பின்பற்றுபவர்கள்

சனி, 24 ஜூன், 2017

பெண்மேற்கு பருவக்காற்று - 2

இசைந்தது.

தொடர்கிறது....

நண்பர்களே,

முன் பகுதியை   வாசிக்க...பெண்மேற்கு பருவக்காற்று

அந்த வெண்கல பெட்டகத்திலிருந்த நாட்குறிப்பு புத்தகம்  ஆகஸ்டு மாதத்தின் 18 ஆம் தேதி எழுத ஆரம்பிக்க பட்டிருந்தது.

அதில்,  இன்று என்னுடைய பிறந்த நாள்.

காலையில் என் தந்தை எனனிடத்தில் வந்து பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறிவிட்டு என்னிடம் ஒரு பரிசுப்பொருளை கொடுத்தார்.  அதைத்திறந்து பார்த்தபோது அதில் ஒரு அழகிய கைக்கடிகாரம் இருந்தது கண்டு  மிகவும் சந்தோஷப்பட்டேன்.

அதை அன்று மாலையில் என்  வீட்டுக்கு வந்திருந்த விருந்தினர்கள் எல்லோரிடமும் காண்பித்து மிக மிக பூரிப்படைந்தேன்.

விருந்து முடிந்ததும் அந்த கைக்கடிகாரத்தை அவிழ்க்காமல் அப்படியே உறங்கச்சென்றேன்.

அடுத்தநாள் விடிந்ததும் அந்த கை கடிகாரத்தின் முகத்தில்தான் விழித்தேன்.

இன்று ஆகஸ்ட் 19.

இன்று மலை 4.000 மணிக்கு அப்பா என்னை,  வீட்டிலிருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் இருந்த அவரது நன்பரும் ஹார்ப் இசை கலைஞரும் இசை ஆசிரியருமான நிகோலஸ் எட்மன்ட் என்பவரது வீட்டிற்கு அழைத்து சென்று எனக்கு ஹார்ப் இசைக்கருவியை பயிற்றுவிக்குமாறு சொல்லி அங்கே கொண்டுபோய் விட்டார்.

இசையில் எனக்கு ஆர்வம் இருந்தது என்றாலும் ஹார்ப் எனும் இசைக்கருவிமீது அவ்வளவாக நாட்டம் இல்லை ஆரம்பத்தில்.

எனினும் ஆசிரியரின் அணுகுமுறையும்  எளிமையான தோற்றமும் எனக்கு அந்த இசை கருவியின்மீது ஆர்வத்தை அதிகரித்தது.

இன்றுமுதல்  இனிவரும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இப்படித்தான் மாலை 4 முதல் 5 வரை இசை கற்றுக்கொள்ள சென்றுகொண்டிருப்பேன்.

இன்று ஆகஸ்ட் 26.

4 மணிக்கு இசை பயிற்சிக்கு நான் சென்ற அதே நேரத்தில் அங்கே என் வயதை ஒத்த ஒரு பெண்ணும் அவளுடைய அப்பாவோடு வந்திருந்தாள், விசாரித்ததில் அவளும் ஹார்ப் கற்றுக்கொள்ளவேண்டி வந்ததாகவும் அவள் பெயர் சார்லட் அனபெல் என்றும் அறிந்துகொண்டேன்.

அன்றே நாங்கள் இருவரும் நண்பர்களாகிவிட்டோம்.

நண்பர்களே,

ஆர்வம் மிகுதியால் மேற்கொண்டு என்ன என்று தெரிந்துகொள்ள , இந்த வீட்டில் புதிதாய் குடியேறியவர்கள் அந்த டைரி முழுவதையும் படித்துவிட்டு முத்தாய்ப்பாக நமக்கு சொன்ன டைரி குறிப்பின் சுருக்க செய்தி.......

நாளை பார்ப்போம்.

நன்றி

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ

8 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. வருகைக்கு மிக்க நன்றி ஐயா.., காக்கவைப்பதற்கு மன்னிக்கவும்..

      கோ

      நீக்கு
  2. சந்திப்போம்...!





    அடியேனின் பகிர்வுக்கு பதில் (கருத்துரை) எங்கே...? (Liquor)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு மிக்க நன்றி தனப்பால், சந்திப்போம்.

      கோ

      நீக்கு
  3. சார்லட் அனபெல் வந்ததும் கதை சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது நண்பரே...

    பதிலளிநீக்கு
  4. இப்போது புரிகிறது பெண் மேற்குப் பருவக்காற்றின் வீச்சு!!!ஹஹ் காற்று சூடாகிக் குளிரப் போகிறதோ??!!! ஆவலுடன் இதோ அடுத்த பகுதிக்கு...

    பதிலளிநீக்கு