நமக்கு யாரையாவது பிடித்திருந்தாலோ, அல்லது அவர்களை பற்றி யார் மூலமோ, பத்திரிகை, தொலைகாட்சி, ஊடகங்கள் மூலம் அறிந்திருந்தாலோ நமக்கு அவர்களோடு பேசவேண்டும் பழகவேண்டும் என்று வாஞ்சை மிகுந்திருக்கும்.
இனிப்பு என்ற சொல்லுக்கே நம் உமிழ்நீரை வழியவைக்கும் மகத்துவம் உண்டு, அதிலும் பண்டிகை காலங்களில் செய்யப்படும் விதவிதமான இனிப்புகளை நினைத்தாலே இனிக்கும் என்று ஜொள்ளவும் , அதாவது சொல்லவும் வேண்டுமோ?
தலைப்பில் உள்ள பொருளுக்கும் உபதலைப்பில் உள்ள கருத்திற்கும் ஏணி போட்டாகூட எட்டாத தூரத்திலுள்ள இந்த இரு துருவ சொற்கள் எப்படி இன்றைக்கு பதிவின் தலைப்புகளாயின என்ற கேள்வி எழுவது வாஸ்த்தவம்தான்.
சில தினங்களுக்கு முன் அலுவலகத்தில் ஒரு சுற்றறிக்கை சுற்றி வந்தது.
அதில் வருகிற 12 ஆம் தேதி, நீங்கள் விரும்பும் வண்ணம், வண்ண வண்ண ஆடைகளை அணிந்துகொண்டு அலுவலகம் வரலாம் என மகிழ்வூட்டும் வாசகத்தோடு துவங்கிய அந்த சுற்றறிக்கை போகப்போக வாசிப்பவர்களின் மனதில் ஒரு இறுக்கமான - உருக்கமான சோக செய்தியை படரவிட்டது.