நான் சொல்வதெல்லாம் உண்மை.
நண்பர்களே,
காட்டில் வாழும் சிங்கம் புலி , யானை, கரடி, ஓநாய், போன்ற பலம் பொருந்திய அதே சமயத்தில் கொடூரமான , தந்திரமான
விலங்குகளுக்கும் மற்ற எல்லா விலங்கின ஜீவ ராசிகளுக்கும், அவற்றின் செயல்களை கட்டுப்படுத்த - முறைப்படுத்த எந்த ஒரு பொதுவிதியும் இல்லை.
அவைகள் யாரை வேண்டுமானாலும் தாக்கலாம், காயப்படுத்தலாம் கொல்லலாம், தங்களுக்கு இரையாக்கிக்கொள்ளலாம்.
ஆனால் மனிதனுக்கு அப்படி இல்லை.
மனிதனை வரைமுறை படுத்தவும் அவனது செயல்களை கட்டுப்படுத்தவும், வழி நடத்தவும் , இயற்கையிலேயே - இறைவனால் கொடுக்கப்பட்டிருக்கும் மன சாட்சியும் சிந்திக்கும் ஆற்றலும் ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கின்றன.
இருந்தாலும் அவற்றின் குரல்களை அலட்சியப்படுத்திவிட்டு, தான் தோன்றி தனமாக, அடாவடியாக, பல வன்முறை, அடிதடி, கொலை, கொள்ளை, கற்பழிப்பு, பிறர் சொத்துக்களை அபகரிப்பது, லஞ்ச லாவண்யங்களில் மூழ்கி திளைப்பது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்க்க பல நாகரீகமற்ற செயல்களை அரங்கேற்றுவது , பதவி வெறியாட்டம் போன்ற செயல்களில் சிலர் ஈடுபடுவதை நாம் அன்றாடம் கேட்டும் , பார்த்தும், வாசித்தும் அறிந்துகொண்டுதான் இருக்கின்றோம்.
அப்படி மனசாட்சிபடி நடக்க முடியாதவர்களை - கட்டுப்பாடின்றி திரிபவர்களை கட்டுப்படுத்த (காவல்துறையும்) நீதித்துறையும் பல சட்ட திட்டங்களை வகுத்து செயல்படுத்திக்கொண்டு வருகின்றன.
சாமான்யமான மக்களுக்கு கடைசியாக இருக்கும் ஒரு ஆறுதலான விஷயமே நீதித்துறையும் அதன் சட்டங்களும்தான்.
அப்படி இருக்க சில சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு சட்டத்தின் பிடியில் சிக்கி தண்டனைக்குள்ளாகும் மனிதர்களின் தண்டனையின் வீரியத்தை, அந்த கொடுஞ்செயல்களினால் பாதிக்கப்பட்டவர்களும், தண்டனை அடைந்தவர்களும் அவர்களது வீட்டினர், உறவினர், சுற்றம் மற்றும் பொதுமக்கள் விமர்சிப்பதுண்டு.
அதாவது, தண்டனை போதாது, இன்னும் கடுமையாக்கி இருக்கவேண்டும் அல்லது இதற்குப்போய் இத்தனை பெரிய தண்டனையா? கொஞ்சம் குறைத்திருக்கலாமே .. போன்று பலவாறான விமர்சனங்கள் முன் வைக்கப்படுவதுண்டு.
சமீபத்தில் நடந்தேறிய சமூக குற்றத்திற்கு அதில் சம்பந்தப்பட்டவருக்கு கொடுக்கப்பட்ட தண்டனையை நிதானமாக தீர ஆராய்ந்து பார்த்ததில் , அவர் செய்த குற்றத்தின் அளவையும் அதனால் விளைந்த விளைவையும் கருத்தில்கொண்டு சிந்திக்கும்போது , கொடுக்கப்பட்ட சிறை தண்டனை காலம் மிகவும் அதிகம் என்றே தோன்றுகின்றது.
என்னுடைய கருத்து உங்களில் பலருக்கு ஏற்புடையதாக இருக்காது என்பதும் எனக்கு தெரியும், இருந்தாலும் என்னுடைய மன சாட்சியின்படியும் ஏதோ எனக்கு தெரிந்தவகையில் சிந்தித்து பார்த்ததில் , தண்டனை கொஞ்சம் ஓவராகத்தான் தோன்றுகின்றது.
என்னுடைய இந்த கருத்தின் நியாயத்தை நாளை சொல்கிறேன்.
அதுவரை.....
நன்றி.
மீண்டும் ச(சி)ந்திப்போம்
கோ
பதிலளிநீக்கு"ஆயிரம் ரூபாய் வாங்கிய தாசில்தாருக்கு 3 வருடம் சிறை!" இது ஒரு பத்திரிகை ச்செய்தி! அப்போ 66 கோடிக்குக் கணக்குப் போடுங்கள்!
நண்பரே,
நீக்குநீங்க எதை சொல்றீங்க, புரியலையே? வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றி.
கோ
ஆஹா!இன்னொரு பதிவு தொடரும் என்பதைக் கவனிக்காமல் விட்டது என் தவறுதான்! மன்னிக்கவும்
நீக்குஉங்கள் பதிவின் கடைசி வரியைக் கவனிக்காமல் பின்னூட்டமிட்டது எனது தவறுதான் நன்பரே! மன்னிக்கவும்!
நீக்குநாளை சந்திக்கிறேன்...!
பதிலளிநீக்குநாளையும் வாங்க தனப்பால்.
நீக்குகோ
yes, for 4 years long period,living in guilty mind so death sentance quick punishment to avoid from the guilty
பதிலளிநீக்குCool-down brother.
நீக்குI really don't know what you are referring to.
Please read the next part of my write-up.
Thanks for visiting.
ko
சசிகலாவின் கைதையா சொல்கின்றீர்கள்? அதன் காலம் கூடுதல் என்றால் ஒரு வேளை அதே குற்றத்தையோ அல்லது அதையும் விடப் பெரிய குற்றத்தை எல்லாம் செய்து விட்டு வெளியில் இருக்கிறார்கள், ஏன் உங்கள் ஊரில் கூட மல்யுத்ததின் பெயரைத் தாங்கியவர் ஒளிந்து கொண்டிருக்கிறார். அவரை முடிந்தால் பிடித்துக் கொடுங்கள் ஹ்ஹ்ஹ்ஹ்ஹ். இன்னும் பலர் பல கொடிய குற்றங்களை இழைத்தவர்கள் வெளியில் உலவிக் கொண்டிருக்கிறார்கள்.
பதிலளிநீக்குஉங்கள் காரணத்தையும் அறிய ஆவலுடன் இருக்கிறோம். ஏனென்றால் நீங்கள் ஏதேனும் உட்பொருள் வைத்திருப்பீர்கள் ஹாஹ்ஹ
உங்களின் பின்னூட்டத்தில் முன் வரிசையிலுள்ள முதல் இரண்டு வார்த்தைகள் எனக்கு புரியவில்லை. கொஞ்சம் தயவாக விளக்குங்கள். அப்படியே எமது தொடர் பதிவினையும் வாசித்துவிட்டு அதில் வரும் உள் (குத்து) கருத்தை உன்னிப்பாக வாசித்து பின்னர் உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்.
நீக்குஆமாம் யார் அந்த முதல் சொல்லுக்குரியவர்?
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள்.
கோ