பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 22 ஆகஸ்ட், 2017

மாலு! மாலு!! மாலு!!!.

மாலு கண்ணா  ..வா !! 

நண்பர்களே,

மாலதி, மாலன்  எனும் பெயர்களை  சுருக்கமாக மாலு என்று அழைப்பார்கள்.

வட்டார வழக்கில் பணத்திற்கு கொச்சையாக மாலு என்று சொல்வதும் உண்டு.

ஆனால் மாலு என்ற இந்த ஒற்றை வார்த்தையை  தொடர்ச்சியாக மூன்று முறை சொன்னால் அந்த வார்த்தைகள்   நம்மையும் நம் சிந்தனை ஓட்டத்தையும் 70  80 களில் ஒலித்து புகழ்பெற்ற இலங்கை துள்ளல் இசை பாடலான சுரங்கணி பாடலை நோக்கி  பயணிக்க செய்யும்.

70  80 களில் பிறக்காத என்போன்ற(???) பிள்ளைகளுக்குகூட பின்னாளில்  இந்த பாடல்கள் மிகவும் பிரசித்தம்.  

சரி இப்போது ஏன் இந்த வார்த்தையை குறித்த பேச்சி?

ஒருவேளை அந்த சுரங்கணி பாடலை குறித்த ஆராய்ச்சி பதிவா?  அல்லது மாலதி(??) குறித்த ஞாபக பதிவா?

அதெல்லாம் இல்லைங்க.

இந்த காலத்தில் மாலுக்கு போகிறேன், மாலுக்கு போகலாம் போன்ற சொற் றொடர்கள் சாமானிய மக்களிடத்திலும் சகஜமாகிவிட்ட ஒன்று என்பதால் சமீபத்தில் போய்வந்த  மாலு.. மாலு...  மாலு... ஷாப்பிங் மாலுவைக்குறித்த செய்தியை சொல்லத்தான் இத்தனை பீடிகைகள்.

சென்னை  , மும்பை, பெங்களூர் போன்ற இந்திய பெரு நகரங்களில் முளைத்தெழுந்து நிற்கும் மால்கள் என்று வர்ணிக்கப்படும் வணிக வளாகங்களின் எண்ணிக்கையை காட்டிலும் பன்மடங்கு அதிக எண்ணிக்கையில் அதாவது சுமார் அறுபதிற்கும்  மேற்பட்ட இயங்கும் மால்களும், சுமார் பத்திற்கும் மேற்பட்ட கட்டுமான நிறைவுறும் நிலையுலுமாக , கண்கவர் அழகுடனும் கம்பீர பொலிவுடனும் செல்வ செழிப்பினை  ஒவ்வொரு அங்குலத்திலும் பிரதிபலிக்கும் வசீகர மால்களை கண்டு பிரமித்து போனேன்.

உலகிலுள்ள அனைத்து உயரிய நிறுவன அடையாள குறியீடுகள்(பிராண்டட்) கொண்ட அனைத்து பொருட்களையும் தன்னகத்தே கொண்டுள்ள இந்த மால்களுள் ஒன்றினை முழுமையாக   சுற்றிபார்க்கவே ஒரு நாள் போதாது.

சில மால்களில் நூற்றுக்கணக்கான கடைகள் துவங்கி ஆயிரக்கணக்கான கடைகள் அமைந்திருப்பது வியப்பினை மேலும் அதிகரிக்கின்றன.

உலகின் அத்தனை முன்னணி உணவு நிறுவனங்களின் உணவு விடுதிகள் தேநீர் , காபி கடைகள்  நிறைந்திருக்கின்றன.

பல அடுக்குகள் கொண்டுஇருக்கும் இந்த மால்களுள் பிரத்தியேகமாக கருதப்படும்  சுமார் 3,50,000 சதுர அடி பரப்பளவில் அமைந்திருக்கும் ஒரு மாலில் உலகின் மிகப்பெரிய மீன் தொட்டியும் அதனடியில் உயிரியல் பூங்காவும்    அமைக்கப்பட்டிருக்கும்  இந்த மால் உலகின் 15ஆவது மிகப்பெரிய மால் என்று சொல்லப்படுகிறது இங்கே சுமார் 1200 கடைகள் உள்ளன.

ஒவ்வொரு கடையிலும் சுமார் 10 நிமிடங்கள் செலவழித்தாலும் மொத்த கடைகளையும் சுற்றிவர எத்தனை மணி  எத்தனை  நாட்கள்  ஆகும் என்பதை கணக்கிட்டு பார்த்துக்கொள்ளுங்கள்.

வருடத்திற்கு சுமார் தொண்ணூறு  மில்லியன் மக்கள் வந்துபோகும் இந்த பிரமாண்டமான மாலில் உலக புகழ் பெற்ற  மிகப்பெரிய டான்சிங்க் நீரூற்று (Dancing water fountain) வண்ண விளக்குகளுடன் இசைக்கேற்ப அசைந்தாடுவதை கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.

பதிவின் ஆரம்பத்தில் சொன்னதுபோல் மால் என்பதற்கு பணம் என்றொரு அர்த்தம் சொல்வது சரிதானோ?

இத்தனையும் எங்கே இருக்கின்றது? எப்போது பார்த்தேன்?

வேறு  எங்கேயும் இல்லைங்க,  வா என்று  என்னை வசீகரித்து வரவழைத்த எண்ணெய்  வளம் கொழிக்கும் அரபு தேசங்களுள் ஒன்றான  துபாய் தேசத்து குறுக்குத்தெருவில் சமீபத்தில் சில வாரங்கள் தங்கி  இருந்தபோது கண்டு ரசித்தவைதான் இத்தனையும்.

Image result for images of dubai mall

துபாயில் கண்ட வேறு சில தகவல்களை பற்றியும் , அதை தொடர்ந்து ஐக்கிய அரபு நாடுகளின் தலைநகர் அபுதாபியில் பார்த்த , சந்தித்த நபர் (உங்களுக்கும் அவரை தெரிந்திருக்கலாம்) ஒருவரை(??) பற்றியும் பிறகு சொல்கிறேன்.

அதுவரை...

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ

10 கருத்துகள்:

  1. ட'மால்' ஆங்கிலம் கலந்து நவ நாகரீக தமிழ் பன்பாட்டின்படி கலந்து சொன்னால் THE'மால்' அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பே சிவம்,

      உம்"மால்" மட்டுமே இப்படி எல்லாம் சிந்திக்க முடியும் என்று எம்"மால்" புரிந்துகொள்ள முடிகிறது.

      வருகைக்கு மிக்க நன்றி.

      கோ

      நீக்கு
  2. மாலு மாலு மாலு வை ரசித்தோம்...தலைப்பை..முதலில் சுராங்கனி ஆராய்ச்சி என்றே நினைத்தோம் ! சரி கோ அவர்கள் இலங்கைப் பாடல்களை ஆராய்ந்து முனைவர் பட்டம் பெறப் போகிறார் என்று நினைத்தோம். இது துளசியின் வாதம். கீதாவோ இல்லை கோ வார்த்தை விளையாட்டு விளையாடுபவர் எனவே இது மால் குறித்த பதிவாகத்தான் இருக்கும் என்று வாதிட (படம் பார்த்துட்டாங்கல) ஆமாம் பணம் விளையாடும் மால்!!!

    கேரளத்தில் லுல்லு மால் என்று எர்ணாகுளத்தில் இருக்கிறது மிகவும் புகழ்பெற்றது. ஆசியாவிலேயே மிகப் பெரியது என்று சொல்லுகிறார்கள். சென்னையிலும் கேட்கவே வேண்டாம் நிறைய மால்கள்!! ஆனால் நமக்குத்தான் மாலு வேண்டும் இங்குச்செல்ல வேண்டுமென்றால்...ஹிஹிஹி

    இங்குள்ள மால்களும் இத்தனை பெரிதாக இல்லை என்றாலும் இதே போன்ற வடிவமைப்புதான் பெரும்பாலும் அதுவும், பெரும்பான்மையான மால்கள் அரபு நாட்டில் முதலீடு செய்து தோழில் செய்பவர்கள்தான் இங்கு தொடங்கியிருப்பதால் (குறிப்பாகத் துபாய்) அதே போன்றுதான் இங்கும் உள்ளன..அங்கு கிடைப்பவை அனைத்தும் இங்கும்...

    சரி சரி காத்திருக்கிறோம் அடுத்த பதிவிற்கு. அபுதாபிப் பதிவர் (முன்னர் என்றால் கில்லர்ஜி யாக இருக்கலாம்...ஆனால் அவர் இப்போது இங்கு வந்தாச்சு...சமீபத்தில் என்றால் பரிவை சே குமார்...என்று நினைக்கிறோம்...

    நீங்களே சொல்லப் போறீங்க...அப்புறம் என்ன...

    தொடர்கிறோம் சுவாரஸ்யங்களை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு மிக்க நன்றி நண்பர்களே.

      என்னுடைய உள்ளத்தின் போக்கு உங்களுக்கு உள்ளங்கை நெல்லிக்கனி தானே.

      என் பதிவை குறித்து விவாதம் செய்ததாக சொல்வதெல்லாம் "நம்பும்படியாக" இருக்கின்றது.

      உங்களுடைய "லொள்ளு" மால் சாரி லுல்லு மால் குறித்த செய்திக்கும் நன்றி.

      இதே போல் லுல்லு மார்க்கெட் என்று பஹரினிலும் ஒன்று இருந்தது.

      கோ

      நீக்கு
    2. லுல்லு மார்க்கெட் என்று பஹ்ரைனிலும் இருந்தது என்ற தகவலுக்கு மிக்க நன்றி கோ!

      //என் பதிவை குறித்து விவாதம் செய்ததாக சொல்வதெல்லாம் "நம்பும்படியாக" இருக்கின்றது.// ஹாஹாஹாஹா...கோ' விடம் பொய்யா சொல்ல முடியும்??!!!! ஹிஹிஹி

      நீக்கு
    3. .கோ' விடம் பொய்யா சொல்ல முடியும்.

      ஆனால் அவர் நம்பமாட்டார்.

      கோ

      நீக்கு
  3. மாலு பற்றி அறிந்தோம். பிற தகவல்களுக்காகக் காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  4. dubai la ninga world largest aquarium paarthingalaa!!!


    naa world la second largest aquarium singapore la sentosa island la sea aquarium la paarthen.

    super aa irunthichu evlvo perusu!!!

    aamam antha pathivar yaaru?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகேஷ்,

      சென்டூசாவிலிருக்கும் மீன்தொட்டியை பார்த்திருக்கும் எனக்கு துபாய் மாலில் இருந்த மீன்தொட்டி மிகுந்த வியப்பளித்தது.

      முதலில் பார்த்த சிங்கப்பூர் அப்போது எனக்கு பிரமிப்பாகத்தான் இருந்தது.

      இயற்கை எழிலும் காட்டு வளங்களும் கனிம வளங்களும் நிரம்பப்பெற்ற சிங்கப்பூரில் அமைக்கப்பட்டிருக்கும் மீன்தொட்டியை குறைத்து மதிப்பிடவில்லை என்றாலும் , வறண்ட பூமியில் அதுவும் பாலைவன மெத்தையில் கடின சிரத்தைகளை மேற்கொண்டு செயற்கையாக அமைக்கப்பட்டிருக்கும் அந்த மீன்தொட்டி என்னை வியக்க வைத்தது.

      தங்களுக்கு மகிழ்வளித்ததுபோலவே எனக்கும் சிங்கப்பூர் மீன்தொட்டி அப்போது மிகுந்த மகிழ்வளித்தது.

      எந்த பதிவர்? நான் எப்போது சொன்னேன் பதிவர் என்று?

      வருகைக்கு மிக்க நன்றி மகேஷ்.

      கோ

      நீக்கு