பின்பற்றுபவர்கள்

வியாழன், 13 அக்டோபர், 2016

ஒரிஜினல்(??) முனியாண்டி விலாஸ்.

எச்சரிக்கை.!!!
நண்பர்களே,

சமீபத்தில் கவுண்டமணி அவர்கள் கதநாகயகனாக நடித்து ஒரு படம் வந்திருப்பதாக செய்தி அறிந்தேன்.  

அந்த படத்தை பார்க்கும் ஆவலைவிட அந்த நடிகரை மீண்டும் திரையில் காணவேண்டும் என்ற ஆவல் அதிகரித்ததால் அந்த படத்தை வலை தளத்தினூடாய் பார்த்தேன்.

அந்த படத்தின் பெயர்    "எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது" .

திரைப்படத்தை பற்றி கருத்தோ விமர்சனமோ நான் செய்வதில்லை என்றபோதிலும் இது போன்று நம்மிடையே பல காலம் பரீட்சியமான பிரபலங்களை ஒரு முறையேனும் மீண்டும் திரையிலோ அல்லது தொலை காட்சி நிகழ்ச்சிகளிலோ, மேடைகளிலோ பார்க்கவேண்டும் என்ற எனது விருப்பம் இந்த திரைப்படம் மூலம் நிறைவேறியதை எண்ணி மகிழ்ந்தேன் என்ற செய்தியை உங்களோடு பகிர்ந்துகொள்ளவே இதனை எழுதுகின்றேன்.

படத்தின் தலைப்பிற்கேற்ப  அவரின் பாணியில் நடிக்க வேறு யாராலும் முடியாது என்பதும் உண்மையே.

ஊரில் பல இடங்களில் "ஒரிஜினல் முனியாண்டி விலாஸ்" என்று எழுதப்பட்ட பெயர்பலகைகளை தாங்கிய உணவு விடுதிகளை பார்த்திருப்போம், அவற்றில் எது உண்மையான "ஒரிஜினல்" என்று கண்டு பிடிக்க முடியாமல் போவதை தவிர்க்க முடியாமல் போவதுண்டு.

ஆனால் நடிகர் கவுண்ட மணியை சாடை மாடையாக பிரதிபலிக்க நினைக்கும் பல மிமிக்கிரி கலைஞர்களுக்கு, நீங்கள் என்னதான் செய்தாலும் என்னைப்போல உங்களால் ஒரு ஐந்து சதவீதம் கூட ஒத்துப்போகும் உடல் மொழியையோ, வசன உச்சரிப்பையோ, வெடுக்கென பதிலுரைக்கும் திறமையையோ கொண்டிருக்க முடியாது என எச்சரிக்கை செய்வது போன்று இந்த படத்தின் தலைப்பு அமைந்திருக்குப்பது நூறு  சதவீதம் பொருந்தி இருப்பதாக நான் கருதுகிறேன்.

எனது முந்தைய பதிவிலும்கூட நடிகர் திரு.ஜனகராஜ் (கோண(ல்)வாய்  கோலிவுட்!!) குறித்த நினைவுகளையும் அவர் மீண்டும் ஒரு முறையேனும் திரையில் தோன்றி நம்மை சந்திக்க வரவேண்டும் என்ற ஆவலை வெளி படுத்தி இருந்தேன் என்பதை உங்களில் சிலர் அறிந்திருக்க கூடும்.

இது போன்று பழைய அல்லது நெடுங்காலம் தலை காட்டாத நடிகர் நடிகைகளை மீண்டும் மீட்டெடுத்து வெகு ஜன மக்களின்  பார்வைக்கு பந்தி  படைக்கும் படைப்பாளிகளையும் திரை பட தயாரிப்பாளர்களையும் நான் வெகுவாக பாராட்டி மகிழ்கின்றேன்.

நடிகர்,  கொஞ்சம் இளைத்திருந்தாலும் நம்மை மகிழ்விக்க கொஞ்சமும் சளைக்கவில்லை.  அவர் இன்னும் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட நெடிய காலம் சுகமுடன் வாழ என் வாழ்த்துக்களை உங்கள் சார்பாகவும் தெரிவித்து மகிழ்கிறேன்.

சுத்த சைவமான அந்த நடிகரை குறித்த   பதிவின் தலைப்பு  ஏன் இத்தனை கொலைவெறியோடு(!!).... என்று நினைப்பவர்களுக்கு:

இல்லாததை இருப்பது போலவும் இருப்பதை   பறப்பது போன்று மிகைப்படுத்தி காட்டுவதுதானே  திரைப்படம் அதனால்தான் சைவமான நடிகரை குறித்த பதிவின் தலைப்பு இப்படி. (எப்படி.....?)


நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ

6 கருத்துகள்:

 1. கவுண்டமணி மீண்டும் நடித்திருக்கும் படம் பற்றி நானும் செய்திகள் பார்த்தேன். படம் பார்க்கவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வெங்கட்,

   ஒருமுறை பார்க்கும்படியாகத்தான் உள்ளது கவுண்டரின் மீள்வருகை சொல்லும் படம்.

   கோ

   நீக்கு
 2. நல்லாவே அலசி இருக்கின்றீர்கள் நண்பரே நானும் அவரைப்பற்றிய ஒரு குறிப்போடு ஒரு பதிவு ட்ராப்டில் வைத்து இருக்கின்றேன் விரைவில் வரும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு நன்றி நண்பரே, விரைவில் வர இருக்கும் உங்கள் பதிவிற்காக காத்திருக்கிறேன்.

   கோ

   நீக்கு
 3. goundamani is the best comedian... santhanam satish karunakaran more or less copy his style...
  however vadivelu is the best comedian than goundamani....

  பதிலளிநீக்கு
 4. Hello,

  Thanks for your comments.

  Vadivelu can be compared to, even, Nagesh the legend.

  ko

  பதிலளிநீக்கு