ஆதாம் ஏவாள் காலம்தொட்டு மனித சமூகம் தங்கள் தகவல்களை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள பரிபாஷைகள் அல்லது பரிவர்த்தனைக்கான ஏதோ ஒரு மொழியை கொண்டிருந்திருக்க வேண்டும்.
சில வாரங்களுக்கு முன் சில நாடுகளில் ஒரு குறிப்பிட்ட தினத்தன்று மக்கள் எல்லோரும் வீட்டைவிட்டு வெளியில் வந்து கை தட்டினார்கள், மருத்துவ முன்னணி வீரர்களையும் , துப்புரவு பணியாளர்களையும் மற்றும் காவல் கள அதிகாரிகளையும் கௌரவிக்கும் பொருட்டு.
வெள்ளையனிடம் அடிமை பட்டு கிடந்த காலங்களில்கூட இத்தகு ஊரடங்கும் வீட்டுக்குள் முடக்கமும் இருந்ததில்லை என அந்த காலத்து தங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் கீ(த்)தா க்களும் பல தாத்தாக்களும் சொல்ல கேட்டிருப்போம்.