உண்மையைத்தவிர வேறொன்றும் இல்லை..
நண்பர்களே,
நேற்றைய பதிவின் தொடர்ச்சி............
முதலில் இருந்து வாசிக்க.. தண்டனைக்காலம் ரொம்ப அதிகம்.
நீதி மன்றங்களில் வாதங்கள், பிரதி வாதங்கள், சந்தர்ப்ப , மற்றும் ஆவணங்களின் - சாட்சிகளின் அடிப்படையிலும், வழக்கறிஞர்களின் வாதத்திறமையினாலும் பல வழக்குகளின் தீர்ப்புகள் திசை மாறிப்போவதுடன் நீர்த்தும் போகின்ற வாய்ப்புகளும் ஏற்பட்டிருப்பதை நாம் அறிவோம்.
கீழ்கோர்ட்டில் தண்டனைக்குரியது என்று சொல்லப்பட்ட குற்றமும் குற்றவாளியும் மேல்கோர்ட்டில் தண்டனைக்குத்தப்பி நிரபராதிகள் என தீர்க்கப்பட்ட தீர்ப்புகளும் நாம் அறிந்ததுதான்.
நீதிபதிகள் கூட சில நேரங்களில் தங்களது சாதக பாதக எண்ணங்களை கூட்டி கழித்து பார்ப்பதில் தவறு செய்ய நேர்வதுகூட இப்போதெல்லாம் சகஜமாகிவிட்டது என்பதும் நம் அறிந்ததே.
அவ்வகையில்தான் , சமீபத்தில் நடந்து முடிந்த வழக்கில் கொடுக்கப்பட்ட தண்டனை மிக அதிகம் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.
வழக்கு என்ன?
வழக்கு என்ன?
தொலை காட்சி நிகழ்சியில் நடத்தப்பட்ட X-Factor எனும் திரள் காண் போட்டியில் முதல் பரிசை வென்ற இங்கிலாந்தின் வட யார்க்ஷரை சேர்ந்த ஜேம்ஸ் ஆர்தர் எனும் முன்னாள் வெற்றியாளரை ,எதிர்பாராதவண்ணம் , ஏதோ கவனத்தில் கண்ணாடி டம்பளரை கொண்டு தாக்கிவிட்டார் என்ற காரணத்திற்காக 31 வயது நிரம்பிய கிறிஸ்டோபர் ஜான் எனும் மனிதர் கைது செய்யப்பட்டு நீதிமன்றம் அழைத்துச்செல்லப்படுகின்றார்.
உடைந்துபோன கண்ணாடி டம்ளரின் மதிப்பு அதிக பட்சம் ௫5௦.00 ரூபாய், அடிபட்டவருக்கு பெருத்த காயம் ஏதும் இல்லை, எனினும் அந்த தாக்குதல் தமக்கு பெருத்த அதிர்ச்சியாகவும் பதற்றமாகவும் இருந்தது எனவும் இந்த தாக்குதலுக்கு பிறகு எனது சொந்த ஊருக்கு செல்வதற்கு எனக்கு கொஞ்சம் அவமானமாக இருப்பதாகவும் நீதி அரசரிடம் கூறி இருக்கின்றார் ஜேம்ஸ்.
வழக்கை முழுமையாக , எந்த கூட்டல் கழித்தல் தவறுகளும் நிகழாமல் கவனத்துடன் நடத்தி தாக்கியவருக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனையைத்தான், குற்றத்தின் அடிப்படையிலும் தாக்கப்பட்டவருக்குண்டான காயம் , நட்டம் முதலியவற்றை கணக்கில் கொண்டும் என்னுடைய கருத்தை இங்கே சொல்லி இருக்கின்றேன் தண்டனை அதிகம் என்று.
நீதி அரசர் கொடுத்த தண்டனை ஐந்தரை ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை.
இப்போது சொல்லுங்கள் கிறிஸ்டோபர் ஜானுக்கு கொடுக்கப்பட்ட சிறை தண்டனை காலம் அதிகம் தானே?
இந்த சம்பவம் நடந்தது கடந்த ஆண்டு ஆகஸ்டு தீர்ப்பு கிடைத்தது இந்த ஆண்டு பிப்ரவரி. இந்த கால தாமதமும் அதிகம்தானோ?.
நன்றி.
மீண்டும் ச(சி)ந்திப்போம்
கோ
People also compare the jud
பதிலளிநீக்குHello Natchander,
நீக்குMost of the judgments are based on the previous case-laws and judgments only, but that can be bent and manipulated, interpreted dependent on the people involved.
Thanks for your visit and comments.
Ko
People are curious to know why similar lootings of other politicians escape the attention of the judges... the recent tamilnadu related case arose more from political vengeance .... all know that...man
பதிலளிநீக்குI think,Playing around the loopholes in the judicial system - laws impacts difference in conviction and verdicts. .
நீக்குThanks for your comments and visits.
Ko.
ஹா... ஹா... நான் இதை எதிர்பார்த்தேன்...
பதிலளிநீக்குதனப்பால் , உண்மையை சொல்லுங்க... நீங்க இதை எதிர்பார்த்தீர்களா?
நீக்குவருகைக்கு மிக்க நன்றிகள்.
கோ
ஙே...நான ப்டியே ஷாக் ஆயிட்டேன் ...
பதிலளிநீக்குஅன்பே சிவம்.,
நீக்குநீங்க எப்போ வடிவேலாக மாறினீர்கள்?
நலம்தானே?
கோ
ஹஹஹஹ் எங்கள் யூகம் தவறாகிவிட்டது...எதிர்பார்த்த ஒன்று ஹிஹி
பதிலளிநீக்குஇது ஒரு வரலாறு சிறப்புமிக்க பின்னூட்டம் .
நீக்குஇன்றுதான் இந்திய வலைப்பதிவு வரலாற்றிலேயே முதன்முறையாக உங்கள் யூகம் தவறும் அளவிற்கு என் பதிவு அமைந்திருந்ததாக சொல்லிய உங்கள் பின்னூட்டம் தங்க பிரேம் போட்டு மாலை அணிவித்து பூசை செய்யவேண்டிய பின்னூட்டம் என்று மகிழும் தருவாயில் எதிர்பார்த்ததாக சொல்லி என் எதிர்பார்ப்பில் மண்ணை போட்டுவிட்ட பின்னூட்டம்.
வருகைக்கு மிக்க நன்றி.
கோ
இதெல்லாம் உங்க ஊரு தண்டனை! இந்தியாவின் படி பார்த்தால் அதிகமே!!
பதிலளிநீக்குஇது அதிகம்தான் , அதாவது ரொம்ப ஓவர்.
நீக்குகோ