பின்பற்றுபவர்கள்

வியாழன், 23 பிப்ரவரி, 2017

தலைப்பு! - மலைப்பு!! - வியப்பு!!!

முனைவரின் ஓய்வும் ஆய்வும்.

நண்பர்களே, 

மனிதனுக்கு பெயர் வைப்பதே அவர்களை பெயர்சொல்லி அழைப்பதற்காகத்தான்.
ஆனால் பெயருக்கு ஏற்றபடி   அந்த பெயருக்கு சொந்தக்காரர் இருக்கவேண்டும் நடந்துகொள்ளவேண்டும், குணங்களை பெற்றிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கமுடியாது, அது சாத்தியமும் இல்லை.

உலகில்  சிலரை அவர்களின் செயல், குணம்,நடவடிக்கைகளுக்கேற்ப பட்டப்பெயர் , செல்லப்பெயர்,வைத்தும்  அழைப்பதும் உண்டு.

எது எப்படி இருந்தாலும் பெயர் என்பது ஒவ்வொருவருக்கும் , விலங்குகள், இடங்கள், பொருட்களுக்கும் கூட தேவையான ஒன்றாக கருதப்படுகிறது.

இப்படி இருக்க , திரைப்படங்கள், நாடகங்கள்,  புத்தகங்கள், கட்டுரைகள், கவிதைகள், பதிவுகள் போன்றவற்றிற்கும் தலைப்புகள் என்னும் வடிவில் பெயர்கள் வைக்கப்படுகின்றன.

திரைப்படங்களை பொறுத்தவரையில் தலைப்புகளை வைப்பதில் பல தகராறுகள் நடந்திருப்பதை அறிவோம். 

ஒரு சில திரை படங்களுக்கு பழைய திரைப்படங்களின் பெயரையே வைப்பதும் அல்லது முதல், இரண்டு மூன்று என்று அவற்றோடு இணைப்பு எண்களை  இணைத்து தலைப்புகளாக்கப்படுவதும்  உண்டு.

திரைப்படம் , கதை,கவிதை, கட்டுரை, பதிவுகளை பொறுத்தவரை தலைப்பு மிக மிக முக்கியம் என்று நான் கருதுகிறேன்.

வலை தளங்களில் எழுதப்படும் பல கதை கவிதை கட்டுரைகளின் தலைப்புகளை பார்க்கும்போது மலைப்பாகவும் வியப்பாகவும் இருக்கும்.

ஏனென்றால், தலைப்புகள்தான் அவற்றின் நுழைவு வாயில் என தீர்க்கமாக நம்புவதால்.

எத்தனை நல்ல அரிய தகவல்கள் , செய்திகள் சொல்லப்பட்டிருந்தாலும் அவை வாசகர்களின் கவனத்தை கவரவும் அவர்களை அந்த படைப்புகளின் ஊடே  பயணிக்க செய்வதற்கும் அந்த தலைப்புகள் பெரிதும் உதவுவதாக கருதுகின்றேன்.

என்னை பொறுத்தவரையில் கவித்துவமான தலைப்புகளை மிகவும் ரசிப்பேன்.

அவ்வகையில் சமீபத்தில் வாசிக்க நேர்ந்த முனைவர் ஜம்புலிங்கம் அவர்களின் பதிவு ஒன்றில் " ஓய்வு நேரம் எனது  ஆய்வுநேரம்" என்றதான ஒரு வாசகத்தை வாசித்து மகிழ்ந்தேன்.

முனைவர் ஐயா அவர்கள் தமது  ஓய்வு நேரத்தை வீணாக்காமல் விரயமாக்காமல் , அரிய பல, தமிழ் மற்றும் ஆங்கில  கட்டுரைகளையும் பதிவுகளையும்  நமக்கு கொடுப்பதிலிருந்தே அவரது ஓய்வு நேரம் எப்படி ஆய்வு நேரமாகிறது என்பது தெள்ளத்தெளிவாக விளங்குகின்றது.

அவரது ஓய்வு நேரம் இன்னும் நீட்சியடையவேண்டும் என்பது எனது ஆவல்.

அதேபோல இன்னும் பலரது படைப்புகளின் தலைப்புகள் எனக்கு மலைப்பாக இருக்கும்; இப்படியும் தலைப்புகள் தேர்ந்தெடுத்திருக்கின்றார்களே என்று வியப்பாகவும் இருக்கும்.

 நண்பர்களே,

எத்தனையோ அறிய கருத்துக்களை பல அனுபவங்களை நல்ல பல செய்திகளை தாங்கிவரும் உங்களது பதிவின் சாராம்சங்களுக்காக நீங்கள் மேற்கொள்ளும் அதீத முயற்சிக்கும் , சிரத்தைக்கும்  சற்றும் சளைக்காமல் உங்கள் பதிவின் தலைப்புகளை தேர்ந்தெடுப்பதில் கொஞ்சம் கவனமும் முனைப்பும் காட்டுவது அவசியம் என்று நினைக்கின்றேன்.

மனிதர்களாகிய நம்மில் பெரும்பான்மையானவர்களுக்கு ஒருமுறை பெயர் வைத்துவிட்டால் அதை நாம் அடிக்கடி மாற்றிக்கொள்வதில்லை,  ஆனால் நமது படைப்புகளுக்கு பெயர்வைக்க - தலைப்பு   அவற்றை மாற்றி அமைக்க, வாய்ப்பும் நேரமும் நிறைய   இருக்கின்றது.

பதிவை துவங்கும்போது ஒரு தலைப்பில்  ஆரம்பித்து இடையில் வேறொரு தலைப்பிற்கு மாறி , மீண்டும் மாறி பின்னர் எழுதி முடித்தபிறகு வேறு தலைப்பிட்டு, இரண்டு மூன்றுமுறை வாசித்துவிட்டு இறுதியாக பதிவேற்றம் செய்யும்போது   பொருத்தமான வேறு தலைப்பாக மாற்றிக்கொள்ளவும் நமக்கு வாய்ப்பு இருக்கின்றது.

எனவே ஆழ்ந்த சிந்தனை கருத்துக்களை, அறிய தகவல்களை, வரலாற்று செய்திகளை, இலக்கிய  சுவாரஸ்யங்களை  தாங்கி இருக்கும்   உங்கள் பதிவுகள் பலரின் கவனத்தை ஈர்க்கும்பொருட்டும் அதில் உட்புகுந்து பயணிக்கும் பொருட்டும் , அவற்றிற்கு தலைப்பை தேர்ந்தெடுப்பதில் கொஞ்சம் கவனம் செலுத்துவது முக்கியம் என நான் கருதுகின்றேன்.

நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ


8 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. நன்றி தனப்பால் உங்கள் கருத்திற்கும் வருகைக்கும்.

      கோ

      நீக்கு
  2. நுணுக்கமாகப் பார்த்து எழுதியுள்ளீர்கள். அலுவலக நேரம் தவிர மற்ற அனைத்து நேரங்களையும் நான் எழுதவும், வாசிக்கவும், ஆய்விற்காகவுமே பயன்படுத்துகிறேன். அலுவலக நேரத்தில் அலுவலகப்பணியைத் தவிர வேறு எதனையும் மேற்கொள்வதில்லை. பேருந்துக்காகக் காத்திருக்கும்போதும், அலுவலக இடைவேளையின்போதும், அலுவலக நேரத்திற்கு முன் அலுவலகம் வந்து பணியை ஆரம்பிக்கும் முன்பும் (பணி நேரத்திற்கு முன்பாகவே அலுவலகம் வந்துவிடுவேன்) நேரம் கிடைக்கும்போதெல்லாம் இவ்வாறான வாசிப்புகள் தொடர்கின்றன. தங்களின் ஊக்குவித்தலுக்கு மனமார்ந்த நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயாவிற்கு அநேக நமஸ்காரங்கள்.

      தங்களின் அனுமதி இன்றி தங்கள் பெயரையும் தங்கள் தல விலாசத்தையும் பதிவில் பயன்படுத்தியதற்கு மன்னிக்கவும். எந்த செய்தியானாலும் விளக்கமாக , விரிவாக , நோக்கம் பிறழாமல் தெளிவாக எடுத்துரைக்கும் உங்கள் அர்ப்பணிப்பும் ஆழ்ந்த சிந்தனையும் என்னை வெகுவாக கவர்ந்ததன் அங்கீகாரம்தான் இந்த பதிவில் தங்களை இணைக்கும் உந்துதல் ஏற்பட காரணம்.

      உங்களைப்போன்றோரின் தொடர் விமரிசனங்களும் என்னைப்போன்றோருக்கு ஊக்கமளிப்பதை மறுக்க முடியாது.

      தொடரட்டும் உங்கள் பணி தொய்வில்லாமல்.

      நானன்றி.

      கோ


      நீக்கு
  3. பதில்கள்
    1. வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி நண்பரே.

      கோ

      நீக்கு
  4. தலைப்பு என்பது மிக மிக முக்கியம். பல செய்தித் தாள்களில் கூட தலைப்புச் செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தும்படி தலைப்பிட்டிருப்பார்கள்! அதுதானே விற்பதற்கு முக்கியம்...உள்ளே உள்ள செய்தி சில சமயம் சப்பென்று இருந்தாலும், அல்லது அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இல்லைஎன்றாலும் தலைப்பு ஈர்த்துவிடும். அப்படியிருக்க நல்ல கட்டுரைகள் எழுதும் போது தலைப்பை மிகக் கவனமாக ரசிக்கும்படியாகவும் எல்லோரையும் ஈர்க்கும் அளவிற்கு இருக்க வேண்டும் ..நல்ல பதிவு கோ..உங்கள் தலைப்பும் அருமை உங்கள் தலைப்புகள் அனைத்துமே ஈர்க்கும் படி இருக்கும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்திற்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றிகள்.

      கோ

      நீக்கு