பார்த்த சாரதியை தொடர்ந்து மேடைக்கு அழைக்கப்பட்டவர், முருகன்.
முன் பதிவில் சொன்னதுபோல், முருகன் நன்றாக பாடக்கூடியவர், இந்த ஆண்டு நடைபெற்ற பாட்டுபோட்டியில் கலந்துகொள்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டவர், எதிர்பாரா சூழ்நிலையால் அவர் கலந்துகொள்ளவில்லை.
"தி கேர் பிரீ பேர்ட்ஸ் " அதாங்க... "உல்லாச பறவைகள்" எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற இசைஞானி இளைய ராஜாவின் இசையமைப்பில் உருவான " ஜெர்மனியின் செந்தேன் மலரே" என பாட ஆரம்பித்தவர் அடுத்த வரிக்கு செல்லாமல் கொஞ்சம் நிறுத்தினார்.
ஆற்றில் துவங்கி அக்கம் பக்கத்து வீடுகள் முதல்அரக்கோணம்(!!!) வரை வியாபித்துவிட்ட இந்த பரபரப்பான, அதே சமயத்தில் பரிதாபமான சூழலில், அப்பாவின் நண்பர் கூறுவது உண்மையா?