நல்லாயிடுவீங்க!!!
நண்பர்களே,
நமக்கோ அல்லது நம் உறவுகளுக்கோ அல்லது நமக்கு தெரிந்தவர்களுக்கோ உடம்பு சரியில்லாமல் வீட்டிலோ அல்லது மருத்துவ மனையிலோ இருக்க நேரும்போது,
சுகவீனமாக இருப்பவர்களை பார்க்க வருபவர்கள், ஆறுதல் என்று நினைத்து சொல்லும் வார்த்தைகள்தான், " கவலைப்படாதீர்கள் உங்களுக்கு ஒன்னும் ஆகாது" என்பது.
சுகவீனமாக இருப்பவர்களை பார்க்க வருபவர்கள், ஆறுதல் என்று நினைத்து சொல்லும் வார்த்தைகள்தான், " கவலைப்படாதீர்கள் உங்களுக்கு ஒன்னும் ஆகாது" என்பது.
ஒன்னும் ஆகாது என்பது எப்படி ஒரு ஆறுதலாக அல்லது ஒரு சமாதானமாக அமையும்? அதுவே ஒரு பெரிய கவலைக்கு வழிவகுக்கும் வார்த்தைகளாகவே தோன்றுமல்லவா ?
இங்கே "ஒன்னும்" என்று சொல்வது நடக்க கூடாத எதிர்மையான நிகழ்வுகளையே குறிப்பதாக இருந்தாலும் இதுபோன்ற எதிர்மறைகளை அந்த இடத்தில் நினைவுபடுத்துவதுபோலஅல்லவா இந்த வார்த்தைகள் அர்த்தப்படுத்தப்படுகின்றன?
அதற்கு பதிலாக கவலை படாதீர்கள், வருத்த படாதீர்கள் எல்லாம் சரியாகிவிடும் என்று சொல்வதுதானே மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தரும்?.(கவலை வருத்தம் என்பதுகூட அந்த இடத்தில் கவலையும் வருத்தமும் அடைய செய்யும் வார்த்தைகள்தானோ?)
மாறாக, மருத்துவரின் ஆலோசனைகளை கேட்டு அவர்கள் தரும் சிகிச்சைகளுக்கு ஒத்துழையுங்கள், அவர்களது ஆலோசனைப்படி உணவு எடுத்துக்கொள்ளுங்கள் கூடிய விரைவில் நீங்கள் பரிபூரண ஆரோக்கியம் பெற்றுவிடுவீர்கள், உங்களுக்கு ஏதேனும் உதவிகள் வேண்டுமென்றால் தயங்காமல் சொல்லுங்கள், நாங்கள் உங்களின் விரைவான சுகம் திரும்புதலுக்கா வாழ்த்துகின்றோம், இறைவனிடம் வேண்டிக்கொள்கிறோம் போன்ற நேர்மறையான வார்த்தைகளை சொல்வதுதானே சிறப்பானதாக இருக்கும்.
அதை விடுத்து, உங்களுக்கு ஒன்னும் ஆகாது என்று சொல்வது எப்படி முறையாகும்?
இரண்டாவது மூன்றாவது நாட்கள் தொடர்ந்து பார்க்க வருபவர்கள் சிலர், நோயாளிகளிடம் நேற்றைவிட இன்று இன்னும் புத்துணர்வும் தெளிவுமாக இருக்கின்றீர்கள் இன்னும் கூடிய சீக்கிரம் பரிபூரணமாக குணமடைந்துவிடுவீர்கள் cheer-up என்று சொல்வதை விடுத்து என்ன, வர வர ரொம்ப மோசமாகினே போறீங்களே,ரொம்ப மெலிந்து விட்டீர்களே, கண்கள் குழிவிழுந்து முகம் கருவடைந்துபோய்விட்டதே என்று சொல்வது வேதனைக்குரியது. அதைவிட அவர்கள் பார்க்கவராமலே இருந்திருக்கலாம்.
ஒன்னும் ஆகாது என்பது கவலைக்குறிய செய்தியாக ஒலிக்கும்போது கவலைப்படாதீர்கள் என்று சொல்வதும் சரியாக தோன்றவில்லை.
இனியாவது உங்களுக்கு ஒன்னும் ஆகாது என்பதை தவிர்த்து எல்லாம் நல்லபடியாக ஆகும்; நம்பிக்கையோடு திடமனதுடன் மருந்துகளை /உணவுகளை உட்கொள்ளுங்கள் (இடம்,பொருள் ஏவலை கருத்திக்கொண்டு) நாளைக்கு நாம வாக்கிங் போகலாம் தயாராக இருங்கள் போன்று சொல்ல பழகுவோம்.
இந்த தருணத்தில் சுகவீனமாக இருக்கும் அனைவரும் விரைவில் சுகம்பெற்று ஆரோக்கிய வாழ்வினை தொடர என்னுடைய வாழ்த்துக்களையும் பிரார்தனைகளையும் திறந்த மன உருக்கத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
(கவலைப்படாதீர்கள் உங்களுக்கு ஒன்னும் ஆகாது!!!!)
நன்றி.
மீண்டும் ச(சி)ந்திப்போம்.
கோ

கடைசியில் நீங்களும் அதே இடத்துக்கு வந்து நிற்கின்றீர்களே... நண்பரே.
பதிலளிநீக்குவருகைக்கு மிக்க நன்றி நண்பா.
நீக்குபதிவை கடைசி வரைக்கும் படிப்பவர்களுக்கான சிலாய்ப்பு அல்ல அது ஒரு கலாய்ப்புதான்.
கோ
நல்லது... நன்றி...
பதிலளிநீக்குவருகைக்கு மிக்க நன்றி தனப்பால்.
நீக்குகோ
நல்ல கருத்து கோ!!! நல்லது என்று சொல்லுவது கூட சில சமயங்களில் மறைமுகமான எதிர்மறையாக அமைந்து விடுகிறது இல்லையா....என்றாலும் நம்மை அறியாமல் அந்த வரிகள் வந்து விடுமோ, விடுகிறதோ....
பதிலளிநீக்கு