பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 29 மார்ச், 2015

முரண்பாடுகள் !!

குழப்பம்

சனிக்கிழமை காலையிலிருந்தே வானம் கொஞ்சம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது,  ஆனால் மழை ஏதும் இல்லை.

ஆறு வயது மகன் தோட்டத்தில் விளையாடிகொண்டிருந்தான், சமையல் அறை சன்னல் வழியாக மகனை பார்ததவண்ணம் அம்மா சமையல் செய்ய   காய்கறிகளை நறுக்கிகொண்டிருந்தார்கள்.

அந்த நேரம் சிறுவனின் அப்பா தன் மனிவியிடம், " எனது இந்த மூன்று பேண்டு மூன்று சட்டைகளை துவைத்து விடு திங்கள்கிழமை நான் தேர்தல் வேலைக்காக திண்டுக்கல் போகவேண்டும்மூன்று நாட்கள் அங்கேயே தங்கவேண்டும், அப்படியே, தேவையான, டவல்,பனியன் சோப்பு, பேஸ்ட், பிரஷ் போன்றவற்றையும் எடுத்து  பயண பையில் வைத்துவிடு, நான் சலூன் வரை போய்வருகின்றேன் என கூறிவிட்டு,  தோட்டத்தில் விளையாடிகொண்டிருந்த மகனுக்கு டாட்டா சொல்லிவிட்டு வெளியில் சென்றுவிட்டார்.

மனைவியும் சமையல் வேலைகளை பாதியிலேயே  விட்டுவிட்டு  கணவன் கொடுத்துவிட்ட போன துணிகளை துவைத்து  தோட்டத்தில் காயபோட்டாள்.

Image result for pictures of drying clothes

பிறகு காற்று பலமாக வீசுவதால் தோட்டத்தில் இருந்த தன் மகனை வீட்டுக்குள் அழைத்துவந்து காற்றில் ஆடிய கதவுகளை அடைத்து மூடினாள். 

இதற்கிடையில் சலூனில் கூட்டம் நிரம்பி இருந்ததால் எதிர்பார்த்த நேரத்தைவிட கூடுதலாக சலூனில் காத்திருக்க வேண்டியதாயிருந்தது கணவருக்கு.

தனது முறை வந்தது, கணவன் அந்த சலூனின் சுழல் நாற்காலியில் அமர்ந்தார் " கட்டின் அண்ட் ஷேவிங்"

முடிவெட்ட ஆரம்பித்த சிறிது நேரத்தில் மடியின் கணம் தாங்காமல் மேக மூட்டை உடைந்து பெய்தது பேய்மழை.

பின்னர் ஷேவிங்.

 எல்லாம் முடிந்தும் கடையை விட்டு வெளிவர மழை அனுமதிக்கவில்லை.

வர நேரமாகும் என மனைவியிடம் சொல்ல தனது பேன்ட் பாக்கட்டில் மொபைல் எடுக்க கைவிட்டு துழாவினார், அப்போதுதான் நினைவுக்கு வந்தது, மொபைலை சார்ஜிங்ல் போட்டுட்டு வந்தது.

சரி மழை விடும்வரை இங்கேயே இருந்துவிட்டு போகலாம் என்று நினைத்து சலூனில் இருந்த ஒரு பத்திரிகையில் இருந்த செய்திகளை வாசித்துகொண்டிருக்க மழை கொஞ்சம் விட்டிருந்தது.

வீட்டிற்கு வந்த கணவன் மனைவியிடம் , பாத்ரூமில் சோப்பும் டவலும் எடுத்து வைக்கும்படி கூறினார். மனைவியும் எடுத்துவைத்துவிட்டு வந்தாள்.

குளித்து முடித்து வெளியில் வந்த கணவன், துணி துவைத்துவிட்டாயா என கேட்க்க  அப்போதுதான் நினைவுக்கு வந்தது மொட்டை மாடியில்  காயவைத்த துணிகளை  மழை வந்தபோது எடுக்க மறந்துபோன விஷயம்.

கணவனின் கேள்விக்கு பதில் சொல்லகூட நிற்காமல் அரக்க பறக்க தோட்டத்தில் சென்று நனைந்திருந்த துணிகளை தண்ணீர் சொட்ட சொட்ட  கொண்டுவந்ததை பார்த்த கணவனுக்கு கடுமையான கோபம் வந்தது.

மனைவியை கோபத்துடன் திட்டி துணிகளை ( பிடுங்கி) நன்றாக பிழிந்து  வீட்டின் உள்ளேயே தமது ட்ரெட்மில் (இப்போது பெரும்பான்மையான வீடுகளில் ட்ரெட்மில்கள் துணிகாயவைக்கத்தான் பயன்படுகின்றதாம்) மேல் பரப்பி காயவைத்துவிட்டு மீண்டும் மனைவியின் கவனக்குறைவை திட்டிக்கொண்டிருந்தார்.

திட்டு வாங்கிய மனைவி தனது கவனக்குறைவை நினைத்து வருத்தம் தெரிவித்துவிட்டு, விடுபட்ட சமையல் வேளையில் மும்முரமானாள்.

இத்தனையையும் பார்த்துகொண்டிருந்த அந்த சிறுவன் அம்மாவிடம் ஏன் உங்களை அப்பா திட்டுகிறார் என புரியாமல் கேட்க்க, அப்பாவின் துணிகள் மழை வரும்போது எடுக்காமல் விட்டுவிட்டேன் -  மழையில் நனைந்து விட்டது அதற்காகத்தான் அப்பா திட்டுகின்றார்.

ஆமாம் நீங்கள் தானே அதை முதலில் தண்ணீரில் நனைத்தீர்கள் பின்னர் மழையில் நனைந்துவிட்டது என சொல்கின்றீர்களே?

மகனுக்கு எப்படி புரியவைப்பது?

சொல்லுங்கம்மா....நீங்கள்தானே தண்ணீரில் நனைத்தீர்கள்?

அதாவது .. துணியில் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்ய தண்ணீரில் நனைத்து சோப்புபோட்டு , பிரஷ்கொண்டு தேய்த்து பின்னர் அன்றாக அலசி வெய்யிலில் காயவைக்கவேண்டும் அப்படி காய்ந்த துணிகளை தான் உடுத்தவேண்டும்.

மகனுக்கு ஏதும் புரியவில்லை.

அடுத்தநாள் ஞாயிற்றுக்கிழமை.

காலையில் சுமார் பதினோரு மணி இருக்கும்.

அப்பா தனது அறையில் நேற்று துவைத்து காயவைத்த தமது துணிகளை இஸ்திரி போட்டுகொண்டிருந்ததை  சிறுவன் எட்டிப்பார்த்தான்.

பார்த்த சிறுவனுக்கு , நேற்று அம்மா சொன்ன விளக்கமே இன்னும் புரியாத  நிலைமையில் இன்று அப்பா செய்வது மேலும் குழப்பத்தை உண்டுபண்ணியது.

அப்படி அவனது அப்பா என்னதான் செய்துகொண்டிருந்தார்?

நேற்று துணிகள் மழையில் நனைந்துவிட்டதற்க்காக அம்மாவை திட்டிய அப்பா இன்று அந்த  துணிகளை இஸ்திரி செய்யும் போது அவற்றின் மீது தண்ணீர் தெளித்து ...தண்ணீர் தெளித்து... இஸ்திரி செய்துகொண்டிருந்தார்.

Image result for picture of ironing clothes

என்ன இது துணிகளை அம்மாவே தண்ணீரில் நனைத்தார்கள் பின்னர் மழையில் நனைத்துவிட்டதாக அப்பா கோபப்பட்டார், இன்று அப்பவே ஏன் நீரில் நனைத்து இஸ்திரி செய்கின்றாரே?

என்ன நடக்கிறது என புரியாமல் இதைக்குறித்து அப்பா அம்மா இருவரிடமும் கேட்டு, அவர்கள் சொல்லும் விளக்கமும் தமக்கு கண்டிப்பாக புரியாது என்று எண்ணி இந்த குழப்பத்தை தனக்குள்ளாகவே புதைத்துக்கொண்டான்.

இந்த முரண்பாட்டால் சிறுவனுக்கு ஏற்பட்ட  குழப்பம் ஞாயமானதுதான் , ஆனால் செய்திதாளில் வந்த ஒரு செய்தியை நண்பரொருவர் என்னிடம் சொன்னது எனக்கு முற்றிலும் வேடிக்கையாக இருந்தது.

அதாவது "வட" நாட்டில் ஏதோ ஒரு அரசியல் தலைவர் ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்தாராம்.

அவரை ஜாமீனில் வெளிக்கொண்டுவர அவரது கட்சி தொண்டர்கள்  எவ்வளவோ  முயன்றும் ஜாமீன் கிடைக்காததால்,கடைசியாக தமது தலைவருக்கு இருக்கும் வியாதியை காரணம் காட்டி, அவருக்கு சிறையில் இருந்தால் தகுந்த சிகிச்சை அளிப்பது சிரமம், எனவே அவரை அவரின் வியாதியின் வீரியத்தை கருத்தில்கொண்டு ஜாமீன் வழங்கும்படி செய்த விண்ணப்பத்தை பரிசீலித்த நீதிபதிகள், அவர்கள் சொன்ன காரணத்தை, மருத்துவ அறிக்கையின்   அடிப்படையில், ஏற்று ஜாமீன் கொடுத்தார்களாம்.

தமது தலைவர் வெளிவந்த மகிழ்ச்சியில் மிதந்த தொண்டர்கள் அந்த மகிழ்ச்சியை மற்றவர்களோடு  சேர்ந்து  ஊரில் உள்ள அனைவருக்கும் "இனிப்புகள்" கொடுத்து கொண்டாடினார்களாம்.  

ஆமாம் இதில் என்ன முரண்பாடு இருக்கின்றது?

இனிப்புகள் கொடுத்து கொண்டாடி  மகிழும் அந்த தொண்டர்களின்  அன்பு தலைவருக்கு  ஜாமீன் கிடைக்க காரணமாயிருந்த வியாதி "சர்க்கரை நோயாம்"

மேல் இடத்து அரசியல் வியா(வா)தி சமாச்சாரம் எல்லாம் நமக்கு எதற்குங்க?

நாம துணியை நனைத்து காய வைத்து பின்னர் தண்ணீரில் நனைத்து இஸ்திரி போடறத மட்டும் பார்த்தா போதும்ங்க என நண்பரிடம் சொல்லிவிட்டேன். 

 என்ன நான் சொல்றது சரிதானே?

நன்றி. 

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ



6 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தனப்பால்,

      வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி. சிறுவனின் குழப்பம் தீர வழி ஒன்றை உங்க ஊருக்கு வந்திருக்கும் அவனின் அப்பாவிடம் சொல்லி அனுப்புங்கள் தனப்பால்.

      நட்புடன்

      கோ

      நீக்கு
  2. பதில்கள்
    1. மகேஸ்வரி,

      வருகைக்கும் பதிவினை பாராட்டியமைக்கும் மிக்க நன்றி.

      நட்புடன்

      கோ

      நீக்கு
  3. மகேஸ்வரி,

    வருகைக்கும் பதிவினை பாராட்டியமைக்கும் மிக்க நன்றி.

    நட்புடன்

    கோ

    பதிலளிநீக்கு