டும் என்பதற்காக ஒரு சிலர் , ஊர் ஊராக , கோயில் கோயிலாக சென்று யாகம் வளர்த்து பூசைகள் செஇததாககூட கேள்விபட்டேன்.

   அதற்கு பலன்தானோ என்னவோ நான் மீண்டும் வந்தது.

   நன்றி மகேஷ் உங்களின் கடிதங்களுக்கும் கரிசனைகளுக்கும்.

   கோ

   நீக்கு
 3. பாலமகி பக்கங்கள் மூலமாக தங்களின் பதிவைப் பற்றி அறிந்தேன். வாழ்த்துகள். தெர்டர்ந்து பதிவுகள் மூலமாக சந்திப்போம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஐயா.

   பாலமகி வலைத்தளம் மூலம் என் தளம் வருகைதந்த தங்களின் முதல் வருகையும் வாழ்த்துக்களும் மகிழ்ச்சி அளிக்கின்றன.

   பாலமகி பதிவருக்கும் என் நன்றிகள்.

   சந்திப்போம்

   கோ

   நீக்கு
 4. கோ சத்தியமாக ஏன் இல்லை உங்கள் பதிவுகள் என்று நினைத்துக் கொண்டோம்..ஆனால் உங்களுக்கு வேலைப்பளுவாகத்தான் இருக்கும் என்று கேட்காமல் விட்டோம். ஏனென்றால் பல பதிவர்கள் இப்படித்தான் சில காலம் எழுதாமல் இருப்பார்கள் பின்னர் மீண்டும் வருவார்கள் என்பதால்...பழகிப்போன ஒன்று என்பதால் ஹிஹிஹி...அப்படியே உங்களுக்கும் இருக்கும் என்று..

  விசுவிடம் கேட்க நினைத்துக் கேட்பதற்குள் உங்கள் பதிவு வந்துவிட்டது...தொடர்கின்றோம்...

  இங்கிலாந்து கோ/ அரசரைக் காணவில்லை என்று கேட்கலாம் என்றிருந்தோம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நம்புகிறேன் என் அன்பிற்கினிய நண்பர்களே.

   கோ

   நீக்கு
 5. வணக்கம் அரசே,
  நலம் தானே, அனைவரும்,,

  தாங்கள் பதிவுலகம் மீண்டும் வந்தது மகிழ்ச்சியே,, அதெப்படி ,,,, இவ்வளவு பில்டப் தேவையா? சும்மா, ஹா ஹா,,
  சரி சரி எழுதுங்கள் படிக்கிறோம்.
  வருகைக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பேராசிரியருக்கு,

   நலம்தான்.

   தங்களின் தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும் மிக்க நன்றிகள்.

   கோ

   நீக்கு