பின்பற்றுபவர்கள்

சனி, 14 மார்ச், 2015

காந்தி ரிடர்ன்ஸ்!!!

லண்டன் வரை பேசும் !

நமது தேச பிதா அண்ணல் மகாத்மா காந்திஜி அவர்கள் பிரிட்டிஷ் ஏகாதி பத்தியத்தில் அடிமைபட்டிருந்த    இந்திய திரு நாட்டின் சுதந்திரத்திற்காக போராட  கடந்த 1915 ஆம் ஆண்டு தென் ஆப்ப்ரிக்காவிலிருந்து பாரதம் திரும்பிய தினத்தின் நூறாவது ஆண்டை சிறப்பிக்கும் வகையில்,
வரலாற்று புகழ்மிக்க, பிரித்தானியாவின் நாடாளுமன்ற வளாகத்தில் சுமார் 9 அடி உயரத்தில் அருமையாக வடிவமைக்கப்பட்ட நமது தேச பிதா - பாபுஜி என்றழைக்கப்படும் அண்ணல் காந்திஜி அவர்களின் திருவுருவ வெண்கல சிலை இன்று நமது பாரத நிதி அமைச்சர் திரு அருண் ஜெட்லி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

View image on Twitter

இந்த மாபெரும் வர லாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியில் பேசிய பிரித்தானியாவின் பிரதமர் திரு டேவிட் கேமரூன் அவர்கள், மகாத்மாவிற்கு புகழாரம் சூட்டும் வகையில் "இங்கே எங்கள் நாட்டில் மகாத்தமா காந்தி அவர்களின் சிலையை நிறுவியதன் மூலம் அவர்களுக்கு நிரந்தரம்மாக ஒரு வீட்டை அளித்திருப்பதில் நாங்கள் பெருமை கொள்கின்றோம்.  ஒருவேளை காந்தி அவர்கள் இந்தியா தவிர வேறொரு நாட்டில் வாழ விரும்பி இருந்தால் அவர் கண்டிப்பாக எங்கள் நாட்டைதான் தேர்ந்தெடுத்திருப்பார், அவர் எங்கள் மீது வைத்திருந்த மரியாதையும் நாங்கள் அவர்மீது வைத்திருக்கும் மரியாதையும் பரஸ்பர அன்புமே அதற்க்கு காரணம் என்றும், இந்த சிலை உலகத்தின் மிக தொன்மையான ஜனநாயக நாட்டின் சிறப்பையும் மகாத்மாவின் போதனைகளையும் இந்த உலகத்துக்கு பறை சாற்றும் விதமாகவும் அமைந்ததில் நாங்கள் பெருமை கொள்கின்றோம் எனவும் மகாத்மா உலகின் தலை சிறந்த வரலாற்று நாயகர்களுள் ஒருவர் எனவும் கூறி மகாத்மாவிற்க்கு புகழாரம் சூட்டி இருக்கின்றார்.

மேலும் அவர் காந்திஜி அவர்களின் பொன்மொழிகளுள் ஒன்றான ,"உன்னை நீ யார் என்று அறிய சிறந்த வழி :மற்றவரின் நலனுக்காக உன்னை  நீ அர்ப்பணித்து பார் உன்னை யார் என்று உனக்கு தெரியும். அதேபோல உலகில்  நீ என்ன மாற்றங்கள் தேவை என்று விரும்புகின்றாயோ முதலில் நீ உன்னை மாற்றி கொள்  பின்னர் உலகில் நீ விரும்பும் மாற்றம் ஏற்படும்". என்பதையும் சொல்லி இந்த கூற்று காலம் கடந்து இன்றும் நமக்கு பாடமாக விளங்கும் ஒப்பற்ற பொன் மொழி என கூறி மேலும் காந்திஜியின் புகழ் மகுடத்தில் வைரம் பதித்தார்.

“‘The best way to find yourself is to lose yourself in the service of others’ and: ‘Be the change that you want to see in the world’ இந்த சிலையை திரு பிலிப் ஜாக்சன் எனும் சிற்பி , காந்திஜி அவர்கள் 1931 ஆம் ஆண்டு அன்றைய  பிரித்தானியாவின் பிரதமராக இருந்த ராம்சே மெக்டொனால்ட் அவர்களை சந்திக்க வந்திருந்தபோது எடுக்கப்பட்ட புகைபடத்தில் இருந்த காந்திஜியின் உருவத்தை  ஆதாரமாக கொண்டு அமைத்ததாக சொல்லபடுகின்றது.


இந்த வளாகத்தில் , அமெரிக்க கறுப்பின மக்களின் சமத்துவத்துக்காக குரல் கொடுத்த அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஆப்ரஹாம் லிங்கன் சிலையும், தென் ஆப்பரிக்க நிறவெறி எதிர்ப்புபோராட்டத்தில் தம்மை ஈடுபடுத்தி தமது வாழ்வின் பெரும்பகுதியினை சிறையில் கழித்து, பின்னர் அதே தென் ஆப்பரிக்காவின் முதல் கறுப்பின குடியரசு தலைவராக பொறுப்பு வகித்த  நெல்சன் மண்டேலாவின் திருவுருவ சிலையும், மகாத்மா காந்தியையும் அவரது சுதந்திர போராட்டத்தையும் அவமதித்த இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் சர்.வின்ஸ்டன் சர்ச்சிலின் திருஉருவ சிலையும் அமைந்திருக்கும் வளாகத்தில் "வெள்ளையனே வெளியேறு என்று அவனை நம் நாட்டை விட்டே வெளியேற்றி நமக்கு சுதந்திரம் வாங்கித்தந்த   நமது தேசபிதா அண்ணல் காந்தியின்  சிலையினை, பிரிட்டிஷ் அரசாங்கம் அமைத்திருப்பது நமக்கு பெருமையான விஷயம்தானே.

வாழ்க பாரதம்! ஓங்குக மகாத்மாவின் புகழ்!!.

ஜெய் ஹிந்த்.

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ.

(இந்தியாவின் மூட பழக்க வழக்கங்களுள் ஒன்றான "சதி" யை எதிர்த்து குரல்கொடுத்த "ராஜாராம் மோகன்ராய்" அவர்களுக்கும் இந்த இங்கிலாந்தில் மாபெரும்  சிலை இங்குள்ள புகழ்பெற்ற பல்கலை கழக வளாகத்தில் அமைந்திருக்கின்றது, அதை பற்றி பிறிதொரு நாளில் எழுதுகின்றேன்.)

10 கருத்துகள்:

 1. வணக்கம்
  சம்பவத்தை படிக்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது.. வாழ்க பாரதம்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ரூபன்,

   வருகைக்கு மிக்க நன்றி, வாருங்கள் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம்.

   நட்புடன்

   கோ

   நீக்கு
 2. நல்ல செய்தி. பரவாயில்லை. ஆங்கிலேயனாவது நம் தேச தந்தைக்கு மரியாதை அளிக்கின்றான் என்று கேட்ட்கும் போதே மனது சிலிர்கின்றது.
  சமீப காலமாக இந்தியாவில் சில சமூக விரோதிகள் காந்தி அவர்கள் தேச தந்தை என்று எங்கே எழுதி இருகின்றது என்று கீழ்த்தரமாக பேசினார்கள். இதில் காந்தியை சுட்டு கொன்றவருக்கு சிலை வேறு வைக்க வேண்டுமாம் . நெஞ்சு பொறுக்குதில்லையே ...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உலகில் எதுவெல்லாம் சிறந்ததோ அதை தமதாக்கி சொந்தம் பாராட்டுபவர்கள் வெள்ளையர்களே, இதிலிருந்து மகாத்மாவின் சிறப்பு எந்த அளவிற்கு உன்னதமானது என்பது இந்த உலகுக்கு நாளைக்கும் தெரியுமல்லவா?

   வருகைக்கும் தங்கள் ஆதங்க பகிர்வுக்கும் மிக்க நன்றி நண்பா.

   நட்புடன்

   கோ

   நீக்கு
 3. இங்கிலாந்தில் காந்திக்கு சிலை
  இந்தியாவிலோ கோட்சேவுக்க சிலை வைக்க முயற்சி
  வாழ்க இந்தியா

  பதிலளிநீக்கு
 4. வாழ்க பாரதம் ஓங்குக மகாத்மாவின் புகழ்
  ஜெய் ஹிந்த்.
  ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமைக்குறிய விடயம் காந்திஜிக்கு ஜே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு நன்றி நண்பா.

   காந்திஜீக்கு ஜே சொல்லும் கில்லர்ஜீக்கும் ஜே.

   நட்புடன்

   கோ

   நீக்கு
 5. திரு கரந்தையார் அவர்களுக்கு,

  நல்லது கெட்டது தெரிஞ்சவன் வெள்ளக்காரன்னு சொல்றது சரிதானோ?

  நட்புடன்

  கோ

  பதிலளிநீக்கு
 6. நண்பரே! முற்றத்து முல்லையின் அருமை தெரியாது என்பார்களே! அது இதுதானோ?! ம்ம்ம் இங்கு தேசத் தந்தை துரோகத் தந்தை போன்றுச் சித்தரிக்கபடுகின்றார் சில காலமாக. ஆனால் வெள்ளையரோ அவரை உலகத் தந்தையாக்கிவிட்டனர்.

  வாழ்க பாரதம்! வாழ்க தங்களது நாட்டுப் பற்று!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பிற்கினிய நண்பர்களே,

   முற்றத்து முல்லையை குற்றப்படுத்துவது மனதுக்கு மிகவும் சங்கடமாக இருக்கின்றது.

   மகாத்மாவின் புகழ் மணம் உலகெல்லாம் வீசும் வெள்ளை முல்லை.

   வருகைக்கு நன்றி

   நட்புடன்

   கோ

   நீக்கு