பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 21 பிப்ரவரி, 2017

வைர மோதிரம்!!!

குட்டுப்பட்டதோ?

நண்பர்களே,

தமிழகம் மட்டுமல்லாது. இந்திய எல்லையையும் கடந்து உலகளாவிய நிலையில்

பவளம்,முத்து,கோமேதகம்,மரகதம், வைரம்,நீலம் புஷ்பராகம், மாணிக்கம் மற்றும்  வைடூரியம் போன்ற விலை உயர்ந்த கற்கள் பதிக்கப்பட்ட அணிகலன்களை அணிவதில் மக்கள் பெரும் ஆர்வத்தை காட்டுகின்றனர்.


இதில் ஆண்கள் பெண்கள் என்ற பேதமின்றி இரு பாலாரும் இந்த இரத்தின கற்களை தங்கள் அணிகலன்களாகவும் சொத்துக்களாகவும் சேமிப்புகளாகவும் வைத்துக்கொள்வதில் பேரார்வம் காட்டுகின்றனர்.

அப்படி இந்த கற்களை சிலர் விலை மதிப்புமிக்க கற்களாக மட்டும் பார்க்காமல், அதையும் தாண்டி இவைகளால் தங்களுக்கு வாழ்வில் சுபீட்சம் , மகிழ்ச்சி, நிம்மதி,உடல் ஆரோக்கியம் , பண வரவு, புகழ் போன்றவை பெருகும், எதிரிகளை அழிக்கும் ஆற்றல் உண்டாகும்   போன்ற  நம்பிக்கையின் அடிப்படையிலும் இவற்றை வாங்கி புழங்குகின்றனர் எனும் செய்தியும் நமது காதுகளை வந்தடைந்துகொண்டுதான் இருக்கின்றன.

இதுபோன்ற கற்களுள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பிரத்தியேக  குண நலன்கள் இருப்பதாக சொல்ல கேட்டிருக்கின்றேன். 

அதாவது இந்த கற்கள் ஒரு சிலருக்கு உயர்வையும் ஒரு சிலருக்கு தாழ்வையும் ஒரு சிலருக்கு நன்மையாகவும் ஒரு சிலருக்கு தீமையாகவும் அமையும் என்று.

அதிலும் குறிப்பாக வைரம் பதித்த அணிகலன்களை வாங்கும்போது மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என கூறவும் கேட்டிருக்கின்றேன், ஆனால் அது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.

சமீபத்தில் நண்பர் ஒருவர் தன் மனைவிக்கு வைர மோதிரம் வாங்கித்தருவதாக உறுதி அளித்திருந்தாராம், பிறகு எதோ காரணத்திற்காக இன்னும் வாங்காமல் தள்ளிபோட்டுக்கொண்டே இருக்கிறாராம்.

என்ன காரணம் பண பற்றாக்குறையா? அப்படி பணம் குறைவாக இருந்தால் சிறிய கல் பதித்த மோதிரம் வாங்கிக்கொள்ளலாமே  என்றேன்.

அதற்கு அவர்,   எவ்வளவு தூரத்தில் இருந்து பார்த்தாலும் பார்வைக்கு பளீச்சென்று தெரியும் பெரிய கல்லாக பதித்து வாங்கும் அளவிற்கு, அதுவும் ஒரே மாதிரி இரண்டு விரல்களுக்கு அணிந்துகொள்ளும்படி வாங்கும் அளவிற்கு,  நேர்மையான முறையில்,  பனியிலும்  குளிரிலும், மழையிலும் வெய்யலிலும் , உடம்பு வளைந்து, வியர்வை சிந்தி உழைத்து சம்பாதித்து சேர்த்துவைத்த பணம் இருக்கின்றது என்றாலும் சிலர் சொல்வதை கேட்டால் மனம் கொஞ்சம் சஞ்சலப்படுகிறது என்றார்.  

விசாரித்து பார்த்ததில் அவர் சொன்னது வியப்பாக இருந்தது.

 இந்த வைர கற்கள் சிலரை புகழின் உச்சிக்கு கொண்டு செல்லும் என்றும் அதே சமயத்தில் சிலருக்கு சமூகத்தில் அவல நிலைமையையும் ,பலரும் காரி உமிழ்ந்து இகழும் நிலைமைக்கு சிலரை தள்ளுவதோடு , வழக்கு , போலீசு, நீதிமன்றம், சுடுகாடு, கல்லறை போன்ற இடங்களுக்கும் போகவைத்து, இங்கும் அங்குமாக அலைக்கழித்து, உலகமே பார்க்கும்படி மிக கேவலமான வகையில் , சிறையில் கூட அடைக்கப்படும் நிலைமைக்கு கொண்டு செல்லும்  என்று யாரோ சொன்னதாக சொன்னார்.

நான் அவரிடம் , உலக வரலாற்றில் இதுவரை  நான் அறிந்தவரை   அப்படி எல்லாம்  இல்லை என்றேன்.

மேலும் குட்டுப்பட்டாலும் மோதிரக்கையால் குட்டுப்படவேண்டும் என்று சொல்லுவார்கள் ஆனால் வைர மோதிரம் அணிவது, அதை அணிபவருக்கே குட்டுபோடுமா என்பது சந்தேகமாக இருக்கின்றது  என்றேன். 

அவரோ விடாப்பிடியாக இல்லைங்க நான் அப்படித்தான் கேள்விப்பட்டேன், அதுவும்  (சில)பெண்கள்  அணியும்   வைர மோதிரத்தின் வீரியம் அதிகம் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்.

அதற்கு  நான் , அப்படி யாரேனும், எந்த பெண்ணேனும்  வைர மோதிரம் அணிந்து வெளியில் தலைகாட்டி வலம் வந்த  கொஞ்ச நாட்களில் இதுபோன்ற இழி நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றார்களா   என தெரிந்தவர்களிடம்  கேட்டு சொல்வதாக சொல்லி விட்டு வந்திருக்கின்றேன்.  

தெரிந்தவர்கள் என்றால் எனக்கு உங்களை  விட்டால் யார் இருக்கின்றார்கள்,?

எனவே, நண்பரின் சந்தேகம் சரிதானா அல்லது தேவையற்ற  சந்தேகமா என உங்கள் அனுபவத்தில் இருந்து அல்லது, சங்க இலக்கிய, இதிகாச காலங்களிலோ அல்லது நமது சமகாலத்திலேயோ இதுபோன்று யாருக்காவது நிகழ்ந்திருந்தால் அல்லது நீங்கள் சந்தித்த,  வைரம் பாய்ந்த நெஞ்சுடைய  நபர்களுக்கு இதுபோன்று நிகழ்ந்திருந்தால் தயவாக சொல்லுங்கள், பாவம் என் நண்பர் அதிகம் குழம்பிப்போய்  இருக்கின்றார்.

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ

9 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. வருகைக்கு மிக்க நன்றி தனப்பால், உங்கள் கருத்தை நண்பரிடம் சொல்கிறேன்.

      கோ

      நீக்கு
  2. கிரகப் பரிகாரம் என்று ஜோதிடர்கள் கூறுவதை ஏற்றுக்கொண்டு, வைர மோதிரம் அல்லது கோமேதகம் போன்றவற்றை சிலர் அணிவதுண்டு. அப்படிப்பட்டவர்கள், சிலநேரம் மேன்மையையும், பிறகு வீழ்ச்சியையும் அடைவதைப் பார்த்திருக்கிறேன். தாங்களாகவே கடைக்குச் சென்று எந்த எதிர்பார்ப்பும் இன்றி வைரம் வாங்கி அணிபவர்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்பட்டதாக நான் அறியவில்லை.

    - இராய செல்லப்பா நியூஜெர்சி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயாவிற்கு அநேக வணக்கங்கள்.

      வருகைக்கும் தங்களின் மேலான, அனுபவபூர்வ கருத்திற்கும் மிக்க நன்றிகள் ஐயா.

      கோ

      நீக்கு
  3. அருமையான யோசிக்க வைக்கும் பதிவு பாராட்டுகள்

    பதிலளிநீக்கு