பின்பற்றுபவர்கள்

திங்கள், 26 ஜூன், 2017

பெண்மேற்கு பருவக்காற்று - 3

இதமாக... 

தொடர்கிறது....

நண்பர்களே,

முன் பகுதியை   வாசிக்க பெண்மேற்கு பருவக்காற்று - 2

பல பக்கங்களை கடகடவென படித்த பின்னர் இறுதியாக என்ன சுவாரசியம் என தெரிந்துகொள்ள டைரியின் கடைசி மாதமான டிசம்பர் 22 ஆம் தேதியில் எழுதப்பட்ட குறிப்பில் பார்வை குத்தி நின்றதாம் அந்த வீட்டு உரிமையாளர் தம்பதியினருக்கு.

இன்று டிசம்பர் 22.

இன்னும் சில நாட்களில் வர இருக்கும் கிறிஸ்மஸ் பண்டிகைக்கு நேற்று மாலையில் இருந்தே பள்ளிக்கூடத்திற்கு விடுமுறை விடபட்டுவிட்டது. என் இசை பயிற்சிக்கு நாளைமுதல் விடுமுறை.

அதற்குப்பிறகு அடுத்த 10 நாட்களுக்கு வீட்டில்தான் இருக்கப்போகிறேன். எனவே இன்று ஆசிரியருக்கும் சார்லட்டுக்கும் வாழ்த்து அட்டை கொடுக்கவேண்டும் என அருகிலிருக்கும் கடையில் இருந்த  இரண்டு வாழ்த்தட்டைகளை வாங்கினேன்,சேர்த்து வைத்திருந்த காசிலிருந்து.

ஆசிரியருக்கு கொடுப்பதற்காக வாங்கிய வாழ்த்தட்டையில் ஒரு மூக்கு கண்ணாடியும் ஒரு இங்க பாட்டிலுக்கருகில் ஒரு பறவையின் சிறகும் அச்சிடப்பட்டிருந்தது.

பார்க்க அழகாகவும் அர்த்தமுடனும் இருப்பதாக கருதி அதை அவருக்கு கொடுக்க முடிவு செய்தேன்.

அடுத்த வாழ்த்து அட்டையில் படங்கள் ஏதும் அச்சிடப்படாமல் வெறுமனே கிறிஸ்த்துமஸ் வாழ்த்துக்கள் என்று மட்டுமே அச்சிடப்பட்டிருந்தது.

இதைத்தான் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஏனென்றால்,எந்த படமும் சார்லட்டுக்கு பிடிக்காமல் போய்விட்டால் என்ன செய்வது?

அதே சமயத்தில் வாழ்த்து அட்டை மிக மிக எளிமையாக இருந்ததால் அதில் ஏதேனும் கொஞ்சம் வித்தியாசமாக அலங்காரம் செய்து கொடுக்கலாம் என எண்ணி யோசித்தபோது , புதிதாக வாங்கி வைக்கப்பட்டிருந்த எனது கோட்டின் உபரி பட்டன்கள் இரண்டை எடுத்து அந்த வாழ்த்து அட்டைக்குள்ளே ஒட்டி வைத்தேன், எனக்கான பரிசுபொருளின் ஒரு சிறு பாகத்தை சார்லட்டுடன் பகிர்ந்துகொள்ளும் உணர்வுடன்...

இப்போது அந்த வாழ்த்தட்டை கொஞ்சம் அழகாக தெரிந்தது.

இரண்டு அட்டைகளிலும் எனது பெயரை கையொப்பமாக இட்டு அவற்றை எனது பைக்குள் வைத்துவிட்டு மாலை வரை காத்திருந்தேன்.

மாலை வந்தது , இசை வகுப்பிற்கு போக வேண்டும் என வழக்கத்திற்கு மாறாக என் தந்தைக்கு நினைவு படுத்தினேன். இன்று சனிக்கிழமைதானே , நாளைதானே உனக்கு வகுப்பு என்றவருக்கு சென்ற வாரம் ஆசிரியர் சொன்னாரே, அடுத்தவாரம் சனிக்கிழமைவரச்சொல்லி என்றேன்.

அப்பாவோ,  இன்னும் நேரம் இருக்கின்றதே  என்ன அவசரம் என கேட்க , இன்றுதான் எனக்கு கடைசி இசை வகுப்பு   ஆசிரியருக்கு  வாழ்த்து அட்டை கொடுக்கணும்.

 இப்போது நானும் என் தந்தையும் ஆசிரியரின் இல்லத்தில்.

ஆசிரியரைத்தவிர வேறொருவரும் இல்லை, என் கண்கள் அலை மோதியது, சார்லட்டை தேடியது.

பொறுத்து பொறுத்து பார்த்துவிட்டு ஆசிரியரிடம் கேட்டுவிட்டேன், எங்கே சார்லட் இன்னும்  வரவில்லையா என.

அவர் சொன்ன பதில் ......

சார்லட் விடுமுறையில்  கனடாவில் இருக்கும் அவரது அத்தை வீட்டிற்கு செல்ல இருப்பதால் இன்று மாலை வகுப்பிற்கு வர இயலாது என்று காலையிலேயே   அவளும் அவளது அப்பாவும்என்னை வந்து பார்த்து சொல்லிவிட்டு  சென்றார்கள்.

அப்படியா...?

எப்போது வருவார்கள்?

புதுவருடம் முதல் வாரத்தில்  வருவதாக சொன்னார்கள்.

அதற்குப்பிறகு ஆசிரியர் சொன்ன எந்த விஷயமும் என் மனதில் பதியவில்லை ஒன்றைத்தவிர.

அந்த ஒன்று இதுதான்...

வகுப்பு முடிந்த தருணத்தில் வெளி  அறையில் அமர்ந்திருந்த அப்பாவிடம் இருந்த என்னுடைய பையை வாங்கி அதில் வைத்திருந்த ஆசிரியருக்கான வாழ்த்து  அட்டையை அவரிடம் கொடுக்க என் அப்பாவும் அவர் வாங்கி வைத்திருந்த ஒரு ஒயின் பாட்டிலை அவரிடம் கொடுத்து வாழ்த்து சொன்னார்.

அப்போது ஆசிரியர் அவர்தம் அறையின் மேசைமீது இருந்த இரண்டு பார்சல்களை கொண்டுவந்தார் அதில் கொஞ்சம் பெரியதாக   இருந்த பார்சலில் என் பெயர் எழுதப்பட்டு இருந்தது. அதை என்னிடம் கொடுத்து வாழ்த்து சொன்னார், இரண்டாவது கொஞ்சம் சிறிய  பார்சலில் பெயர் ஏதும் இல்லாமல் இருந்தது, அதையும் என்னிடம் கொடுத்து , இது சார்லட் உன்னிடம் கொடுக்கச்சொன்னாள் என்றார்.

அதை வாங்கி பையில் வைத்துக்கொண்டு வீட்டிற்கு வந்தேன்.

வழக்கமாக பண்டிகைக்கு கொடுக்கப்படும் பரிசுப்பொருட்களை பண்டிகை அன்றுதான் பிரித்து பார்க்கவேண்டும் என்ற கட்டுப்பாட்டு வழக்கத்தை மீறி   சார்லட் கொடுத்த அந்த பார்சலை இன்றே திறந்து பார்க்க வேண்டும் என்ற ஆவலில் அதை பிரிக்க ஆரம்பித்தேன்.

அந்த அட்டைப்பெட்டிக்குள் என்ன இருந்தது ..... ???

நாளை பார்ப்போமே...

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ


5 கருத்துகள்:

  1. சார்லட் அனபெல் கொடுத்த பார்சலை காண ஆவலோடு இருக்கிறேன் நண்பரே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காத்திருங்கள் நண்பரே, நாளை பிரித்து பாப்போம்.

      கோ

      நீக்கு
  2. பதில்கள்
    1. வாருங்கள் தனப்பால்... நானும் ஆவலோடு காத்திருக்கிறேன் அடுத்த பாகத்தை வெளி கொணர.

      கோ

      நீக்கு
  3. ஸஸ்பென்ஸ்...ஸஸ்பென்ஸ்.....தொடர்கிறோம் இதோ பார்சலைப் பார்க்க

    பதிலளிநீக்கு