பின்பற்றுபவர்கள்

புதன், 11 மார்ச், 2015

கல்லூரி- கலைக்கூடம்

வாழ்த்து - நன்றி

உயர் கல்வி பயிற்றுவித்த எமது கல்லூரியின் நூற்றாண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு வெளியிடப்பட்ட விழா மலருக்காக எழுதப்பட்ட வாழ்த்துக் கவிதை:


முகில் உமிழ்ந்த நித்திலமாய்
விழுந்தேன் நான் உன் மடியில் - இரு
கரம் விரித்த சிப்பி உந்தன்
கருப்பையில் நான் வளர
வரம் கொடுத்தாய் கால் பதிக்க -உயர்
கல்விஎனும் பொன் படியில்.

பன்னிரெண்டாம் வகுப்புவரை
பட்டாளத்துக் கட்டுப்பாட்டில்
என்னிரெண்டு இமைகள்கூட - தானாய்
இயங்கிடவே தயங்கிடும் நல்
பாதிரிமார் பள்ளி வேதம் - என்
பாதைஎல்லாம் பாரிஜாதம்.

பள்ளி தந்த கல்வியாலே - ஞான
பாதை செல்ல கால் முளைத்தது
கல்லூரி உன் வளாகத்தில்  - நான்
கால்பதித்ததும் வால் முளைத்தது.

ஆகாயத்தின் கீழுள்ள 
அனைத்திற்கும் அதிபனென்ற
சாகாத மகிழ்ச்சிகொண்ட
ஏகாந்த காலமது - இனி
என்ன தவம் செய்திட்டாலும்
திரும்ப அது வருவதேது?

ஐந்தாண்டுகள் உன் நிழலில்
ஆசையுடன் தஞ்சம் பெற்றோம்
அக்கௌண்டன்சியும் காமர்சும்
அவ்வப்போது கொஞ்சம் கற்றோம்.

அதிர்ஷ்டங்களும் அவஸ்த்தைகளும்
அவ்வப்போது வந்ததுண்டு
புதிர்போல் பெற்ற பாஸ் மார்க்கும்
புரியாமல்போன அரியர்சும்தான்.

கலை கணிதம் வணிகவியல்
கருத்துடனே போதித் தாய் - நீ
விலைமதிப்பில்லாக் கல்வி
பாலூட்டிய பாதித் தாய்.

வரம் பெற்றிருந்தால் மட்டுமே -உன்
கரம்தவழும் நிலை வருமே - ஆல்
மரம் உந்தன் நிழல் அமர - எம்
மனமெல்லாம் சுகம் பெறுமே.

உன் மடியில் என்னோடு
ஒன்றிணைந்து கலைபயின்று - என்
கண்ணோடு கலந்து நிற்கும்
என்னினிய நண்பர்களை
எண்ணுகின்ற பலா காலம் - என் 
இதயமெல்லாம் விழா கோலம்.

ஆல்ப்ஸ் மலை முகட்டில் 
அகம் உருகும் பனிச்சிகரம்
பாரீசு நகர் மையம் 
பரவசிக்கும் ஈபில் கோபுரம்

பாராண்ட லண்டன் நகர் 
புரண்டோடும்  தேம்ஸ் நதி
பாரோனின் எகிப்து தேசம்
பாய்ந்தோடும் நையில் நதி

பாரத்ததின் தாஜ் மகால்
பகரேனின் பாலைவனம்
பராக்காவின் வெள்ளை நாட்டின்
பயமுறுத்தும் நயாகரா.

சிங்கப்பூரின் செண்டூசா,
சீனாவின் பெருஞ்சுவர்
சுவிட்சர்லாந்தின் மலையழகு
 சாய்ந்து நிற்கும் பீசா கோபுரம்

ஐநாவின் பெரும் சபைகள்
ஹை டெக் பிராங்க்பெர்ட்
கண்ணாடி கலை வடிவில் 
முன்னோடி பெல்ஜியம்

ஈராயிரம்   வருடத்தின்
ஈரமான நினைவுகளை
இதயத்தில் நன்கூரிக்கும்
இணை இல்லா மால்டா தீவு 

ஆம்ஸ்டர்டாம் எனுமந்த 
 எழிலார்ந்த ஏர்போர்ட்டு
எத்திசை திரும்பிடினும் - வண்ண
டூலிப்பெனும் மலர் கூட்டு

சாமானியர் இல்லை என்று
சரித்திரங்கள் புகழ்ந்துரைக்கும்
ரோமானிய கொலோசியம் -பார்க்க
ரோமமெல்லாம் சிலிர்த்தெழும்.

ஸ்காட்லாந்தின் மலை கோட்டை
வேல்சின் வினோத அருவி
இஸ்ரவேலின் செங்கடற்கரை
எருசலேமின் ஆலிவ் நிழல்

ஹாவர்ட்,எம் ஐ டி
ஆக்ஸ்போர்ட், கேம்ப்ரிட்ஜ்
வான் முட்டும் புகழ்மிக்க
வரலாற்று வளாகங்கள்

இத்தனையும்  கண்டபின்னும் -என் 
இதயத்து மலர்மொட்டு - மீண்டும்
கால் பதிக்க ஏங்கும் இடம் - கல்லூரி 
 'காப் ஹாலின்'  படிக்கட்டு.

காலத்தின் கண்டிப்பால்
உனை விடுத்து கரம் பிரிந்து
ஞாலத்தின் சுழற்சிதனில்
நான் கலந்து வாழ்வதனால்

நீ வேறு நான் வேறு
என்றாகி போய்விடுமா?

நானிலத்தில் நான் சிறக்க
ஆணிவேராய் நீ இருக்க 
நான் வேறு நீ வேறு 
நிலைக்குமா இந்த கூற்று?

வாழ்வோடு கலந்து என்றும்
வாழ்வாங்கு வாழும் உம்மை
தாழ்ந்து தலை வணங்குகின்றேன் -உன் புகழ்
வான் தழுவ வாழ்த்துகின்றேன்.

நன்றி!

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ.

எந்த கல்லூரி கண்டுபிடியுங்கள்....

8 கருத்துகள்:

 1. பதில்கள்

  1. தனப்பால்,

   ஏகாந்த காலத்தில் சஞ்சரித்தீர்கள் போல் தெரிகிறதே.

   நட்புடன்

   கோ

   நீக்கு
 2. அருமையான கவிதை....

  //ஆகாயத்தின் கீழுள்ள
  அனைத்திற்கும் அதிபனென்ற
  சாகாத மகிழ்ச்சிகொண்ட
  ஏகாந்த காலமது - இனி
  என்ன தவம் செய்திட்டாலும்
  திரும்ப அது வருவதேது?// ஆம்! நண்பரே! எல்லோரது உள்ளத்தையும் உள்ளங் கை நெல்லிக் கனி போல சொல்லிவிட்டீர்கள்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பிற்கினிய நண்பர்களே,

   வருகைக்கு மிக்க நன்றி,

   கல்லூரி காலங்களை கொஞ்சம் திரும்பிபார்க்கும் ஒரு சிறு நினைவு தூசி தட்டலே இந்த படைப்பு.

   எப்படி இருக்கின்றீர்கள்?

   நட்புடன்

   கோ

   நீக்கு
 3. என்னாது ...?
  //புதிர்போல் பெற்ற பாஸ் மார்க்கும்
  புரியாமல்போன அரியர்சும்தான்.//
  இது புத்சா இருக்கே ?

  நம்ம படிக்கும் போது
  புதிர்போல் பெற்ற அரியர்சும்
  புரியாமல்போன பாஸ் மார்க்கும் தான்.
  இப்படி தானே...

  நகைச்சுவைக்கும் அப்பால் ( Jokes apart) நண்பன் கோ படித்த அதே கல்லூரியில் அதே வருடத்தில் அதே வகுப்பில் அவர் அருகில் அமர்ந்து இளங்கலை முதுகலை படித்தானே .. அந்த நாட்கள் மீண்டும் வரும்.. ஆனால் வராது..
  இந்த கல்லூரி எந்த கல்லூரி என்று நான் சொல்ல கூடாது...அதனால் அந்த வாய்ப்பை மற்றவர்களுக்கு தருகின்றேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு மிக்க நன்றி நண்பா, 'wit'tu கொடுப்பதில் உனக்கு நிகர் நீதான்.


   கோ

   நீக்கு
 4. அருமை
  அருமை
  நண்பரா
  மறக்க முடியுமா கல்லூரிக் காலங்களை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. திரு கரந்தையார் அவர்களுக்கு,

   ஆமாம் எப்படி மறக்க முடியும்?

   நட்புடன்

   கோ

   நீக்கு