பின்பற்றுபவர்கள்

சனி, 23 ஏப்ரல், 2016

கோஹி "நோர்முஸ்க்கோ".

பட்டை (தீட்டிய)  நாமம்!!

உலக பிரசித்தி பெற்ற, பல நூற்றாண்டுகளையும் பல ஆயிரம் ஆண்டுகளையும் கடந்து இன்னும் கூட அறுதி இட்டு உறுதியாக மதிப்பீடு செய்ய முடியாத விலை உயர்ந்த
பல வைர கற்களுள் முதன்மையான வைரமாக திகழும் அந்த வைரம் பதித்த ராஜ கிரீடம் உலகாண்ட ஆங்கில பேரரசின் முடிசூடிய கோமகளாக  விளங்கிய விக்டோரியா மகா ராணியின் சிரசை அலங்கரித்து அவரது ராஜீய பலத்தை - செல்வாக்கை   உலகத்திற்கு புதிய வெளிச்சம் போட்டு காட்டியது. 


அந்த வைரகல்லின் பெயர்தான் கோஹினூர் வைரம்.

அதன் பின்னணி, மற்றும் முன்னணி எல்லாம் நாம் அறிந்ததுதான்.

இந்தியாவிற்கு சொந்தமான அந்த பொக்கிஷம் வெள்ளையர்  நம்மை ஆண்ட சமயத்தில் இந்தியாவிலிருந்து இடம் பெயர்ந்து இங்கிலாந்து தேசத்தின் விலைகூடிய கலைக்கூடத்தின் பொக்கிஷ பெட்டகத்தின் ஒரு அங்கமாக சேர்க்கப்பட்டுவிட்டது. 

இந்தியாவில் மன்னர் ஆட்சியும் வெள்ளையரின் அடிமை ஆட்சியும் முடிந்த சில வருடங்களில் மக்கள் ஆட்சி மலர்ந்ததும்  இந்தியர்களின் மூக்கு வியர்த்தது.  

நம் நாட்டிலிருந்து முறை அற்று எடுத்து செல்லப்பட்ட விலை மதிப்பும் கலை மதிப்பும் கொண்ட பல்வேறு அரும்  பொருட்களையும் பொக்கிஷங்களையும் மீண்டும் இந்தியா கொண்டு வந்து சேர்க்க வேண்டும் எனும் ஞானோதயமும் உதித்தது.

அதன் அடிப்படையில் மீட்டெடுக்க பட வேண்டிய பொருட்களுள் பல காலமாக பட்டியலில் இருந்த பொருட்களுள் பிரதானமானவை , உலகத்தில் இன்றுவரை அரிதாக கருதப்படும் கோஹினூர் வைரமும்,கலை வேலைபாடுகளும் நவரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட பொன்னால் ஆனா மயில்ஆசனமும் பிரசித்தி பெற்ற சுல்தான் கஞ்ச் புத்தர் சிலையும்தான்.

இவை இந்தியாவிலிருந்து திருடபட்டதோ, அல்லது கொண்டு செல்லப்பட்டது அல்லது அபகரிக்கபட்டதோ  அல்லது அன்பளிப்பாக பெறபட்டதோ எப்படி இருந்தாலும் ஒரு முறை இங்கிலாந்தின் தேசிய அருங்காட்சி அகத்தில் சேர்க்கப்பட்டுவிட்டால் அதை எந்த காரணத்திற்காகவும்  யாருக்காகவும் அதை வெளியில் எடுத்து திருப்பி கொடுக்கவோ அல்லது மீண்டும் யாருக்காவது அன்பளிப்பாகவோ கூட கொடுக்க கூடாது என்று இங்கிலாந்து தனது அரசியல் சாசனத்தில் சட்டமே இயற்றி விட்டதாம்.

அதனால் இந்த அறிய கலை பொக்கிஷங்களை நம் வரலாற்று , கலை , நாகரீக பண்பாட்டு பின்னணியின் முன்னணி சான்றுகளை மீட்டெடுப்பதில் ஒரு பின்னடைவு ஏற்பட்டிருக்கும் இந்த தருணத்தில் இங்கிலாந்தும் விடா பிடியாக திருப்பி கொடுக்க மறுத்து வரும் இந்த சமயத்தில், புதிதாக நம் விரலே நம் கண்ணை குத்துவதுபோல்,நமது இந்திய சொலிசிடர் ஜெனெரல் , கோஹினூர் வைரம் இங்கிலாந்து பேரரசிக்கு இந்திய மன்னர்களால் கொடுக்கப்பட்ட அன்பு பரிசு, எனவே இதனை திருப்பி கேட்க்க நமக்கு எந்த உரிமையும் இல்லை "என்பதாக சொல்லி இருப்பது வியப்பளிக்கின்றது.

அன்பளிப்பாக கொடுத்ததை திருப்பி கேட்பது நாகரீகம் அல்ல என்பது இந்திய குடிமக்கள் எல்லோருக்கும் தெரியும் அது நமது பண்பாடும் கூட.

Image result for kohinoor diamond in england museum

ஆனால், நம் பண்பாட்டை நாகரீக-கலாச்சார, கலை, வரலாற்றை, செல்வ செழிப்பை சொல்லும் இந்த அறிய வகை பொக்கிஷம் நம் நாட்டில் இருந்து களவாடப்பட்டு அல்லது அபகரிக்கப்பட்டு கொண்டு செல்லபட்டிருக்குமேயானால் அதனை மீட்டெடுப்பதுதான் இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் விஷயம்.

எனவே இந்த கோஹினூர் வைரகல் விஷயத்தில் நாம் நோர் முஸ்கினு(மகேஷ் - சரியா) அதாவது வாயை மூடிக்கொண்டு இருப்பது சரி அல்ல என்றே எனக்கு தோன்றுகின்றது.

அதே சமயத்தில், இந்த அரியவகை வைரம் இங்கிலாந்து போன்ற அரசியல் மேலாண்மை மேலோங்கிய நாட்டில் இருப்பதுதான் அந்த வைரத்திற்கு பாதுகாப்பு , நமக்கும் இது எங்க ஊரிலிருந்து (திருடி) கொண்டுவரப்பட்டது என்று பரம்பரை பரம்பையாக பெருமையாக சொல்லிகொண்டே இருக்கலாம்.

அதை விடுத்து இந்தியா கொண்டுவந்தால் அது எங்கே யார் வீட்டுக்கு போகும் எப்படி  மாயமாகும் எத்தனை துண்டுகளாக பங்கு போடட்டு சிதைந்து போய் அதன் சிறப்பை இழக்குமோ என்று நினைக்கும்போது , இதை பற்றி வாய் திறக்காமல் (கோஹி)நோர் முஸ்கினு இருப்பதும் நல்லதுதான் என்று தோன்றுகின்றது.

இந்தியாவின் சொத்தாக விளங்கவேண்டிய இந்த அரிய பொக்கிஷம் தனிப்பட்ட செல்வந்தர்களின் கைகளில் தஞ்சம் அடைந்தால் அது நம் இந்திய குடிமக்கள் ஒவ்வொருவர் நெற்றியிலும் பெரிய பெரிய  நாமம்  அதுவும் பட்டை நாமம் அல்ல "பட்டை தீட்டப்பட்ட நாமம்" போடபடுவதற்கு சமமாகும்.

இதை  பற்றி நீங்கள்  என்ன நினைகின்றீர்கள்?

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ

10 கருத்துகள்:

 1. இங்கிலாந்தில் கோஹினூர் வைரம் இருப்பதுதான் பாதுகாப்பு. நீங்கள் சொல்லியது போல இங்கு கொண்டு வந்தால் நடக்க வாய்ப்பிருக்கு.

  நாமும் பெருமையாக  கூவிக்கொண்டிருக்கலாம் ’நம்மிடமிருந்து வெள்ளையன் அபகரித்துச் சென்றதாக்அ’:)

  கோஹினூர் விஷயத்தை விட்டுட்டு இந்தியாவில் இருக்கும் பல கோடி விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்நிலை உயர்த்த
  அரசியல்வாதிகள் பாடுபடலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மகேஷ்,
   உள்ளூரில் இருக்கும் மக்களின் உடமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்காமல் எப்பவோ களவு போன வைரத்தின் பின்னால் வரிந்து கட்டிக்கொண்டு நிற்பது சரி இல்லைதான். ஆமாம் சுந்தர தெலுங்கு வார்த்தை சரிதானே?

   வருகைக்கு மிக்க நன்றி.

   கோ

   நீக்கு
 2. அங்கிருக்கிறது என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம். இங்கு வந்தால் பாதுகாக்கப்படுமா என்பது சந்தேகமே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சரியாக சொன்னீர்கள் ஐயா.

   வருகைக்கு மிக்க நன்றி.

   கோ

   நீக்கு
 3. அது ஓர் ராசியில்லாத வைரம் என்று கேள்விப் பட்டு இருக்கிறேன்! அது இங்கிலாந்திலேயே இருக்கட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் ஒரு ராசி இல்லா ..ரத்னம்............ என்று பாடதோன்றுகின்றது. அதே சமயத்தில் ச்சீ..... ச்சீ இந்த பழம் புளிக்கும் என்று சொல்வதாகவும் தோன்றுகின்றது.

   வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றி சுரேஷ்.

   கோ

   நீக்கு
 4. பதில்கள்
  1. வந்தா போடாமல் இருப்பேனா.... நான் என்ன வச்சிக்கினு வஞ்சனையா பன்னபோறேன்.

   ம்ம்ம்ம்....... யார நெனச்சி எங்கே கமெண்ட் அனுப்பிட்டீங்களோ!! அந்த தில்லை அகத்து துளசி மாடத்திற்கே வெளிச்சம்.

   நன்றி

   கோ

   நீக்கு
 5. வணக்கம் அரசே,

  என்னைப் பொறுத்தவரை அது அங்கேயே இருப்பது தான் நல்லது,, இப்ப நாம் அது நம்முடையது என்று வெட்டி பெருமை பேசிக்கொண்டு இருக்கிறோம்.
  பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பேராசிரியரே,

   நீங்க சொன்னா சரியாகத்தான் இருக்கும்.

   வருகைக்கு மிக்க நன்றி

   கோ

   நீக்கு