பின்பற்றுபவர்கள்

சனி, 18 பிப்ரவரி, 2017

4ஆண்டுகளில் கொழுப்பு அடங்குமா?

 சந்தேகம்தான் !!

நண்பர்களே,

கொழுப்பு என்பது மனிதனுக்கு மற்றுமல்லாது விலங்குகள் மற்றும் தாவரங்களுக்கு கூட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

நம் உணவில் கொழுப்பு சத்து சேர்த்துக்கொள்ளவேண்டும் என்பதற்காகவே சிலர், புலால் உணவினை  சேர்த்தும்    வேறு சிலர், தாவர எண்ணெய்கள், தயிர், வெண்ணை, நெய் போன்றவற்றையும் எடுத்துக்கொள்வார்கள் .  

கொழுப்பு என்பது அனைவருக்கும் மிக அவசியமான ஒன்றுதான். ஆனல் அந்த கொழுப்பின்  அளவில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படும்போதுதான் உடல் ஆரயோக்கியத்தில் மாற்றங்கள் உருவாகின்றன.

நமக்கு தெரிந்த வகையில் யாரேனும் திமிராக நடந்துகொண்டால், அவருக்கு கொழுப்பு ஜாஸ்த்தி என்று சொல்வதை கேட்டிருப்போம்.

அப்படி கொழுப்போடு திமிராக நடந்துகொள்பவரை குறித்து  பேசும்போது ஒரு நாளைக்கு எல்லா கொழுப்பும் அடங்கிவிடும் என்று சொல்லுவதைக்கூட கேட்டிருப்போம்.

அந்த ஒரு நாள் என்பது சிலருக்கு ஒரு மாதம், சிலருக்கு ஒரு வருடம் சிலருக்கு நான்கு வருடங்களாக கூட இருக்கலாம்.

சிலருக்கு எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்த கொழுப்பு அடங்குவதில்லை.

இந்தப்பதிவில் யாருக்கு 4 ஆண்டுகளில் கொழுப்பு அடங்குமா என  கேட்பதை கொஞ்சம் அவசரப்படாமல் படித்து தெரிந்துகொள்ளவும்.

சமீபத்தில் இங்கிலாந்தில், பழைய ஐந்து பவுண்ட்  நோட்டுகளுக்கு  மாற்றாக புதிய ஐந்து பவுண்ட் நோட்டுக்கள் புழக்கத்தில் விடப்பட்டன.

அந்த ஐந்து பவுண்ட் நோட்டுக்கள் எளிதில் கிழியாதபடியும், தண்ணீரில் நனையாதபடியும் , எளிதில் கள்ள நோட்டுகள் தயாரிக்க கூடாதவைகளாகவும் பிரத்தியேக மூலப்பொருட்கள் கொண்டு polymer notes உருவாக்கி இருக்கின்றார்கள்.

கடந்த சில மாதங்களாக புழக்கத்தில் இருக்கும் இந்த நோட்டுகளை குறித்த ஒரு சர்ச்சையை நமது "ஜல்லிக்கட்டு  புகழ் " பீட்டா அமைப்பினர் கொண்டுவந்திருக்கின்றனர்.

அதாவது இந்த புதிய ஐந்து பவுண்ட் நோட்டுகள் தயாரிப்பில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டிருக்கிறது, இதனை வாபஸ் பெறவேண்டும், இது மிருக வதை மட்டுமல்லாது வெகு ஜன மக்களின் மத நம்பிக்கைகளுக்கும் விரோதமானதாக இருக்கின்றது, எனவே இதனை உடனடியாக வாபஸ் பெற்று வேறு புதிய ஐந்து பவுண்ட் நோட்டுகளை விலங்குகளின் கொழுப்பு இல்லாமல் தயாரித்து    விநியோகிக்கவேண்டும் என்று குரல் எழுப்பி இருக்கின்றனர்.

இதனை கேட்டபோது பீட்டாவிற்கு  என்ன கொழுப்பு என்றுதானே கேட்கத்தோன்றுகின்றது உங்களுக்கு?  (பொறுமை ப்ளீஸ்).

பீட்டாவை தவிர இதுவரை 1,30,௦௦௦ பேர்கள் பெட்டிஷனில் கையொப்பமும் இட்டு பேங்க் ஆப் இங்கிலாந்திற்கு எதிராக போராட்டம் நடத்தியும் இந்தவகை நோட்டுகள் புழக்கத்தில்தான் இருக்கின்றன 

இந்த வேண்டுகோளை இங்கிலாந்து அரசு ஏற்க மறுத்துவிட்டது, மேலும் இந்த புதிய நோட்டுகள் தயாரிப்பதற்கு  ஏற்கனவே பெருத்த பண செலவு ஆகி இருப்பதாகவும் இந்த கோரிக்கையை ஏற்க முடியாது என்று திட்டவட்டமாக அறிவித்துவிட்டது.

அதேபோல்  அடுத்த சில மாதங்களில்  அதாவது செப்டம்பர் மாதம் வெளி வர இருக்கும்   புதிய 10 பவுண்டு தாள் தயாரிப்பிலும் இந்த விலங்குகள் கொழுப்புதான் பயன்படுத்தி இருக்கிறோம் இதனையும்  வாபஸ் பெற முடியாது என கூறியதாலும் இந்த கொழுப்பு சர்ச்சசை அடங்காமல்தான் இருக்கின்றது.  

எனினும்  ஆறுதலாக ஒரு வாக்குறுதியை கொடுத்திருக்கின்றது இந்த அரசு.

அதாவது இன்னும் ஏறக்குறைய 4 ஆண்டுகளில் , 2020 ஆம் ஆண்டு இறுதியில் வெளியிட திட்டமிட்டிருக்கும்  புதிய 20பவுண்ட் நோட்டுக்கள் தயாரிக்கும்போது   விலங்குகளின் கொழுப்பிற்கு  பதில்  தேங்காய் எண்ணெய் ,பனை எண்ணெய் போன்ற   தாவர கொழுப்பு பயன்படுத்த முயற்சிப்பதாக.

அதற்கு இன்னும் 4 ஆண்டுகள் இருக்கின்றன, இந்த நான்காண்டுகளில் இந்த கொழுப்பு (பிரச்னை) அடங்குமா?  பொறுத்திருந்து பாப்போம்.

மிருகக்கொழுப்பும் தாவர கொழுப்பும் எதோ ஒரு  வகையில் இந்த சமூகத்திற்கு  பயன்படுகிறது,  ஆனால்  மனிதனின் (கெட்ட) கொழுப்பு இந்த சமூகத்திற்குமட்டுமல்லாது அவனுக்கும் அவன் குடும்பத்திற்கும் கேடுவிளைவிக்கின்றதை நினைக்கும்போது ... என்னத்த சொல்றது?

 (நான் சொல்றது  cholesterol level அளவிற்கு மீறி போவதைத்தான்). 

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ

2 கருத்துகள்:

 1. தலைப்பைப்பார்த்ததும் சற்றே யோசித்தேன். படித்ததும்தான் தெரிந்தது நீங்கள் சொல்ல வந்தது முக்கியமானதென்று.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐயாவிற்கு அநேக நமஸ்காரங்கள்.

   தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் ஐயா.

   கோ

   நீக்கு