பின்பற்றுபவர்கள்

வியாழன், 28 ஏப்ரல், 2016

"உண்மையான போலி மருத்துவர்கள்"

பித்தலாட்ட ஸ்பெசியலிஸ்ட்!!!


நண்பர்களே,

கடந்த இரண்டு நாட்களாக,இங்கிலாந்தில் இருக்கும் ஜூனியர் டாக்டர்கள் புதிதாக வந்திருக்கும் அரசு செயல் திட்டங்களில் உடன்பாடு இல்லாததால் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கின்றர்கள்.


இந்த வேலை நிறுத்தம் முறையாக திட்டமிடப்பட்டு, சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளுக்கும் அரசாங்கத்திற்கும் முன்னறிவிப்பு செய்துவிட்டு முடிந்த அளவிற்கு மாற்று ஏற்பாடுகள் செய்துவிட்டு பொது மக்களுக்கும் , நோயாளிகளுக்கும் எந்த இடையூறும் விளைவிக்காமல் தங்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். 

இவர்களது கோரிக்கையை அரசு தீவிரமாகவும் துல்லியமாகவும் தனது கவனத்தில் கொண்டு, மாற்று வரைவு திட்டங்கள் குறித்து பரிசீலிக்கும் என்று எல்லோரும் எதிர்பார்கின்றனர்.

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் அந்த இளம் மருத்துவர்களின் ஒருங்கிணைப்பாளரிடம் நிருபர்கள் பேட்டி காணும்போது, அவர் சொன்னது:

"நாங்கள் எங்கள் கருத்தை வலியுறுத்த இந்த இரண்டு நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டோம், போராட்டம், முடிந்ததும் அவரவர் தங்கள்  பணிக்கு திரும்புவோம், எங்கள் பணிகளை தொடர்ந்து முழு கவனத்துடனும் ஈடுபாட்டுடனும்,அர்பணிப்புடனும் தொடர்ந்து  செய்வோம்" என்றார்.

இவர்களது அர்பணிப்பும் சமூக அக்கறையும் அந்த பேட்டியில் வெளிப்பட்டதை முழுமையாக உணர முடிந்தது.

இந்த  நேரத்தில் நம் நாட்டில் இருக்கும் போலி மருத்துவர்கள் குறித்த ஒரு சிந்தை எனக்கு ஏற்பட்டது.

யார் போலி மருத்துவர் என்ற கேள்வியும் எழுந்தது.

உரிய கல்வி தகுதியும், அறிவும்,  பயிற்சியும் அனுபவமும் இல்லாமல், தங்கள் பெயருக்கு பின்னால் பல பட்டங்களை  போட்டுகொண்டு அப்பாவி பொதுமக்களை ஏமாற்றி பணம் சம்பாதிப்பவர்களே போலி மருத்துவர் என்று இதுவரை எண்ணிகொண்டிருந்த பொதுவான என் கருத்து இன்றோடு மாறிப்போனது.

அப்படி யானால் யார்தான் போலி மருத்துவர்?

முழுமையான கல்வித்தகுதியும், முறையான பயிற்சியும், பல ஆண்டுகள் அனுபவமும் இருந்தும் எவர் ஒருவர் தன் கடமையை , தான் எடுத்துக்கொண்ட உறுதி மொழிக்கு - சத்திய பிரமாணத்திற்கு ஏற்ப செய்ய தவறுகிறார்களோ அவர்களே "உண்மையான" போலி மருத்துவர்.

செவி வழியாக கேட்ட சில செய்திகளின் அடிப்படையில் பல மருத்துவர்கள் பணத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்ய துணிந்தவர்கள் என்பதை அறிந்து  வேதனை கூடுகிறது.

வந்திருப்பவரின் உபாதைக்கும் இவர்கள் எடுக்க சொல்லும் பரிசோதனைகளுக்கும் கொஞ்சம்கூட சம்பந்தமிருக்காது, எனினும் எல்லாவித சோதனைகளுக்கும் ஆட்படுத்துவார்களாம் கூடுதல் பணம் சம்பாதிக்க.

இறந்து பல நாட்கள் ஆகி இருந்தும், தனியார் மருத்துவ மனைகளில் சேர்க்கபட்டிருந்த நோயாளி, இன்னும் உரிரோடுதான் இருக்கின்றார் என்பதுபோல் செயற்கை சுவாச கருவிகளால் இணைக்கப்பட்டு இன்னும் சில நாட்கள் அங்கேயே  வைத்திருந்துவிட்டு பிறகு சொல்லுவார்களாம், இன்றுதான் அவர் இறந்தார் என்று.

இதனால் பெரும் தொகையை கட்டணமாக பெற்றுகொண்டு இறந்தவரின் உடலை கொடுப்பார்களாம்.

அதேபோல, ஆரோக்கியமாக வந்த கர்ப்பிணி தாய்மார்களுக்கு இயற்கை முறையிலேயே குழந்தை பிறக்க வாய்ப்பிருப்பதை அறிந்தும் ,  குழந்தையின் பொசிஷன் மாறி இருக்கின்றது, தாயின் உடல் நிலை பலவீனமாக இருக்கின்றது, உடனடியாக அறுவை சிகிச்சை செய்துதான் தாயையும் சேயையும் காப்பற்ற வேண்டும் இல்லை என்றால் நிலைமை மோசமாகிவிடும் என உண்மைக்கு மாறான சில செய்திகளை சொல்லி, பயமுறுத்தி அறுவை சிகிச்சைக்கு ஆட்படுத்தி அதனால் பல இலட்ச்சங்களை சம்பாதிக்கும் மருத்துவர்களும் அவர்கள் சார்ந்த மருத்துவ மனைகளும் இருப்பதை நினைத்து வருத்தம் மேலிடிகின்றது.

இதுபோன்று இன்னும் எத்தனை எத்தனையோ முறையற்ற செயல்களில் ஈடுபட்டு, மருத்துவர்களை தெய்வங்களின் மறு உருவாக மட்டுமல்ல பலரும் இவர்களை தெய்வங்களாகவே பார்க்கும் மன நிலைமையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி படு பாதக செயலில் ஈடுபடும் மருத்துவர்களும் போலி மருத்துவரே என்பது என்  கருத்து.

இங்கே ஞாயமான தங்களது கோரிக்கையை முன் வைத்து தர்ம சிந்தையும் சமூக அக்கறையுடனும் இரவு பகல் பாராமல்  உழைக்கும் மருத்துவர்களின் கோரிக்கைகள் நிறைவேற உங்கள் சார்பாகவும் வாழ்த்தி இந்த பதிவை நிறைவு செய்கிறேன்.

நன்றி,

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ


6 கருத்துகள்:

  1. வணக்கம் அரசே,
    மருத்துவர்கள் குறித்த தங்கள் அலசல் அருமை,,,

    போலி எதில் தான் இல்லை,,, பகிர்வு நன்றாக உள்ளது. தொடருங்கள்,,, நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேராசிரியருக்கு,

      தின் பண்டமாக செய்து விற்கப்படும் "போலி"யிலும் போலி வந்துடுச்சாமே?

      போலி இல்லாத உங்கள் கருத்திற்கு போலியில்லாத நன்றிகள்.

      கோ

      நீக்கு
  2. உண்மையான போலி மருத்துவர்கள்... oxymoron போல இருக்கிறது. உண்மைதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே,

      நீங்கள் என் பதிவை சொல்கின்றீர்களா, தலைப்பை சொல்கின்றீகளா Oxymoron என்று ( கொஞ்சம் கூராககவும் கொஞ்சம் மொக்கையாகவும் இருகின்றதோ?).

      வருகைக்கு மிக்க நன்றி.

      கோ

      நீக்கு
  3. ஹும் நீங்கள் கொடுத்துவைத்தவர்கள்.

    mbbs, md donation கட்டி படிச்சு, சொந்தமாக ஒரு மருத்துவமனை திரந்து, கோடிக்கனக்கில் செலவு செய்து வைத்தியம்பார்க்க ஆரம்பிக்கும்
    மருத்துவர்கள், investment செய்த பணத்தை திருப்பி எடுக்கும் ஒரு சிறந்த வியாபார தொழிலாக மாரிவிட்டது மருத்துவத் துறை.

    பதிவில் நீங்கள் எழுதிய சம்பவங்கள் ஒரு சிலதே. இவர்களைப் பற்றி பேச எவ்வலவோ இருக்கு. எந்த மாற்றமும் நிகழப்போவது கிடையாது!

    முதலில் அரசாங்கம், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தம் பிள்ளைகளைத் தனியார் பள்ளிகளில் சேர்ப்பதை தடுக்க வேண்டும்.
    படிப்படியாக தனியார் பள்ளிகள் மூடப்பட வேண்டும்.
    அப்போதுதான் சமமான கல்வி சமூகத்தில் அனைவருக்கும் கிடைக்கும்.

    திறமை இருப்பவர் மருத்துவராக வரட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகேஷ்,

      நீங்கள் சொல்வது அத்தனையும் எனக்கும் ஏற்புடைய கருத்துகள் தான்.

      வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றி.

      கோ

      நீக்கு