பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 30 ஜூன், 2017

முகம் காட்டும் எழுத்துக்கள்!!.

அகம் காட்டும் படைப்புகள்!!

நண்பர்களே,

முன்பெல்லாம், வானொலியில் திரை இசை பாடலை கேட்கும்போதே, அது யாருடைய குரல் என்பதை பளீச்சென்று அடையாளம் உணர முடிந்தது.

அதே கால கட்டத்தில் பாடல் வரிகளை கேட்கும்போது அது எந்த கவிஞரின் பாடலாக இருக்க கூடும் என்று ஓரளவிற்கேனும்  "குத்து" மதிப்பாக யூகிக்க முடிந்தது.

பின்னணி இசையும் கூட  யாருடையது என கணிக்க முடிந்தது.

ஆனால் இப்போதெல்லாம் அப்படி இனம் கண்டுகொள்ள முடிவதில்லை. 

இதற்கு காரணம் புற்றீசல் போல புறப்பட்டு வந்திருக்கும் புதுமுக கலைஞர்கள் மட்டுமல்லாது படைப்புகளின் நீர்த்த தன்மையும் , ஏற்கனவே பரீட்சிய பட்ட படைப்புகளின் சாயலில் கொஞ்சம் சாயம் பூசி உருவாக்கம் செய்யப்படுவதும்தான் என்பது பரவலான   பலரது கருத்து.

மாறாக  சில படைப்புகள் படைப்பாளியின் பெயரை நேரடியாக சுமந்து வராவிட்டாலும்,  அல்லது புதிய தளங்களில்  புதிய பெயர்களுடன் வெளி இடப்பட்டாலும்  இன்னும் எத்தனை புனைபெயர்கள் சூடிக்கொண்டாலும் அந்த படைப்புகளின் தன்மை, சொல்லப்படும் செய்தி, சொல்லப்படும் பாங்கு,நோக்கம், அக்கறை, தெளிவு,கருத்து செறிவு, நேர்மை , அர்ப்பணிப்பு  போன்றவற்றை நோக்கும்போது அது இன்னாரின் படைப்பு போலல்லவா இருக்கின்றது என   நினைக்க தோன்றும்.

அவ்வகையில் சில நாட்களுக்கு முன் யூ ட்யூபில் சில செய்திகளை வாசித்துக்கொண்டிருந்த எனக்கு அந்த செய்திகள் சொல்லப்பட்ட விதங்களும், நேர்த்தியும், தெளிவும் விளக்கங்களும் சட்டென்று ஒரு ந(ண்)பரை நினைவுபடுத்தியது.

உடனே   யாரது ? அவர்(!!) பாணியிலேயே எழுதி இருக்கின்றனரே , அதுவும் அவர் பதிவுகள் எழுதுபவரன்றோ, அவரது பதிவுகளை  கள்ளத்தனமாக தங்களது படைப்புகள்போல் இப்போது   யூ ட்யூபில் குரல்வழி தகவல் சொல்லும் முயற்சியில் உண்மை படைப்பாளியின் உழைப்பை , தகவல் தொழில் நுட்ப நூதன  முறையில் களவாடிவிட்டனரோ என்ற ஆதங்கம் எழுந்தது.

சட்டென்று இது யாருடைய தளமாக இருக்கும் ஏன் இப்படி மற்றவரின் உழைப்பை தமதென்று உரிமை கொண்டாடுகின்றனர், அல்லது இவருக்கும் அவர்போலவே ஒன்றான சிந்தனையும் பகிரும் தன்மையும் இருக்குமோ என வியப்பும் ஆதங்கமும் நிறைந்த மனநிலையில் கேள்விகளுடன் , தளத்தின் பெயரை பார்த்தேன்.

முதல் பார்வையில் பிடிபடவில்லை என்றாலும் சிறிது சிந்தனைக்குப்பின் அது யாருடைய தளம் என்பதை கண்டுகொண்டதோடு மனமும் மகிழ்ச்சிகொண்டது.

நான், யாருடையதுபோல இருக்கின்றது என்று யூகித்தேனோ அது சாட்சாத் அவருடையதே என ஊர்ஜிதப்படுத்தி உள்ளம் உவகையுடன் மகிழ்ச்சிகொண்டது.

ஆம் நண்பர்களே நம் பதிவுலக நண்பர் திரு செந்தில் SP செந்தில் குமார் அவர்களின் தளம் தான்.

அப்போதுதான் திடமாக உணர்ந்தேன் ,  இவர் பாணியில் செய்திகளை திரட்டி அவற்றை அழகாகவும் நேர்த்தியாகவும் தொகுத்து உரிய புகைப்படங்களோடு எளிமையாக விளக்கம் சொல்ல யாராலும் கூடாது என்று.

நண்பர் SP செந்தில் குமார் அவர்களின் எழுத்துப்பணியும் செய்தி சொல்லும் பாணியும் எந்த ரூபத்தில் வந்தாலும் அவரது  எழுத்துக்களும்  படைப்புகளும் எங்களுக்கு அவரின்  முகத்தை காட்டும் , காட்டிக்கொண்டே இருக்கும்.

இப்படி எழுத்துக்கள் எழுத்தாளனின் முகத்தை காட்டும் படைப்புகள் இப்போது அரிதாகிப்போய்விட்ட தருணத்தில் , தமது தனித்தன்மை மிளிரும் படைப்புகள், அரிதாரம் இல்லாத தமது முகத்தை இந்த உலகிற்கு வெளிச்சம்போட்டு காட்டும் வண்ணம் எழுத்துலகில் தமக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்திருக்கும் நண்பர் SP செந்தில்குமார் அவர்களுக்கு என் பாராட்டையும் எனது மகிழ்ச்சியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

தொடரட்டும் அவரது  தொய்வில்லா எழுத்துப்பணி.

நன்றி.

கோ. 

6 கருத்துகள்:

  1. நண்பருக்கு எமது வாழ்த்துகளும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திறந்த மனதுடன் திரண்டுவந்து வாழ்த்தும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

      கோ

      நீக்கு
  2. நம் இனிய நண்பருக்கு வாழ்த்துகளும் பாராட்டுக்களும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், நம் இனிய நண்பருக்கு வாழ்த்துரைக்கும் என் இனிய நண்பர் தனபாலுக்கும் வாழ்த்துக்கள். .

      கோ

      நீக்கு
  3. ஆமாம் கோ! இப்போது நண்பர்/சகோ செந்தில் யூட்யூப் சானலில் செய்திகள் தருகிறார். அது நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்திருக்கிறதாகவும் சொன்னார்.

    செந்தில் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பிற்கினிய நண்பர்களே,

      எமது பதிவினூடாய் நண்பருக்கு வாழ்த்துரைத்தமைக்கு மிக்க நன்றிகள்.

      கோ

      நீக்கு