பர(ண்)ம் பொருள் !!
தொடர்கிறது....
நண்பர்களே,
முன் பகுதியை வாசிக்க........பெண்மேற்கு பருவக்காற்று - 3
அது ஒரு மெல்லிய நீல நிற டிஷு பேப்பரில் சுற்றப்பட்டிருந்த ஒரு சிறிய அட்டைப்பெட்டி.
அதனை பிரித்து பார்த்தபோது அதற்குள் மஞ்சளும் சிகப்பும் கலந்த நிறத்தில் ஒரு சில்க் டை(tie) இருந்தது.
அதற்கு அடியில் ஒரு வாழ்த்து அட்டை .
எனக்கு ஒரே ஆச்சரியம்.... ஆம், வாழ்த்து அட்டை அப்படியே நான் சார்லட்டுக்காக வாங்கி இருந்த அதே(போன்ற) வாழ்த்து அட்டை.
ஆச்சரிய மிகுதியால் உள்ளே பிரித்து பார்த்தேன்.
அதில் இரண்டு மேப்பில் மர இலைகள் புதிதாக பறிக்கப்பட்டு அதில் :
நண்பனுக்கு,என் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!
அன்புடன் சார்லெட். என்று எழுதப்பட்டு இருந்தது.
மகிழ்சியும் சந்தோஷமும் என் மனதில் முழுமையாக ஆட்கொள்ள நினைத்தாலும் சார்லட்டை பார்த்து எனது வாழ்த்தை தெரிவிக்க முடியாமல் போனதை எண்ணி மனம் வாடிப்போனது.
சரி, புத்தாண்டு தினத்தன்று நேரில் பார்த்து வாழ்த்து சொல்லமுடிவெடுத்து அவள் கொடுத்த அந்த டையை கிறித்துமஸ் அன்று அணிந்துகொள்ள என்னுடைய புதிய கோட்டுடன் சேர்த்து மடித்து வைத்தேன்.......
நண்பர்களே, அதற்கு பிறகு இவர்கள் இருவரை பற்றி எந்த குறிப்பும் இல்லை டிசம்பர் 22 ஆம் தேதிக்கு பிறகு எதுவும் எழுதப்படாத அந்த டைரியில்.
முடிவு தெரியாமல் முற்றுப்பெற்ற அந்த செய்திகளை தொடர்ந்து வேறேதேனும் கூடுதல் தகவல்கள் கிடைக்காத என ஆராய்ந்தபோது ......
அந்த வெண்கலப்பெட்டிக்கு உள்ளே ஒட்டிக்கொண்டிருந்த மடித்து வைக்கப்பட்டு சிதிலமடைந்த காகித மடிப்புகள் .... அதனை களைந்து பார்த்தபோது இரண்டு பட்டன்கள் இருந்தனவாம்....அப்படியானால் ...சார்லட் அனபெல்லுக்கான அந்த வாழ்த்து அட்டை அவளிடம் சேர்க்கப்படாமலேயே போய் இருக்குமா? அல்லது புத்தாண்டுக்காக வேறொரு பரிசை கொடுத்திருப்பாரோ?
அல்லது டைரி எழுதிக்கொண்டிருந்தவருக்கு அதற்குமேல் தொடரமுடியாமல் ஏதேனும் ஆகிவிட்டதா?
இசை ஆசிரியரின் பெயரான நிகோலஸ் எட்மண்ட் , மற்றும் சார்லட் அனபெல் என்ற இரண்டு பெயர்களையும் தவிர வேறு யார் பெயரும் குறிப்பிடப்படாத அந்த டைரி எழுத்துக்களில் இருந்த கருத்தை மட்டும் கருத்தில் கொள்ளாமல், கருத்து சொல்லப்பட்டிருக்கும் எழுத்துக்களையும் கருத்தில் கொண்டால் அது கண்டிப்பாக 7ஆம் அல்லது 8ஆம் வகுப்பு பயின்ற ஒரு பள்ளி மாணவனின் எழுத்துகள்தான் என்பது தெளிவாக யூகிக்க முடிந்ததாகவும் ஒரு கூடுதல் தகவலை தருகின்றனர் அந்த தம்பதியினர்.
யார் அந்த/எந்த பள்ளி மாணவன்???
யாரிடம் கேட்பது... ஒருவேளை இந்த நண்பர்களுக்கு அப்போது ஒரு 12 அல்லது 13 வயது இருந்திருந்தால் இன்றைய தேதியில் 100 வயது தொட்டோ அல்லது தாண்டியோ இருக்குமே.

இந்த மேற்கத்திய நாட்டில் அழகாக வீச துவங்கிய அந்த மெல்லிய பருவ பூங்காற்று ஏனோ திசை மாறி(!!) போனதோடு தமது மனதிலும் ஒரு ஒரு சோக வடுவினை பதித்து சென்றதாக அந்த டைரியை கண்டெடுத்த தம்பதியினர் சொன்னதாக பத்திரிக்கை செய்தி ஒன்றில் வாசித்ததைதான் இதுவரை உங்களோடு பகிர்ந்துவந்தேன்.(கொஞ்சூண்டு கற்பனை குழைத்து.)
(நண்பர்களே, உங்களுக்கு என்ன முடிவுகள் வேண்டுமோ அவற்றை உங்கள் கற்பனைக்கு விட்டுவிடுகிறேன். டிசம்பர் 23லிருந்து நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள் இந்த டைரியை - அதை எனக்கும் தெரிவியுங்கள்.)
(நண்பர்களே, உங்களுக்கு என்ன முடிவுகள் வேண்டுமோ அவற்றை உங்கள் கற்பனைக்கு விட்டுவிடுகிறேன். டிசம்பர் 23லிருந்து நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள் இந்த டைரியை - அதை எனக்கும் தெரிவியுங்கள்.)
அட்டிக் என்று சொல்லப்படும், உயரத்தில் இருந்த, பரணில் கிடைத்த பொருளில் ஒரு அன்பு பத்திரப்படுத்தப்பட்டு இருந்ததாலும் அன்பே இறைவன் என உயரத்தில்(??) இருக்கும் அந்த பரம்பொருளை குறிப்பிட்டு சொல்லுவதாலும் இந்த பொக்கிஷத்தை "பர(ண்)ம் பொருள்" என்று சொல்வதே சரியாக இருக்கும் என நினைக்கின்றேன்.
இது போன்று, ஏற்கனவே யாரேனும் குடி இருந்த வீட்டில் வசிப்பவர்களாக நீங்கள் இருந்தால் , உடனே, அட்டிக்கை கொஞ்சம் எட்டிப்பார்த்து, பரணில் ஏதெனும் சுவாரசிய பொக்கிஷ படைப்புகள் இருக்கின்றனவா என பார்த்து தகவல் சொல்லுங்கள்.

நன்றி.
மீண்டும் ச(சி)ந்திப்போம்.
கோ
நானும் உடன் எனது வீட்டின் பரணில் பார்க்கிறேன் ஆனாலும் கிடந்தால் எனது தாத்தாவின் சொத்தாகத்தான் இருக்கும் என்பதையும் இங்கு அறிவிக்கிறேன்.
பதிலளிநீக்குநன்றாக தேடி பாருங்கள் நண்பரே, தாத்தாவின் சொத்தாக அவரது சொத்தை பல்லவது கிடைக்கும்.
நீக்குவருகைக்கு நன்றிகள்.
கோ
அட பாவி.... இருபது வருடத்துக்கு முன் வாழ்ந்த வீட்டில் சில முக்கியமான ஐட்டத்தை விட்டு விட்டு வந்தேனே..
பதிலளிநீக்குஅருமையான பதிவு நண்பரே... ரசித்தேன்...
ஐட்டம் எல்லாம் அப்படியே இருக்காது நண்பரே அதுவும் முக்கிய ஐட்டம் அதுவும் இருபது வருடங்கள் கழித்து.
நீக்குகோ
ம்ம்ம்ம் இப்படி ஒரு டைரிக் குறிப்பை வைத்துதான் மலையாளத்திலும், தமிழிலும் கூட ஒரு படம் வந்தது இல்லையா...காலாபாணி....இதுவரை இப்படி எல்லாம் எதுவும் கிடைத்ததில்லை....நல்ல ஸ்வாரஸ்யமான பதிவு ரசித்த பதிவு...இதில் தொடர்வதற்கு நிறைய இருக்கு...
பதிலளிநீக்குபதிவினை முழுமையாக படித்து பாராட்டிய தங்களுக்கு மிக்க நன்றிகள்.
நீக்குகோ